செவ்வாய், 2 செப்டம்பர், 2014

திசையறிவிக்கும் மரம்.

மரம்
முற்றிவிட்டது
துளிர்விட்டுக்கொண்டும்..

******************************
மொட்டை மரங்களும்
அழகிய நிர்வாணத்தோடு
திசையறிவித்தபடி.

******************************


வீழ்த்தப்பட்டபின்னும்
மரக்கிளைகள் வேர்பிடித்து
வேறொருவம்ச ஆணிவேராய்..


**********************************

மரக்குளத்தில்
அலையெழுப்புகின்றன
பறவைக் குரல்கள்..

*********************************
 
நீர் கிடைத்த கிளைகள்
விரிகின்றன பசுந்தோகையாய்..
கிடைக்காதவை கிண்ணிக் கோழியாய்.

டிஸ்கி :- இந்தக் கவிதைகள் மே 4, 2014 திண்ணையில் வெளிவந்தவை. 

3 கருத்துகள் :

Yarlpavanan Kasirajalingam சொன்னது…

சிறந்த பா வரிகள்
தொடருங்கள்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி யாழ் பாவண்ணன் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...