எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 11 செப்டம்பர், 2014

தேன் பாடல்கள் 180. மார்கழியும் மல்லிகையும்

171. நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா.
காதலிக்க நேரமில்லை படத்தில் முத்துராமனும் காஞ்சனாவும், ராஜஸ்ரீயும் ரவிச்சந்திரனும் ( விசிலில் )  பாடும்பாடல். ஒன்று பி பி ஸ்ரீனிவாஸ் குரல் என்று நினைக்கிறேன். எல் ஆர் ஈஸ்வரியின் குரலும் மிக அருமையாக இருக்கும். ஏதோ அணைக்கட்டின் பூங்காவில் படமாக்கப்பட்டிருக்கும் விதம் அருமை. இளமையான, துள்ளலான ஹீரோஸ் & ஹீரோயின்ஸ்.

172. மார்கழித் திங்கள் அல்லவா..
சங்கமம் படத்தில் விந்தியாவும் ரஹ்மானும் நடித்த பாடல் காட்சி. கிராமிய நடனக் கலைஞனான ரஹ்மானும் பரத நாட்டியக் கலைஞியான விந்தியாவும் காதலிப்பார்கள். திருமணம் செய்து கொள்ள அப்பா விஜயகுமார் தடை விதித்திருப்பார். அதனால் இந்தப் பாடல் காட்சியில் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு விட்டு நடனமாடுவார் விந்தியா. மனதைத் தொடும் வரிகள்.

173. அந்தி மழை பொழிகிறது.
பள்ளி செல்லும் பதின் பருவத்தில் கேட்ட பாடல். பித்துப் பிடிக்காத குறைதான். வாஹ் வாஹ் வாஹ் வஹ்ஹாஹா என்று ஹம்மிங்கோடும் ம்யூசிக்கோடும் பாடிய பாடல். கண் தெரியாத ராஜபார்வைக்கார கமல் , காந்தக் கண்ணழகி மாதவியைக் காதலிக்கும் பாடல். /// ஈவினிங் ரெயின் ஷவரிங். இட்ஸ் ஒன் ஒன் ட்ராப்ஸிலும் யுவர் ஃபேஸ் ஸீயிங்ங்ங்ங் /// என்று என் அக்கா ரேவ் பாடுவாள்.

174. ஏண்டி சூடாமணி ..
சிம்ரனும் கமலும் நடித்த பம்மல் கே சம்பந்தம் படப்பாடல். ஏண்டி சூடாமணி காதல் வலியைப் பார்த்ததுண்டோடி. என்று இசையோடு கேட்கும் சமயம் வயிற்றைப் பிசைவது போன்றும் நெஞ்சைப் பிழிவது போன்றும் சோகம் உண்டாகும். 


175. கண்மணி அன்போடு காதலன்
குணாவில் கமல் பாடும் பாடல். என்று கேட்டாலும் பிடிக்கும். // மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல. அதையும் தாண்டிப் புனிதமானது.// என்ற வரிகள் அற்புதம். மானே தேனே போட்டுக்கணுமா என்று கேட்கும் இடங்கள் புன்னகையை வரவழைக்கும். அந்த மலைக் குகை இருட்டும். லேசாகப் பிளந்த இரு பாறைகளுக்கிடையேயான இடை வெளியில் கமல் கால் பாவிக் குதித்து ஆடுவது திகிலான அற்புதம். கொடைக்கானல் சென்ற போது இந்தக் ( குணா கேவ்) குகைக்குள் போக முடியாமல் போய்விட்டது. அபாயகரமான குகை என்று கைட் தடுத்து விட்டார்.



176. மல்லிகை என் மன்னன்மயங்கும்
தீர்க்க சுமங்கலி  என்ற படம் என்று நினைக்கிறேன். வாணி ஜெயராம் குரலும் கே ஆர் விஜயாம்மாவின் நடிப்பும் ஏ க்ளாஸ். அடிக்கடி முணுமுணுக்கும் பாடல். என் அம்மாவுக்கும் பிடித்த பாடல். அப்பவே அம்மா வாணி ஜெயராம் குரலுக்கு அடிமை.

177. ராதையின் நெஞ்சமே.
பி. சுசீலா பாடிய பாடல். வசந்த காலத் தேரில் ஏறி வாழ்த்துக் கூறும் தென்றலே எனப் பாடல் முழுதும் ஒரு மாதிரி மெல்லிய வசந்த உற்சவம்தான். படம் கனிமுத்துப் பாப்பா

178. தூக்கணாங்குருவிக்கூடு
இந்தப் பாடலை என் அம்மா நன்கு பாடுவார்கள். ரொம்ப லயித்துக் கேட்ட பாட்டு. // ஒரு குத்து விளக்கை ஏத்தி வச்சு கோலத்தைப் போட்டு ஆற அமர மச்சானைப் பார்த்துப் படிக்கணும் ஒரு பாட்டு. ஆனானப்பட்ட ராசா கூட மயங்கணும் அதக் கேட்டு.. அத விட்டு..///என்ற வரிகளும் /// அம்மான் வீட்டுப் பெண்ணானாலும் சும்மா சும்மா கிடைக்குமா,, பரிசப் பணத்தைக் கொடுத்துப் போட்டுக் காத்துக்கிடக்க வேணாமா, ///என்ற வரிகளும் பிடிக்கும்.வானம்பாடியில் சுசீலா பாடியது.

179. உன்னை ஒன்று கேட்பேன் .. உண்மைசொல்ல வேண்டும்.
சரோஜாதேவி பாட சிவாஜியும் இசைக்கும் பாடல். ஜோடிப் பொருத்தத்துக்கும் காட்சிப் பொருத்தத்துக்கும் கேட்க வேண்டுமா என்ன..? புதிய பறவை படம்.

180.அன்பு மனம் கனிந்த பின்னேஅச்சம் தேவையா
ஆளுக்கொரு வீடு படத்தின் பெயர். சத்யனும் விஜயலெக்ஷ்மியும் பாடும் பாடல். மிக அருமையான பாட்டு. ///அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா./// எனக்குப் பிடித்த பி பி ஸ்ரீனிவாஸ் குரலில் மென்மை.

  டிஸ்கி:- இவற்றையும் கேளுங்க. :)

1. தேன் பாடல்கள் .. அழகும் அழகும்.  

2. தேன் பாடல்கள். எனக்காகவும் உனக்காகவும்.

3. தேன் பாடல்கள். தனிமையும் காதலும்.

4. தேன் பாடல்கள் . ரோஜாவும் தேனும்

5. தேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்

6. தேன் பாடல்கள். நிலவும் மயிலும். 

7. தேன் பாடல்கள். காற்றும் காதலும்.  

8. தேன் பாடல்கள். ஆசையும் ஆட்டமும்.    

9. தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆற்றங்கரை மரமும்.

10. தேன் பாடல்கள் தலைவர்களும் தலைவியும் கெமிஸ்ட்ரியும்.

11. தேன் பாடல்கள். மழையும் பூச்சரமும்.  

12. தேன் பாடல்கள். தேடலும் துடிப்பும்.  

13. தேன் பாடல்கள். கண்ணழகும் கண்ணனும்.

14. தேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.  

15. தேன் பாடல்கள். யமுனையும் ஓடமும்.  

16. தேன் பாடல்கள். மாயனும் முருகனும்.

17. தேன் பாடல்கள். ஆயர்பாடியும் ஆலய மணியும். 

18. தேன் பாடல்கள். மார்கழியும் மல்லிகையும். 

19. தேன் பாடல்கள். அன்பும் அழகனும்.    

20.  தேன் பாடல்கள். காதலும் மயக்கமும்.

21. தேன் பாடல்கள். மாலையும் மலரும்.

22. தேன் பாடல்கள். நாணமும் தவிப்பும்.

23. தேன் பாடல்கள். பாசமும் பிரிவும். ( ரொமான்ஸ் வெள்ளி )

24. தேனே உனை நான் தேடியலைந்தேனே.

25. தேன் பாடல்கள். பொன்வீதியில் மானும் முயலும் மயிலும்.



9 கருத்துகள்:

  1. எல்லாமே இனிய, புகழ் பெற்ற பாடல்கள்!! இவற்றில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் :

    [1] ராதையின் நெஞ்சமே:. இது புகழ் பெற்ற 'கில்தே ஹை' என்ற ஹிந்திப்பாடலின் இசையின் தமிழாக்கம். ஆனால் ஒரு சின்ன திருத்தம். பாடியது பி.சுசீலா.

    [2] மல்லிகை என் மன்னன்: இது வாணியின் குரலுக்காவும் காட்சி அமைப்பிற்காகவும் மிகவும் புகழடைந்த பாட்டு.

    [3] அன்பு மனம் அறிந்த: சுசீலாவும் பி.பி.ஸ்ரீனிவாஸும் அருமையாக பாடியிருப்பார்கள்.

    [4]உன்னை ஒன்று கேட்பேன்: சரோஜாதேவியின் அழகு, சிவாஜியின் நடிப்பு, இசையின் சிறப்பு, பாடல் வரிகள், என்று ஒன்றுக்கொன்று போட்டியிடும் இந்தப்பாடலில்!! இன்றைக்கும் மனதை அப்படியே வருடிச்செல்லும் பாட்டு!

    இன்னொரு திருத்தம். வானம்பாடியில் தூக்கணாங்குருவிக்கூடு, திரையில் தேவிகா பாட, பின்னணியில் சுசீலா பாடும் பாடல்.

    பதிலளிநீக்கு
  2. திருத்தி விட்டேன் மனோ மேடம். மிக்க நன்றி சுட்டியமைக்கு :)

    பதிலளிநீக்கு
  3. hai
    http://cinema.dinamalar.com/cinema-news/21782/special-report/Cricket-fever-in-tamil-cinema.htm

    பதிலளிநீக்கு
  4. அருமையான தொகுப்பு. பத்தில் பல பாடல்கள் எனக்கும் பிடித்தவை.

    பதிலளிநீக்கு
  5. எல்லா பாடல்களும் எனக்கும் படித்தவை.

    பதிலளிநீக்கு
  6. Nandri Mano Mam

    Nandri Ravi. iNaippu parthen

    Nandri Yarlpavannan sago

    Nandri Venkat

    Nandri KGG sir

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  8. கோப்பை வென்றது சானியா ஜோடி

    டோக்கியோ: ஜப்பானில் பெண்களுக்கான டோக்கியோ ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சானியா ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி... #டென்னிஸ் #சானியா #ஜோடி #கோப்பை ...

    மேலும் படிக்க : http://sports.dinamalar.com/2014/09/1411231115/saniatennisindia.html

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...