செவ்வாய், 4 ஜூன், 2013

மன்னிக்கப்படுதல்.

மன்னிக்கப்படுதல்:-
****************************
மன்னிக்கப்படவேண்டுமென
நீங்கள் விரும்பும் போதெல்லாம்
மன்னிக்கத் தயாராகிறீர்கள்.
ஏன் பெற்றாளென தாய்மீதும்
இன்பக் கழிவென
கருப்பையுள் வீசிய
தகப்பன் மீதும்
மீதூறுகிறது கோபம்.
உங்களுடன் பயணித்த
அனைவரும் ஜனித்த அன்றே
வீடுபேறடைய
நீங்கள் வீடு., பேறு.,
எல்லாம் பெற்றும்
வீடுபேற்றுக்காகக்
காத்திருக்கிறீர்கள்.
வெஞ்சினத்தில்
வெஞ்சனம் எல்லாம்
சுவரேறும்போது
ஏனிந்த வாழ்க்கைத் துணையோடு
இணைத்தீர்களென
குமுறுகிறீர்கள்
பெற்றோர் பார்த்து.
சொல்பேச்சுக் கேளா
பிள்ளைகள் கண்முன்
நீங்கள் காளியாகவோ
கருக்கருவாள் கருப்பராகவோ
தென்படத் துவங்கும்போது.,
எச்சரிக்கைமணி அடிக்கிறார்கள்.,
நீங்கள் வேறு.,
உங்கள் வம்சம் வேறு.,
உங்கள் ரத்தம் வேறு
அல்லவென்று.
மனிதக்கண் கண்ணாடிகளில்
சுயப்ரதஷணம் செய்யும்போது
உணர்கிறீர்கள் உங்கள்
முதுகிலும் ஒட்டடையை.
மன்னிப்புக் கேட்கவேண்டுமென
நினைத்து வெட்கி
மன்னிக்கத் துவங்குகிறீர்கள்.


4 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// உணர்கிறீர்கள் உங்கள்
முதுகிலும் ஒட்டடையை ///

முன்பே உணர்ந்தால்...?

Manavalan A. சொன்னது…

மன்னிக்கத் துவங்குகிறீர்கள்.
மனதிலிருந்த மடைகளைத் திறந்து.- Periya ullam iruppavargal thaan mannithu vida ninaipargal. Avargal mannippu ketka vendum entru kooda ethirparpathu illai perumpaalum.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மணவாளன்

நன்றி தனபாலன்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...