எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

வியாழன், 1 செப்டம்பர், 2011

YOU R SO SWEET.. இனிப்பான மக்களுக்கு ஒரு சேதி.. டாக்டர் அஞ்சனா.
YOU R SO SWEET .. அப்பிடின்னு சிலர் புகழ கேட்டிருப்பீங்க.. இது பாராட்டுக்காக சும்மா சொல்றது.. அதென்னங்க ஸ்வீட்.. நிஜமாவே இனிப்பு அதிகமானா அதுக்கு பேர் டயபடிக் என்கிற சர்க்கரை வியாதி. நீரிழிவு நோய்னும் சொல்றாங்க. தற்காலத்துல நிறைய பேர் இதனால பாதிக்கப்பட்டிருக்கிறதால இது பத்தி விழிப்புணர்வு தரும்படி டாக்டர் மோகன் டயபடிக் ஸ்பெஷல் சென்டரைச் சேர்ந்த டாக்டர் அஞ்சனாவிடம் நம் லேடீஸ் ஸ்பெஷல் வாசகியருக்காக ஸ்பெஷலா ஒரு பேட்டி கேட்டேன். . டாக்டர் அஞ்சனா சொன்னவைகளைத் தொகுத்துள்ளேன்..சர்க்கரை வியாதி., நீரிழிவு., டயபடிக்னு சொல்லப்படுற இந்த வியாதி ரத்தத்தில் சர்க்கரை அளவு ஜாஸ்தி்யா இருக்குறத குறிக்குது. இதுல பல டைப்புகள் இருக்கின்றன.

1. டைப் 2 இதுதான் தற்காலத்துல நிறைய பேருக்கு இருப்பது. 95 % இதுதான் பாதிப்பு ஏற்படுத்துது.

2. டைப் 1 இது குழந்தைகளுக்கு இருப்பது. இது ஒரு 2 % இருக்கு.


3. கர்ப்பகாலத்தின் போது மட்டும் ஏற்படுவது இது 0.5 % இருக்கு. இதுக்கு GDM ன்னு பேர். ( GESTATIONAL DIABETES MELLITUS ) . மற்றதெல்லாம் 2.5 சதவிகிதம் இருக்கு.

மெயின் டைப் 2 என்பது முன்பு எல்லாம் 50 ,60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் வந்தது. பின் அடுத்த ஜெனரேஷனில் 40 வயதிலேயே வந்துவிட்டது. இந்த ஜெனரேஷனில் அது 25 லிருந்து 30 வயதுக்குள்ளேயே வருகிறது. யூத்திலேயே வருகிறது.

ஏனெனில் ஏசியன் இந்தியன்ஸ்க்கு சர்க்கரை வியாதி அதிகரிக்க ரிஸ்க் அதிகம் இருக்கு. நம் தாத்தா பாட்டி காலத்தில் 50., 60 வயதில் வந்தது இப்போவே வருதுன்னா அது லைஃப் ஸ்டைல் ரிலேட்டடா இருக்கு. நம் லைஃப் ஸ்டைலை மாத்துவதால் உண்டாகிறது.

இதுக்கு காரணம்


1. உணவுப்பழக்கம் .,


2. உடற்பயிற்சி இன்மை.,


3. ஸ்ட்ரெஸ்., டென்ஷன்.
இதுதான் பெரும்பகுதி காரணம். இது குழந்தைகள் மற்றும் யங் அடல்ட்ஸுக்கு வருதுன்னா அதுக்கு ஓவர் வெயிட் மற்றும் ஓபீஸ் எனப்படும் உடற்பருமன் காரணம். ஜங் புட் எடுக்குறது., கோக் குடிக்கிறது. ( எங்கே பார்த்தாலும் ரெடிமேட் ஃபுட்ஸ் சாப்பிடுறது .. கே எஃப் சி., டொமினிக்., பிஸா ஹட்., பர்கர்., ஐஸ்கிரிம்ஸ்., சாக்லெட்ஸ்., கேக்ஸ் போன்ற உணவுகள்) .

ஹை கலோரி உணவு எடுத்துக் கொள்ளும் அளவு உடற்பயிற்சி செய்வதில்லை.. வீட்டுக்குள் வந்தவுடன் டி வியை போட்டு சோஃபாவில் அமர்ந்து அதிக கலோரி உள்ள உணவுகளை உண்பதால் அந்த ஃபாட் பூரா உள்ளேயே தங்கி விடுகிறது. ந்யூட்ரீஷனல் வால்யூ அதிகம் உள்ள உணவினால் ஃபாட் அதிகமா உடம்பில் சேருது. கோக் பெப்சியால் சுகர்தான் சேருது. வேறு ஒன்றும் இதில் இல்லை.

நம்ம ட்ரெடிஷனல் உணவில் அரிசி சாதம்., பருப்பு., கீரை., காய்., கூட்டு., பொரியல்னு தேவையான சத்துக்கள் இருக்கின்றன. இதை சாப்பிட்டு வெயிட் ஏறவுமில்லை. தேவையான சத்துக்களும் கிடைத்தது. இந்த மாடர்ன் உணவுகளின் அவைலபிலிட்டி மற்றும் அஃபோர்டபிலிட்டியால் இந்த பருமன் நிலை.

இது தவறான உணவினால் ஏற்படுது. ஹை கலோரி ஃபுட்., மற்றும் உடற்பயிற்சி செய்வதே இல்லை. முன்பு பெண்களுக்கும் அம்மி., ஆட்டுக்கல்., கிணற்றில் தண்ணீர் இறைப்பது ,வீட்டு வேலை செய்வது போன்றவை உடற்பயிற்சியா இருந்தன. இப்போ எல்லாம் மெஷினைஸ்ட். ஒர்க் மற்றும் மெஷினைஸ்ட் ட்ரான்ஸ்போர்ட். ஆண்களும் நடப்பதே இல்லை. சைக்கிள் என்பதே குறைந்து விட்டது. எல்லாரும் டூவீலர் அல்லது 4 வீலர்தான். படி ஏறி இறங்குவது இல்லை. லிஃப்ட்தான்.

இப்போ ரீசண்ட் ஸ்டடி என்ன சொல்கிறது என்றால் ( இண்டியா டயபடிக் ஸ்டடி) INDIAB -- நம் தேசம் முழுவதும் 86 % மக்களுக்கு பிசிக்கல் ஆக்டிவிட்டியே கிடையாது. 14 சதவிகிதம் மக்கள்தான் உடல் உழைப்பில் ஈடுபடுகிறார்கள். எனவே அதிக கலோரி உணவு ., ஆனால் எனர்ஜி அவுட் என்பது சீரோ., எனவே ஓவர் வெயிட். ஓபிசிட்டி., எல்லாம்.

சிலர் ஒல்லியா இருப்பாங்க ஆனால் தொப்பை இருக்கும். இவங்களுக்கு சுகர் இல்லைன்னு சொல்ல முடியாது. . இண்ட்ரா ஃபாட் எனப்படுவதுதான் ரொம்ப (INTRA ABDOMINAL FAT) ஜாஸ்தி ஆகி வெயிட் இன்க்ரீஸ் ஆகி டயபடிக் வரலாம்.

இதை தீர்மானிப்பது ஃபாமிலி ஹிஸ்டரி. அப்பா அம்மாவுக்கு இருக்கலாம். அது பிள்ளைகளுக்கு வரும். ரெண்டாவது வயதாவதால் வரும். மூன்று அதிக எடையால் வரும். நாலாவதா உடல் உழைப்பு இல்லாததால வரும். ஐந்தாவதா டென்ஷன்., வேலை ஸ்ட்ரெஸினால் வரும்.

இதிலிருந்து எப்படித் தற்காப்பது. ?


1. நல்ல சத்துணவா சாப்பிடுங்க.


2. சரியான உடல் உழைப்பு மற்றும்


3. உடற்பயிற்சி.. வாக்கிங்க் மாதிரி., அப்புறம்


4. எடைக்குறைப்பு.


5. ஸ்ட்ரெஸ் டென்ஷனைக் குறைக்கவேண்டும்.


6. ரெகுலர் ஸ்க்ரீனிங் செய்யவேண்டும்.


7. ரெகுலர் ப்ளட் செக்கப் செய்யவேண்டும்.

இது சரியா கவனிக்கப்படலைன்னா கண்கள். இதயம்., நரம்பு., சிறுநீரகங்கள்., கால் ஆகியவற்றைப் பாதிக்கும். ஹை ரிஸ்க் காம்ளிகேஷன்ஸத் தருது. உரிய நேரத்தில் வந்தால் தடுத்து விடலாம்.

50 சதவிகிதம் பேர் சிம்டம்ஸ்எதுவும் தெரியாம வருவதில்லை. இதன் அறிகுறிகள் என்னன்னா


1. அதிக தாகம்.,


2. அதிகமா சிறுநீர் கழிப்பது.,


3. அதிக பசி.,


4. எடை குறைதல்.,


5. ரொம்ப களைப்பாக உணருதல்.,


6. வீக்காக இருத்தல்.,


7. மறைவிடங்களில் அரிப்பு ஏற்படுதல். இது எல்லாம் இருக்கும். ப்ளட் டெஸ்ட் மூலமும். ரெகுலர் ஸ்கிரீனிங் மூலமும் கண்டு பிடித்து ட்ரீட்மெண்ட் எடுத்துக்கணும்.

ட்ரீட்மெண்ட்ன்னு எடுத்தா டயட்டை கம்ளீட்டா மாத்தணும். வாழ்க்கை முறையை மாத்தணும்.உடற்பயிற்சி., வாக்கிங்க இருக்கணும். இன்சுலின் கூடினா. , கு்றைந்தா டாப்லெட்ஸ் அல்லது ஊசி எடுத்துக்கணும் டாக்டர் அறிவுரைப்படி. ரெகுலர் ஸ்க்ரீனிங்க் மற்றும் மானிட்டரிங் மூலம் சரிப்படுத்தலாம்.

பேஷண்ட்ஸ்டோட ஒத்துழைப்பு முக்கியம். எம்பவர்மெண்ட் ஆஃப் பேஷண்ட்ஸ். என்னன்னா இது பற்றிய கல்வி ., விழிப்புணர்வு தேவை. இதை எப்படி கண்ட்ரோல் செய்வது என்றும் அறியவேண்டும். சுகர் டாப்லெட்ஸ் போட்டுக்கலாம் என கண்ட்ரோல் இல்லாமல் சாப்பிடக் கூடாது இனிப்பு வகைகள் ஜூஸ் போன்றவைகளை. பேஷண்ட்ஸ் முழுதா ஒத்துழைத்தால்தான் இந்த நோயின் தீவிரத்தை கட்டுக்குள் வைக்க முடியும்.

எனவே இனிப்பான மக்களே கொஞ்சம் கண்ட்ரோலா இருந்து உங்க ஹெல்த்தை ஃபிட்டா வைச்சுக்குங்க.

டிஸ்கி:- டாக்டர் அஞ்சனாவிடம் நான் பேட்டி எடுத்த இந்த மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரை ஜூலை மாத லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்துள்ளது.:)

11 கருத்துகள்:

 1. எனக்கு இது மிகவும் அவசியமான பதிவு தான், ஏனெனில் நான் மிகவும் இனிமையானவன். நான் மட்டுமல்ல என் மனைவியும் கூட. நன்றி vgk

  பதிலளிநீக்கு
 2. தேனம்மை மேடம், டாக்டர் ரஞ்சனாவா... டாக்டர் அஞ்சனாவா... இரண்டு பெயர்கள் வந்துள்ளதே.

  பதிலளிநீக்கு
 3. மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரை -பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. பயனுள்ள தகவல்களைப் பெற்றுத் தந்திருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 5. அருமையான தகவல்களை தந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. டாக்டர் தேனக்கா வாழ்க :-)

  அவசியமான பதிவு :-)

  பதிலளிநீக்கு
 7. நல்ல பகிர்வு,டயபபடிஸ் பற்றி நிறைய செய்திகள் தெரிஞ்சிகிட்டேன்.

  பதிலளிநீக்கு
 8. நன்றி கோபால் சார்.,

  ரமேஷ் அது அஞ்சனா தான்., :)) .,

  நன்றி ராஜி., ராஜா., ராமலெக்ஷ்மி., குமார்., ஜெய்லானி., ஆசியா.

  பதிலளிநீக்கு
 9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...