வியாழன், 15 செப்டம்பர், 2011

முகஸ்துதி..

முகஸ்துதி..
*********************
வரிசையில் வரலாம்..
கருத்து அல்லது
விமர்சனம் சொல்ல..
அது முகஸ்துதியை
ஒட்டி இருத்தல் நலம்..

என் சபைக்கு வந்து
பல்லாண்டு பாடிச்
சென்றால் உங்கள்
சபைக்கும் வருவேன்
புகழ்பாட பாணனாகவோ
கேளிக்கை வழங்கும்
நர்த்தகியாகவோ..


பரிசில் எதுவும்
தேவையில்லை
திரும்ப இந்த
சொறிதல்களை
எரிச்சல் வராமல்
வழங்க அனுமதியோடு.

சோப்பு., வெண்ணை
ஐஸ்., காக்கா
கழுதை., கால்பிடித்தல்
போன்றவை உங்கள்
ஞாபகத்தில் வந்தால்
சுலபமாக வேறு
பரிமாணத்தில்
சுய விளக்கம்
கொடுத்து விடுங்கள்


யாருக்கு நேரமிருக்கப்
போகிறது ஒற்றுப் பார்த்திட..
எகிறிக் குதிப்பவர்க்கும்
ஏதாவது பட்டயம் கொடுத்து
பேச விடாமல்
வாயில் அடித்து விடலாம்.

டிஸ்கி:- இந்தக் கவிதை செவ்வாய் மார்ச் 1. 2011 கீற்றுவில் வெளிவந்துள்ளது.

டிஸ்கி:- வெள்ளி மார்ச் 4. 2011 கீற்று தலையங்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

12 கருத்துகள் :

raji சொன்னது…

ஒரு விதத்தில் இந்த முகஸ்துதி பதிவுலகத்திற்கும் மிகப் பொருந்தும்,இல்லையா?

நல்ல வெளிப்பாடு.பகிர்விற்கு நன்றி

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

Super kavithai

நாய்க்குட்டி மனசு சொன்னது…

சந்தேகமே இல்லை இது பதிவு உலகத்தை மனதில் வைத்து எழுதப் பட்ட கவிதை தான், என்ன நான் சொல்றது ?

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//பரிசில் எதுவும்
தேவையில்லை
திரும்ப இந்த
சொறிதல்களை
எரிச்சல் வராமல்
வழங்க அனுமதியோடு.//

நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி சொன்னது…

நல்லதொரு கவிதை தேனம்மை. கீற்று தலையங்கத்தில் எடுத்தாளப்பட்டிருப்பதற்கும் பாராட்டுக்கள்!

அமைதிச்சாரல் சொன்னது…

ஆஹா.. ஒரே கவிதையில் ரெண்டு பாடுபொருள்.. கலக்கறீங்க தேனக்கா :-))

Rathnavel சொன்னது…

அருமை.

மாய உலகம் சொன்னது…

இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி ராஜி

நன்றி ராஜா

நன்றி ரூஃபினா

நன்றி கோபால் சார்

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி சாந்தி

நன்றி ரத்னவேல் ஐயா

நன்றி மாய உலகம்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Arun Ambie சொன்னது…

தாமதமா வந்ததுக்கு சாரிங்க.... இந்த கத்துகிட்டதும் கேட்டுக்கிட்டதும்னு ப்ளாக்கு நடத்துறாங்கள்ளீங்க... அந்த அம்மணிதானுங்க லிங்க் குடுத்தாங்க... கவித நல்லாருக்குதுங்கோவ்! அதுலயும் அந்த கடைசிப் பாரா இருக்குது பாருங்க... கலக்கிப் போட்டீங்க.... உங்களுக்கு அரசியல்ல பெரிய எதிர்காலம் இல்லீன்னாலும்ங்க.... ஒரு வண்டுமுருகன் ரேஞ்சுக்காவது (அதானுங் வட்டச் செயலாளருங்) வாய்ப்பிருக்குதுன்னு தெரியுதுங்க.
அப்புறங்க! இந்த நம்பர் இருக்குதுல்லீங்களா.... அதாங்க எண்கள்... அதயும் தமிழ்ல போட்ருக்குறீங்க... நல்லாருதுங்க... ஆனா புரியக்லீங்க... மொழிபெயர்ப்பு (எண்பெயர்ப்பு??) செஞ்சா என்ன மாதிரி ஆளுங்களுக்குப் புரியும்ங்க... இல்லேன்னா பரவால்ல விடுங்க.... தமிழ் எண்கள் கத்துகிட்டு வந்து நம்பர் படிக்கிறேனுங்க...அது வரைக்கும் எழுத்துக்களயே படிப்பம்ங்க... என்னங்க நாஞ்சொல்றது.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி அருண் அம்பி :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...