எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

புதன், 14 செப்டம்பர், 2011

வழிகாட்டும் ஒலி.. அவள் விகடனின்.. முதலீடு..

முதலீடு பற்றி நிறைய எழுதி வருகிறோம். நாட்டின் மற்றும் வீட்டின் செழிப்புக்கு காரணம் நல்ல வருமானம் மட்டுமல்ல., நல்ல சேமிப்பும் கூட அவசியம். நிறைய சம்பாதிப்பாங்க ஆனா சின்ன சின்னதாக கூட சேமிக்க மாட்டாங்க.. அதுக்கு நம்ம அவள் விகடனில் வழிகாட்டும் ஒலி வழிகாட்டுது.

போன மாதம் பங்குச்சந்தையில் வெளிநாட்டு இந்தியருக்கான முதலீடு பற்றி நான் பங்குச் சந்தை இயக்குனர் திரு நாகப்பனிடம் கேட்டு எழுதி இவள் புதியவளில் வெளியான கட்டுரை நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் எளிமையான சேமிப்பு முறைகள் பற்றியும் நிறைய பேர் கேட்டு இருந்தாங்க. அவங்களுக்காக இது..
சின்ன சின்ன சேமிப்பு முறைகள் பற்றி சொல்றாங்க. சிறு துளி பெருவெள்ளம் அப்பிடிங்கிறது மாதிரி மாதா மாதம் நீங்க ( ஒரு நாளைக்கு 80 ரூபாய் வீதம் ) 2500 /- ரூபாய் சேமித்துக்கொண்டே வந்தால் 30 வருடம் கழித்து 33 லட்சமாக அது பெருகுவதை விளக்குகிறார் திரு நாகப்பன். மேலும் முதலீடுகள் பற்றியும் சொல்கிறார் கேளுங்க. பயன் பெறுங்க.

இந்த நம்பரை டயல் செய்து உங்கள் வழிகாட்டும் ஒலியைக் கேளுங்க.. அதன் படி நடந்து நிறைய சேமித்து தன்னிறைவோடு வாழுங்கள்.. +914442890013.
வாழ்க வளமுடன்., நலமுடன்.!!!

9 கருத்துகள்:

 1. வாழ்க்கையில் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமானதுதாங்க.

  எல்லோருமே அவரவர்களுக்கு ஏற்ற முறையில், வருமானம்+வயது க்கு தகுந்தபடி ஏதாவது சேமித்தே ஆகவேண்டும்.

  இது சம்பந்தமாக நான் பலபேர்களுக்கு பலவிதமான ஆலோசனைகள் கூறி, உதவியும் செய்திருக்கிறேன்.

  அவர்களின் வருமானம், அத்யாவசிய மாதாந்தர குடும்பச்செலவுகள், குடும்ப நபர்களின் எண்ணிக்கை, அவர்களின் படிப்பு, திருமணத்தேவைகள், இவர்களால் எவ்வளவு தொகை சுலபமாக மாதாமாதம் சேமிக்க முடியும் போன்ற எல்லா கோணங்களிலும் ஆராய்ந்து
  அவர்கள் பணம் மிகுந்த பாதுகாப்பாகவும் இருந்து ஓரளவு நிரந்தர வருமானம் தருவதாகவும் இருக்கத்தான் [More safety & High monthly returns] நான் வழி சொல்வதுண்டு.

  அதிகம் விஷயம் தெரியாதபோதும், படிப்பறிவு இல்லாதபோதும், அவர்கள் இன்றும் என்னை சந்திக்கும்போது, மிகுந்த மரியாதையுடன் அன்புடன் என்னை மனதார வாழ்த்தி மகிழ்வது, மிகவும் சந்தோஷமாக உள்ளது.

  இதுவிஷயத்தில் தங்களின் பணியும் சிறப்பாக அமையட்டும். வாழ்த்துக்கள்.
  vgk

  பதிலளிநீக்கு
 2. //நாட்டின் மற்றும் வீட்டின் செழிப்புக்கு காரணம் நல்ல வருமானம் மட்டுமல்ல., நல்ல சேமிப்பும் கூட அவசியம்//

  உண்மைதான் தேனக்கா.

  சூப்பரா ஒரு புள்ளி விவரம் குடுத்திருக்கீங்களே!

  பதிலளிநீக்கு
 3. சேமிப்பு, முதலீடு குறித்து நிறைய, ஆக்கப்பூர்வமாய் சொல்கிறிர்கள். நிச்சயம் சேமிப்பு இல்லாத வாழ்க்கை - ஒலி(ளி) அற்ற வாழ்க்கை தான். பயன் பெறட்டும் அனைவரும்.

  பதிலளிநீக்கு
 4. பலருக்கும் பயனாகக் கூடிய நல்ல பகிர்வு தேனம்மை.

  பதிலளிநீக்கு
 5. தேனம்மை, இனி உங்கள் படைப்புகள் வராத புத்தகமே இல்லாமல் போகக் கடவது.
  என் வலைப்பூவில் ஒரு கதை போட்டு இருக்கிறேன்.
  தங்கள் கருத்துக்கு காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 6. நன்றி ரத்னவேல் சார்

  நன்றி கோபால் சார்

  நன்றி கோபால்

  நன்றி ரமேஷ்

  நன்றி ராஜா

  நன்றி ராமலெக்ஷ்மி.

  நன்றி ரூஃபினா.

  பதிலளிநீக்கு
 7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...