எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 29 மார்ச், 2011

புனிதமாய் வீடு....


விட்டத்தைப் பிரித்து
ஒட்டடை அடித்து.,
வீட்டைப் பெருக்கி
கழிவறை கழுவி


எப்படித்தான் சேருகிறது
இவ்வளவு அழுக்கு
அவ்வப்போது அக்கறையாய்
துடைத்தும் துடைத்தும்..


வெளியே செல்ல
வேண்டி வந்தது
வெள்ளிக்கிழமை.
விஷேஷ பக்தி..

சாக்கடை ஓட்டம்
வண்டிப் புகை மூட்டம்
அழுகல் மாமிசங்கள்
அடைத்த வீதிகள்

வீச்சங்கள் துரத்த
பூட்டிய வீட்டை
விரைந்து திறந்தேன்..
புனிதமாய் இருந்தது வீடு..


25 கருத்துகள்:

  1. நல்ல கவிதை தேனம்மை:)! East or west, home is the best!!!

    பதிலளிநீக்கு
  2. அருமை தேனக்கா,நான் நினைச்சதை ராமல்ஷ்மி சொல்லிட்டாங்க.உலகத்தில் எங்கே சுற்றினாலும் நம்ம சொந்த வீடு போல வராது அக்கா.அழகாக சொல்லியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  3. //வீச்சங்கள் துரத்த
    பூட்டிய வீட்டை
    விரைந்து திறந்தேன்..
    புனிதமாய் இருந்தது வீடு..//


    வீடு எப்பமும் நமக்கு புனிதம்தான்....
    அருமையா எழுதி இருக்கீங்க...

    பதிலளிநீக்கு
  4. நிழலின் அருமை வெயிலில் தெரியும் நன்று தேனம்மை

    பதிலளிநீக்கு
  5. அழகாகச் சொல்லியிருக்கீங்க! வீடே கோயிலாயிருக்கிறது!!

    பதிலளிநீக்கு
  6. அழகாகச் சொல்லியிருக்கீங்க! வீடே கோயிலாயிருக்கிறது!!

    பதிலளிநீக்கு
  7. உயர்வு என்பதோ முதன்மை என்பதோ
    ஏன் புனிதம் என்பதோ கூட
    அதனதன் நிலையில் இல்லை
    ஒப்பீட்டில்தான் உள்ளது என்ற
    நிதர்சனத்தை மிக அழகாகச்
    சொல்லிப்போகிறது உங்கள் படைப்பு
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்����

    பதிலளிநீக்கு
  8. இதில் வீடென்றால் வீடில்லைதானே..சகோதரி.

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துக்கள் மேடம்.. இந்த வார குமுதத்தில் உங்கள் கவிதைகள் 2 முழுப்பக்கத்தில் 10 வந்துள்ளன.. இது பெரிய சாதனை.. எனக்கு தெரிந்து குமுதத்தின் வரலாற்றில் ஒரே வாசகரது கவிதைகள் 10 வருவது (ஒரே இதழில் )இதுவே முதல் முறை... பிரம்மாண்டமான சாதனைக்கு வாழ்த்துக்கள். 6.4.2011 தேதி இட்ட திரிஷா அட்டைப்பட புக்..

    பதிலளிநீக்கு
  10. இதற்கு முன் இது போல சாதனை புரிந்த வி ஐ பி கள்

    1. ஆர் பார்த்திபன்

    2. தபுசங்கர்,

    3. லீனா மணீ மேகலை

    4. யுகபாரதி

    பதிலளிநீக்கு
  11. குமுதத்தில் கவிதை வெளி வந்தமைக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சாதனைகள்!!!!

    பதிலளிநீக்கு
  12. புனிதமாய் இருந்தது வீடு..//
    முத்தாய்ப்பாய் இருந்த வரிகள்.

    பதிலளிநீக்கு
  13. வீட்டிற்கு மட்டுமல்ல; நிறைய விஷயங்களுக்கு பொருந்தும் கவிதை.

    பதிலளிநீக்கு
  14. குமுதத்தில் வெளியான கவிதைகளுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. கலக்குறீங்க. செந்தில் சொன்னது உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  16. நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி ஆசியா

    நன்றீ ரமேஷ்

    நன்றீ மனோ

    நன்றீ சித்து

    நன்றி ஹேமா

    நன்றி கார்த்திக்

    நன்றீ ரூஃபினா

    நன்றீ சசி

    நன்றி மாதவி

    நன்றீ ரமணி ஓரளவு ஒப்பீடு என்பது உண்மைதான்..

    நன்றீ கமலேஷ்.. ஆமாம் வீடு மட்டும் இல்லை கமலேஷ்..:))


    நன்றீ செந்தில் ஐந்தாவதா நான்..:))

    நன்றி சக்தி

    நன்றீ ரத்னவேல்சார்

    நன்றி ராஜி.,

    நன்றி குட்டிப்பையா

    நன்றி உழவன்

    நன்றி ஜோதிஜி..

    பதிலளிநீக்கு
  17. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...