எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 21 ஜனவரி, 2010

இன்னா(வோ) நாற்பது

சத்புத்திரருக்கும் இருக்கக் கூடும்..
சொத்துபற்றிய ஏக்கம்..

அடகுக்கடை சாமி பூவில் வடிந்தது தண்ணீர்..
உழைத்தவனின் கண்ணீர்..

பாட்டியும் கதைகேட்கிறாள் குழந்தைகளோடு..
தொலைக்காட்சியில்..

வீட்டில் வேலைக்காரி
உடல் மெலிய ஃபிட்னஸ் சென்டர்...

ஹோலிக்காட்சியில் ராதைகள் சூழ
புல்லாங்குழலுடன் ராபின்...

ஒருவாய் சோற்றுக்காய்
உலகம் சுற்றி கருத்த காக்கைகள்...

நகரும் பிம்பங்களில்
வாழும் பலருள் நாமும்.....

காய்ந்த மஞ்சள் இலைகளில்
படைத்த பொங்கல் சோறு மாட்டுக்காய்..
ஆவின் பால்...

கிறிஸ்துவுக்கு சிலுவை கிருஷ்ணனுக்கு அம்பு
மேன்மையானவர்களுக்கு மனிதர்களின் பரிசு..

உப்பளத்திலோ., யூக்கலிப்டஸோ .,
சுமக்கும் தலை சோற்றுக்காய்...
முடி பற்றிய கவலையில்லாமல்..

பண்டிகை நாட்களில் பெற்றோர்
தனிமையில் பிணியுடன்..
முதுமையும் தனிமையும் நமக்கும் வரும்...

உருளையாயும் தக்காளியாயும் சோபாவில்
கணினி முன்னால் பையன்களும் பெண்களும்..

வருடந்தப்பாமல் வரும்போகி அப்படியாவது
அழுக்குகள் எரியூட்டப்படட்டுமென...

வெண்ணை உண்ணும் குழந்தை ராபின்
கண்ணனில்லையா....

கோபுரங்களும் கூடாரங்களும் விதிவிலக்கல்ல..
காதலுக்கும் .,தோல்விக்கும்..

இறுதிச்சுற்றில் கோல் விழாமல்..
பார்த்தவருக்கு ஹார்ட் அட்டாக்...

பெட்டிங்கோ., புட்டிங்கோ .,வளவளவென்று..
கட்டையடி போல் மட்டையடி.,
நேர விரயம் ...

கையாளக் கற்காமல் மண்ணுளிப் பாம்பு கூட
மலைப்பாம்பாய்...

பணத்தேட்டையில் பலியானது இளமை .,
சுயகௌரவம்., கூடி வாழ்தல்., குழந்தை இன்பம்..

பிறந்த நாள் வருகிறது வருடந்தோறூம்
மூப்பை நினைவு படுத்த...

வெந்த உருளைத் தோலுரிக்கும் போதெல்லாம்
நினைவில்..விற்ற வெள்ளிக் குத்துவிளக்கு..
தேய்த்தால் பளபளப்பாகுமென...

டேஷ் டேஷ் நீ ..டேஷ் டேஷ் நான்..
இது தவிர ஏதும் எழுதத்தெரியாதா
என கிண்டலில் என் மகன்.....

சுமைஅரைப்பணம்., சுமைக்கூலி அரைப்பணம்.,
பழைய பேப்பர்காரன்...

ஏதோஒரு வீட்டின் பழைய மரச்சிலாகை.,
யாரோஒரு குழந்தை வளர்த்த செல்ல ஆடு.,
இரண்டும் சமைந்து பிரியாணியாய்...

வலைபோல்வீசுகிறாய் உன் பார்வையை.,
நினைத்து நினைத்தே மீனாய் தத்தளித்து நான்...

வட்டச் செக்கைச் சுற்றும் மாடாய்
உன் கண்ணைச்சுற்றி ஆசை நெகிழ்ந்து...

இசையமைப்பாளனின் ஒலிக்குறிப்பு கையசைவாய்
உன் கையசைப்பின் நடனத்தில்...
எல்லா இசைக்கருவிகளின் சத்தமாய்
என் மனம் அதிர்ந்து ...

செப்படி வித்தைக்காரன் நீ ...
மனிதப்பிறவியான என்னை
உன் பொம்மலாட்ட பொம்மையாக்கி...

இரும்பைத்தங்கமாக்க ரசவித்தை...
என் கண்ணை உன் கண்ணால் தீட்டுகிறாயே...
அது வைரவித்தையா...

உன்னைப் பார்த்ததும் பூம்பூம் மாடாய் மனசு..
எதற்குத்தலை ஆட்டுகிறோமெனத்
தெரியாமல் ஆடிக்கொண்டு...

பதினோரு மணிக்கு இருக்கவேண்டிய இடத்துக்கு
வீட்டிலிருந்து பதினோரு மணிக்குக் கிளம்பி
நேரந்தவறாமை...

உணர் கொம்புகள்.. தூரம் கடந்தும் நீ
என்ன செய்து கொண்டிருக்கக் கூடும்
என்ற அனுமானத்தில்...

முன்புகற்றுக்கொடுத்தோம் .,
இப்போது கற்றுக் கொள்கிறோம்.,
திட்டு வாங்கி... குழந்தைகளிடம்...

பரிட்சை அன்றும் பயணத்தின் அன்றும்
மறக்காமல் நினைவு கூர்கிறோம்... சாமியை...

புதிதாய் ஒன்று வாங்கினால்
சந்தோஷம் சிறுவயதில்..
எவ்வளவு புதிது வாங்கியும்
திருப்தியில்லை நடுவயதில்...

அணைக்கவியலா அடர் நெருப்பும்.,
பெருவெய்யிலும் .,அயல்நாட்டுத்தோழருக்கு.,
அகமும்., புறமும்....

ஆதரிக்க ஆளில்லாமல் அழிந்து தொலைந்து
கிராமியக்கலைகளும்.,இயற்கைவிவசாயமும்.,
கைத்தொழிலும்.,மட்டைதவிர்த்த விளையாட்டுகளும் ..

வெள்ளமாய் ஒரு பக்கம்..
அணைக்குள் ஒரு பக்கம்...
அவசரத்துக்கு ஒரு வாய் கிட்டாமல்...தண்ணீர்..

என் சகலத்தையும் இட்டும் நிரப்ப முடியவில்லை..
அம்மா...

நானென்பது கணவனுக்கு மனைவி...
குழந்தைகளுக்கு அம்மா...
கவிதை எழுதுகிறவள்...

63 கருத்துகள்:

  1. ஒவ்வொண்ணும் சுருக். வலிக்:)

    பதிலளிநீக்கு
  2. 'சும்மா" கலக்குறீங்க தேனு.

    வலை உலகின் நல்ல கவிதை தளத்திற்கென்ற இடம் நோக்கி நகர தொடங்கிவிட்டீர்கள் தேனு.வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. //நானென்பது கணவனுக்கு மனைவி...
    குழந்தைகளுக்கு அம்மா...
    கவிதை எழுதுகிறவள்... //

    கடைசி வரியை "நல்ல கவிதை" என நாங்கள் திருத்திக் கொண்டோம்.

    சஞ்சிகைகளுக்கு அனுப்பக் கூடிய கவிதை இதில் உள்ளது.தேர்வு செய்து அனுப்புங்கள்.

    பதிலளிநீக்கு
  4. தேனம்மா இந்த கவிதைக்கு என்ன பரிசு வேணும்? சாட்டில் சொல்லுங்க...!

    பண்டிகை நாட்களில் பெற்றோர்
    தனிமையில் பிணியுடன்..
    முதுமையும் தனிமையும் நமக்கும் வரும்...


    விதி வழியது நான் என்ன பண்றது?
    :(

    பதிலளிநீக்கு
  5. நற்றமிழ் முற்றா உடல் கொண்டு
    மொட்டவிழ் நறுவளர்மலர் செண்டு
    இன்னாள் நாற்பது இன்னா(வோ) பா இது
    தன்னூக்கம் கொண்டவர் பொன்னாளிது
    விண்கீழுள யாவும் அன்பாலிசைக்கும் கவி

    பதிலளிநீக்கு
  6. ///நானென்பது கணவனுக்கு மனைவி...
    குழந்தைகளுக்கு அம்மா...
    கவிதை எழுதுகிறவள்///

    கவிதை அருமையாக முடிந்திருக்கிறது...

    கவிதை நிறைய விசயங்களை உள்வாங்கி இருக்கிறது...
    கண்ணில் பட்டவை, சுற்றம் உள்ளவை என எல்லாவற்றையும் கவிதையாக்கும் கலையை கற்று வைத்து உள்ளீர்கள்...

    ///சத்புத்திரருக்கும் ///

    அப்படி என்றால் என்ன என்று கூற முடியுமா தோழி...

    பதிலளிநீக்கு
  7. You've covered so many practical things in a single topic Thenammai.We learn from children-exactly.

    பதிலளிநீக்கு
  8. படிச்சு முடிக்கிறதுக்குள்ள மூச்சு வாங்குது,

    //கையாளக் கற்காமல் மண்ணுளிப் பாம்பு கூட
    மலைப்பாம்பாய்...//

    சுளீர் என உறைக்கும் உண்மை, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. ஒரு கவிதைக்குள் குட்டிக் குட்டியாய் எத்தனை விஷயங்களைத் தொட்டு விட்டீர்கள். அத்தனையும் அற்புதமான சிந்தனைகள்! வாழ்த்துக்கள் தேனம்மை!

    பதிலளிநீக்கு
  10. very beautifully woven poem. i enjoyed the pain in each verse.
    -vidhya

    பதிலளிநீக்கு
  11. இரும்பைத்தங்கமாக்க ரசவித்தை...
    என் கண்ணை உன் கண்ணால் தீட்டுகிறாயே...
    அது வைரவித்தையா...//


    ///நானென்பது கணவனுக்கு மனைவி...
    குழந்தைகளுக்கு அம்மா...
    கவிதை எழுதுகிறவள்///

    பழைய வித்தைக்கு
    புதிய வரிகள்..
    கடைசியில் அருமையா சொன்னீங்க
    இருக்கும் யதார்த்தத்தில் எல்லாம்
    பகிர்ந்தபின் வரும் இயல்பு...

    வாழ்த்துக்கள் தோழி..

    பதிலளிநீக்கு
  12. //நானென்பது கணவனுக்கு மனைவி...
    குழந்தைகளுக்கு அம்மா...
    கவிதை எழுதுகிறவள்... //

    எனக்கு அக்கா

    பதிலளிநீக்கு
  13. கடைசி வரிகள் அசத்தல்.

    கவிதை மொத்தமும் அங்கங்கே நிறைய முத்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. //இரும்பைத்தங்கமாக்க ரசவித்தை...
    என் கண்ணை உன் கண்ணால் தீட்டுகிறாயே...
    அது வைரவித்தையா...//

    ))))).....

    பதிலளிநீக்கு
  15. நிறைய விஷயம் சொல்லிருக்கீங்க. சில சுருக்கென வலிக்கிறது

    பதிலளிநீக்கு
  16. வாவ். நீங்களே எதையும் விட்டுவைக்காமல் இத்தனை வ(லி)ரிகளில் சொன்னதும் நான் இதில் எதைச் சொல்ல. ஒவ்வொன்றும் அருமை.

    ////பா.ராஜாராம் சொன்னது… 'சும்மா" கலக்குறீங்க தேனு. வலை உலகின் நல்ல கவிதை தளத்திற்கென்ற இடம் நோக்கி நகர தொடங்கிவிட்டீர்கள் தேனு.வாழ்த்துக்கள்!////

    கவிதையின் முடிவில் இடத்தை அடைந்துவிட்டார்கள் மக்கா.

    பதிலளிநீக்கு
  17. மிகப் பிடித்திருக்கிறது தேனக்கா.

    பதிலளிநீக்கு
  18. உங்க கவிதைகளில் ஒலிக்கும் சமுதாய அக்கறை ரொம்பப் பிடித்திருக்கிறது.அட நம்மவுங்கன்னு ஒரு ஒட்டுதலை மனம் உணர்கிறது.
    அன்புடன்
    க.னா.சாந்தி லக்‌ஷ்மன்

    பதிலளிநீக்கு
  19. அருமையான கவிதை
    ஒவ்வொரு வரியும்
    சொல்லுதே கவிதை !
    எதையும் சட்டை செய்யாமல்
    சாட்டையாய் இறங்குதே

    உள்குத்து வெளிக்குத்து
    இல்லாமல் பம்பர குத்தாய்
    வார்த்தைகள் தெறிக்குதே !!


    நல்ல அருமையான கவிதை தேனம்மை அக்கா .

    பதிலளிநீக்கு
  20. தலைப்பு கலக்கல்.. அதுபோலவே ஒவ்வொரு வரிகளும்.. சோகம், இயலாமை, கோபம், சிரிப்பு என மாறி, மாறி உணர்வுகள்...

    ஆனாலும்

    //ஒருவாய் சோற்றுக்காய்
    உலகம் சுற்றி கருத்த காக்கைகள்...//

    அமாவாசைக்கு வைக்கும் சோற்றைத் தீண்டாத காக்கைகளும் உண்டு :)

    பதிலளிநீக்கு
  21. அற்புதமான ஹைக்கூ கவிதைகள். ஹைக்கூ இலக்கணத்துடன்.

    பதிலளிநீக்கு
  22. இந்த வரி நல்லா இருக்கே இந்த வரி நல்லா இருக்கேன்னு எல்லா வரியையுமா மார்க் பண்ணி பிடிச்சிருக்குன்னு சொல்றது...எனவே மொத்தமாக..

    நல்லாயிருக்கு..!

    பதிலளிநீக்கு
  23. 40ம் நச்...ஒவ்வொன்றிலும் முரண்பாடு..என்ன செய்வது

    பதிலளிநீக்கு
  24. //பதினோரு மணிக்கு இருக்கவேண்டிய இடத்துக்கு
    வீட்டிலிருந்து பதினோரு மணிக்குக் கிளம்பி
    நேரந்தவறாமை...//

    ஹி..ஹி.. நானுந்தான்...

    எல்லாருடைய பிரதிபலிப்பும்தான் இந்தக் கவிதையோ?

    பதிலளிநீக்கு
  25. உங்கள் மீதுள்ள அக்கறையினால் இந்த விமர்சனம்.

    கவிதை என்பது முதலில் எளிமை. வார்த்தைகளின் கோர்வை என்பது இயல்பானதாய். தொடரும் அர்த்தம் என்பது கோர்தத மாலையாய். முடிக்கும் போது மொத்தத்திற்கும் உண்டான தவிப்பு.

    வெளியேறும் போது அடர்ந்த மௌனம்.

    ஒரே ஒரு முறை யுகபாரதி (திரைப்படகவிஞர்) wordpress.com வலைதளத்திற்கு எழுதிக்கொண்டு வருவதை ஒரு படியுங்கள். அதைபடிக்கும் போது, அதே போல் ஆனந்த விகடனின் வருகிறேதே அந்த கவிதைகளைப்படிக்கும் இரண்டு மணி நேரம் மொத்தமும் நிசப்தம் போல் ஆகிவிடுகின்றது.

    எல்லா திறமையும் உங்களிடம் இருக்கிறது. ஆவல் அவசரத்தில் இதில் கோர்வை சற்று பிசகி இருப்பது போல் இருக்கிறது. என்னுடைய விமர்சனம் சரியா தவறா?

    அவஸ்யம் யுகபாரதி கவிதை படியுங்கள். வலு சேர்க்கும் உங்கள் சிந்தனைகளுக்கு.

    பதிலளிநீக்கு
  26. சாமிப்பூவின் கண்ணீர்
    கருத்த காக்கைகள்
    உருளை தோல்
    பிரியாணி ஆடு

    அட அட அட அட

    வாழ்த்த சொற்கள் இல்லை சகோதரி

    உங்கள் கவிதையின் உச்சம் இதுவென உணர்கிறேன்

    கவிதை ராணியின் மகுடத்தில் ஓர் கோஹினூர் வைரமிது

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  27. அக்கோவ்........................அக்கா........... நீங்கள் கவிஞர். எப்படி அருவி மாதிரி கொட்டி இருக்கீங்க..... அருமை.

    பதிலளிநீக்கு
  28. எல்லா வரிகளும் சூப்பர்ப், பலமுறை படிக்க வைத்துவிட்டிர்கள். ரொம்ப‌ ரொம்ப நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  29. நான் ஜோதிஜி அவர்களின் கருத்தில் முரண்படுகிறேன். யுகபாரதி ஒருவர் போதும். அவரைப்போல் இன்னுமொருவர் எதற்கு. ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி உள்ளது. உங்களது பாணியும் தனித்த ஒன்று. அதை ஏன் மற்ற ஒருவருடன் ஒப்பிடவேண்டும். நீங்கள் நீங்களாகவே இருப்பது தான் அழகு.

    சரிதானே ?

    விஜய்

    பதிலளிநீக்கு
  30. அக்கா நலமா? கவிதையின் ஒவ்வொரு வரிகளும் நச்னு இருக்கு..சூப்பர்ர்ர்..

    பதிலளிநீக்கு
  31. நீங்கள் சொல்வது சரிதான் விஜய். ஆனால் கற்றுக்கொடுப்பதை பெற்றுக்கொள்வதில் தவறு இல்லை என்று நிணைக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  32. அழகிய அழகான வரிகளை கொண்டு புதைத்த விதைகள் அனைத்தும் கவிதையாய் முளைத்து நிற்கிறது அருமை தேனக்கா..

    பதிலளிநீக்கு
  33. தேனு ....அத்தனயும் மொத்தமாய் ஆறுதலாய் வாசித்து மூச்சுவிட்டேன்.

    எந்த வரியை மிக மிக ரசிச்சேன் என்று சொல்ல நான் !

    பதிலளிநீக்கு
  34. என்ன தேனம்மை அக்கா .. பதிவு எழுதலியா ...

    பதிலளிநீக்கு
  35. உங்களால் 400 கூடத் தர முடியும்..

    பதிலளிநீக்கு
  36. மேடம்... எங்கே ஆளைக் காணோம்...தினமும் வந்து பார்த்துச் செல்கிறேன்..

    பதிலளிநீக்கு
  37. நன்றி வானம்பாடி என்ன அப்புறம் ஆளே காணோம்

    பதிலளிநீக்கு
  38. நன்றி மக்கா நல்ல கவிதை எழுதுகிறவளா என்னை சொன்னதுக்கு

    பதிலளிநீக்கு
  39. நன்றி வசந்த் உங்க அன்பு ஒன்றே போதும்

    பதிலளிநீக்கு
  40. என்னது என் தமிழ் முத்தலையா நல்லது இளமைத்தமிழ் இது நேசன்

    பதிலளிநீக்கு
  41. கமலேஷ் சத் புத்திரர்னா எதுக்கும் ஆசைப்படாம சிரவணன் மாதிரி அம்மா அப்பா சேவை செய்வபர் என்று அர்த்தம்

    பதிலளிநீக்கு
  42. நன்றி முனியப்பன் சார்

    நன்றி சைவக்கொத்துப் பரோட்டா

    பதிலளிநீக்கு
  43. நன்றி ராமலெஷ்மி

    நன்றி வித்யா

    பதிலளிநீக்கு
  44. நன்றி சந்தான சங்கர்

    நன்றி சங்கவி

    பதிலளிநீக்கு
  45. நன்றி பாத்திமாஜொஹ்ரா

    நன்றி அமிர்தவர்ஷினி அம்மா

    பதிலளிநீக்கு
  46. நன்றி மோஹன் குமார்

    நன்றி நவாஸ்

    பதிலளிநீக்கு
  47. நன்றி சரவண குமார்

    நன்றி ஸ்டார்ஜன்

    பதிலளிநீக்கு
  48. நன்றி சாந்திலெஷ்மணன்

    நன்றி ஹுசைனம்மா

    பதிலளிநீக்கு
  49. நன்றி பட்டியன்

    நன்றி தமிழ் உதயம்

    பதிலளிநீக்கு
  50. நன்றி சிவாஜிசங்கர்

    நன்றி விஜய்

    பதிலளிநீக்கு
  51. நன்றி ஜோதிஜி கற்றுக்கொள்கிறேன் தவறு இல்லை

    நன்றி ஸ்டார்ஜன்

    பதிலளிநீக்கு
  52. நன்றி ஹேமா லேட்டா வந்தலும்
    என் தொடர்ந்த ஊக்கமூட்டி நீங்கதான்

    பதிலளிநீக்கு
  53. நன்றி ஹென்றி

    நன்றி ஷேக் தாவுத்

    பதிலளிநீக்கு
  54. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...