வேதங்களைக்
காத்த கல்விக் கடவுள்.
எங்கும் இருள் சூழ்ந்திருக்கிறது. அறியாமையின்
இருள். நான்கு வேதங்கள் கொண்டுதான் பிரம்மன் படைப்புத்தொழிலைச் செய்துவந்தார். ஆனால்
இதென்ன அந்த வேதங்களை திடீரென எங்கிருந்தோ வந்த இரு குதிரைகள் திருடிச் சென்றுவிட்டனவே.
அதனால் சூழ்ந்த இருள் பிரம்மனின் மனத்தில் மருளை உருவாக்கிவிட்டது. தன் தந்தையாராகிய
விஷ்ணுவிடம் ஓடிச் சென்று முறையிடுகிறார்.
“தந்தையே .. வேதங்களை
இரு குதிரைகள் திருடிச் சென்றுவிட்டன. அவற்றைக் காப்பாற்றித் தாருங்கள். “
”என்னது குதிரைகளா..
எதற்காகத் திருடிச் சென்றார்கள் “
” ஆம் தந்தையே
குதிரைகளேதான். தாங்களே புதிய உயிர்களைப் படைக்க எண்ணிப் பறித்துச் சென்றார்கள் அப்
பரிகள் ”
”எங்கே சென்றன.
?”
“அவை பாதாளலோகம்
நோக்கிச் சென்றன.அங்கே ஒளித்து வைத்திருக்கின்றன. அவற்றை நீங்கள் மீட்டுத்தந்தால்தான்
நான் சிருஷ்டிகளை உருவாக்க இயலும்.”
வேதங்களை மீட்க
விஷ்ணு ஒரு உபாயம் செய்தார். அதற்காக ஒரு வித்யாசமான வடிவையும் எடுத்தார்.