பாராட்டும் வார்த்தைகள் நம்முள் உற்சாகத்தைப் பிறப்பிக்கின்றன. அதிலும் நாம் ஒரு கட்டுரை சிறப்பானதாகக் கருதும்போது அதற்குக் கிடைக்கக் கூடிய பின்னூட்டங்களை ஊன்றிக் கவனிக்கிறோம். நாம் சொல்லவந்ததை சரியாக யார் கிரஹித்திருக்கிறார்கள் என்று. அவ்வாறு நம் எண்ணப் போக்கோடு இன்னொருவரின் சிந்தனையும் ஒத்துப் போகும்போது மகிழ்வுண்டாகிறது.
மேலும் சில சமயம் நம்முடைய நல்ல குணங்கள் என்று (!) நாம் நினைத்துக் கொண்டிருப்பதையும் யாராவது சிலாகித்தால் நம் மூளையெனும் பொன்னேட்டில் பொறிக்கப்பட்டு மறக்கவியலா கல்வெட்டாகிறது. அப்படி மகிழ்வித்த சில ஊக்கமூட்டும் பின்னூட்டங்களை இங்கே பகிர்ந்துள்ளேன் :)