சந்திரபாகா நதிக்கரையில் நீர் பொங்கிச் சென்றுகொண்டிருந்தது. மனிதர்களின் கசடகற்றிக் கலங்கி கலங்கிக் கொண்டிருந்தது. தினம் பூக்கும் சூரிய தேவன் தன் வெப்பத்தால் அதைத் தூய்மையாக்கிக் கொண்டிருந்தார்.
அந்த இடத்தின் பெயர் சாம்பபுரம். அது தேவர்களுக்கெல்லாம் தேவன் சூரியன் உறையும் இடம். அதற்கு ஏன் சாம்பபுரம் என்ற பெயர் ஏற்பட்டது? ஜாம்பவதியின் புதல்வன் சாம்பன் ஏன் ரோகம் பீடித்த உடலுடன் அங்கே சூரியதேவனைப் பற்றிக்கொண்டு தவமியற்றிக் கொண்டிருக்கிறார்.
தந்தையே மகனுக்கு சாபம் அளிக்க முடியுமா.. அதுவும் கொடுவினையாகிய தொழுநோய் பீடிக்கும்படி.? சில நிகழ்வுகள் நிகழ வேண்டியே இந்த சாபம் உண்டானது. அவை என்னென்ன நிகழ்வுகள். ?