எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பார்பக்யூ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பார்பக்யூ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 ஆகஸ்ட், 2019

ஜெர்மனியில் ஒரு பார்பக்யூ.

ட்ராம் மற்றும் ட்ரெயின் வசதிகளால் டூயிஸ்பர்க்கிலிருந்து சுமார் 131 கிமீ தூரத்தில் உள்ள வேர்ல் என்ற நகரில் மகனின் நண்பர் யுஹானஸ் ( ஜெர்மனியின் ஜெ எல்லாம் யே என்று உச்சரிக்கப்படுகிறது. - ஜோகானஸ் ) என்பவரின் வீட்டிற்கு எளிதாகச் சென்றோம். அவர் மனைவி கேதரின், பேனாஃப் என்ற ஸ்டேஷனில் ரிசீவ் செய்து அநாயசமாகக் கார் ஓட்டிக்கொண்டே எங்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றார் ) 

அது ஒரு சனிக்கிழமை. அதனால் என்ன பார்பக்யூ ஏற்பாடு செய்திருப்பதால் அது ஒரு கொண்டாட்டமாக இருக்கும் எனச் சொல்லப்பட சென்றேன். :) அங்கே வெஜ் இல்லை எல்லாமே நான்வெஜ்தான். நாமும் மாமிசபட்சிணிதானே.

இதோ நண்பர் வீடு வந்தாச்சு. இங்கே வீடு பராமரிப்புதான் கொஞ்சம் கஷ்டம். இது தோட்டத்தோடு சேர்ந்த வீடாக வேறு இருந்தது. அங்கே சூரிய காந்தி, ஆப்பிள், இன்னும் பல செடிகளும் பழங்களும் இருந்தன. புல் வெளியின் ஓரத்தில் குழந்தைகள் விளையாடும் பார்க் போல ஊஞ்சல் எல்லாம்.

யுஹன்னஸின் மகள் பெயர் அலிஷா, மனைவி பெயர் காதரின். அவரின் பெற்றோர்களும் கலந்துகொண்டார்கள். யுஹான்னஸின் வீட்டில் இரு கெஸ்ட்களும் இருந்தார்கள். துருக்கி மற்றும் ஈஜிப்டில் இருந்து இரு மாணவியர் அங்கே தங்கி இருந்தார்கள். பதினைந்து நாள் சிறப்பு விருந்தினராக அவர் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். இதனால் இவரது மகள் அலீஷாவும் கல்லூரிப் பருவத்தில் இப்படி அயல்தேசத்தில் விருந்தாளியாகத் தங்கி அவர்களின் கலாச்சாரம், வாழ்வியல், சமூக அரசியல், கல்வி முறைகளை அவதானிக்க முடியும்.


நிற்க. இப்போ நாம பார்பக்யூவுக்கு வருவோம்.

ஜெர்மனியில் வாடகை வீட்டு காண்ட்ராக்ட் போடும்போதே பால்கனியிலோ, தோட்டத்திலோ இம்மாதிரி பார்பக்யூ அடுப்பு ( கரி ) வைக்கவும் ஷரத்து எழுதிக் கையெழுத்திட்டுக் கொள்ள வேண்டும்.

ஜெர்மனியின் வீடு, ரோடு ஆகியவற்றில் ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் அதிகம். சுத்தமாக இருக்க வேண்டும். சத்தமே கூடாது. ( பார்ட்டிக்கு எல்லாம் நேரம் காலமிருக்கு) மதியம் இரண்டு மணிக்கு நம்ம பார்பக்யூ டைம்.

இதோ பார்பக்யூ அடுப்பு ரெடி. கரியும் கூட. லிக்னைட் கார்ப்பரேஷனில் வெட்டி எடுத்து வந்தமாதிரி பாறைக் கரித்துண்டுகள்.
Related Posts Plugin for WordPress, Blogger...