கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்
கவலை உனக்கிலை ஒத்துக் கொள்
- என சிறுவயதில் படித்த ஞாபகம். உண்மைதான். கைத்தொழில்கள் வருவாயை ஈட்டியும் தரும். வீட்டு உபயோகப் பொருளாகவும் ஆகும். இன்றைய டென்ஷன். டிப்ரஸ்டு, ஸ்ட்ரெஸ் நிறைந்த உலகில் ஸ்ட்ரெஸ் ரிலீஃபையும் கொடுக்கும்.
விருந்தினர் வந்தால் தற்போது எல்லாரும் சோஃபாவிலேயே உட்கார்ந்து பேசுகிறோம். முன்னே எல்லாம் விருந்தினர் வந்தால் உபசரிக்கத் 621. தடுக்குப் போட்டு அமரச் சொல்வார்கள். இப்போதும் காரைக்குடிப் பகுதியில் வீட்டிற்கு விருந்தினர் வந்தால் ஆண்கள் சோஃபாவில் அமர்வார்கள். பெண்கள் அமர 622.பர்மாப் பாய் விரிப்பார்கள் . சிலர் வீடுகளில் முகப்பிலோ பட்டாலையிலோ 623. சடப்பிரம்பாய் விரித்திருப்பார்கள்
பொதுவாக திருமண நடைமுறைகளிலும் விருந்திலும் தடுக்கு உபயோகப்படுகிறது. பெண்ணின் ஐயாவும் மாப்பிள்ளையின் ஐயாவும் தலைப்பா கட்டி சாமி அறையில் தடுக்கில் அமர்ந்து இசைகுடிமானம் எழுதிக் கொள்வார்கள். ( திருமண ரெஜிஸ்ட்ரேஷன் )
624. பந்திப்பாய், 625. பந்திச் சமுக்காளம் போன்றவையும் விருந்தளிக்க விரிக்கப்படுகிறது . ஒருவர் அமர்ந்து சாப்பிட வேண்டுமானால் தடுக்குப் போடுவதுண்டு. இப்போவெல்லாம் டைனிங் டேபிள்தான் . யாராலும் கீழே அமர முடிவதில்லை. எனவே தடுக்கு எல்லாம் மியூசியம் ஐட்டம் ஆகிவிட்டது.
எங்க அப்பத்தா 625. சிகரெட் அட்டைகள் வைத்து செய்த தடுக்குகள் பார்த்திருக்கிறேன். அதன் பின்புறம் துணியால் தைக்கப்பட்டிருக்கும். அதே போல் 626. பிரம்பில் முடைந்த தடுக்குகளும் அப்போதையை கைவினைப் பொருட்கள்.
நவீன மோஸ்தரில் 627. ப்ளாஸ்டிக் தடுக்குகளும் வந்துவிட்டன. சாரல் தடுக்கவும் 628.நீளப் பாய்கள்/அல்லது 629. ரெட்டுத் துணிகளில் திரைகள் பட்டாலைகளில் போடுவதுண்டு. அது இதில் சேராது.
தடுக்கு, 630.கூடை 631. கொட்டான்கள் போன்றவை முன்பு பிரம்பில் செய்யப்பட்டது இப்போது ப்ளாஸ்டிக் ஒயர்களில் பின்னப்படுகிறது. லாங்ஸ்டாண்டிங் என்பதால். ஆனால் பிரம்புத் தடுக்குகள் பழமையானாலும் நெடு நேரம் அமர்ந்திருந்தாலும் உடல் சூட்டை உண்டாக்காதவை.
632. கன்னுத் துணியில் நடுவீட்டுக் கோலம் பின்னி, பின்புறம் தடுக்கோடு இணைத்து நீலப் பட்டி வைத்துத் தைத்திருக்கிறார்கள் இதில். இது சாமி வீட்டில் போடப்படுவது. இதில் பாதி நான் பின்னியது.
மெல்லிய பிரம்புத் தடுக்கு. மிகச் சன்னமாகவும் வழுவழுப்பாகவும் இருக்கும். 633. வட்ட பர்மாத் தடுக்கு. வட்டமாகச் செய்து நீலப்பட்டி வைத்திருக்கிறது. மேலே விலாசம் ( இனிஷியல் கூட தைத்திருக்கிறது பாருங்கள். :) பக்கா :)