எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 5 மார்ச், 2016

பரிட்சைப் பூதம்.



5.5. 86.

27. *ஒரு பூதம்
என்னைப் பயம் காட்டுகிறது.


*கேள்விகளென்னும்
பற்களை நீட்டிக்
காகிதங்களில்
தன்முகம் தனைப் புகுத்தி
வினாக்குறிகளாய்
நகங்களை விரித்து
ஒரு தேர்வுப் பூதம்
என்னை வேர்க்க வைக்கிறது.

*கேள்விப் புழுக்களைத்
தூண்டிலில் மாட்டி
மீனாய் என்னைச் சிக்கவைக்கும்.
கேள்விக் கருவாடு பூட்டி
வண்டியில் நாயாய்
என்னை ஓட்டும்
ஒரு பரிட்சைப் பூதம்
என்னைப் பயம் காட்டுகிறது.


5 கருத்துகள்:

  1. //27. *ஒரு பூதம் என்னைப் பயம் காட்டுகிறது.//

    இன்று மிகவும் அறிவாளியாகியுள்ள தாங்களே அன்று தேர்வெழுதும்போது பயந்துள்ளீர்கள். பயந்து பயந்து அன்று படித்ததனால் தான் இன்று இவ்வளவு அறிவாளியாகியிருப்பீர்களோ என்னவோ !!!!!:)

    பதிலளிநீக்கு
  2. இன்று மிகவும் அறிவாளியாகியுள்ள தாங்களே அன்று தேர்வெழுதும்போது பயந்துள்ளீர்கள். பயந்து பயந்து அன்று படித்ததனால் தான் இன்று இவ்வளவு அறிவாளியாகியிருப்பீர்களோ என்னவோ !!!!!:) ஹாஹாஹா அறிவாளி.. :) :) :) ஒரு வேளை மக்காக இல்லாமல் இருக்கலாம் விஜிகே சார் :)

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  4. என்ன சகோ???!! உங்களுக்குமா??!!! பயம்??!!!! அன்று..

    ம்ம்ம்ம்ம் இப்போது இது பல குழந்தைகளுக்கும் மிகவும் பொருந்தும்தான்.இன்றைய கல்வி அப்படி ஆகிப் போனது...அருமை சகோ

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...