எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 17 மே, 2014

சாட்டர்டே போஸ்ட். புத்தகங்கள் வாழ்வு பற்றி பால கணேஷ்.வலைத்தளத்தில் அறிமுகமாகி முகநூலிலும் நண்பரானவர், அன்பிற்குரிய சகோதரர் பாலா என்ற பால கணேஷ் . இவர் என்னுடைய பெரும்பாலான இடுகைகளுக்குப் பின்னூட்டம் இட்டு ஊக்குவித்தது மட்டுமல்ல. தன் வலைத்தளத்திலும் ”சும்மா”வுக்குத் தனி இடம் கொடுத்துள்ளார்கள்.! என் முன்னேற்றத்திலும் வளர்ச்சியும் இவரின் பங்கும் உள்ளது. நன்றி பாலா.

என் புத்தக வெளியீடுகளுக்கு வந்து ஆதரவு அளித்து இரு நூல்களையும் வாங்கிச் சென்றிருக்கிறார்கள். தன்னுடைய தங்கத்தாமரைப் பதிப்பகத்தின் மூலம் மகாபலிபுரம் உங்களுடன் வரும்  ஒரு வழிகாட்டி என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். இதற்கு நான் விமர்சனம் எழுதி இருக்கிறேன். மேலும் எம்ஜியார் பற்றியும் ஒரு சிறு நூலை வெளியிட்டிருக்கிறார். 


டிஸ்கவரி மாடியில் நடைபெற்ற வெளி ரங்கராஜனின் ஆற்றைக் கடப்போம் என்ற நாடக நிகழ்வுக்குச் சென்ற போது முதன் முதலில் இவரைச் சந்தித்தேன். இவரின் புன்னகையே இவரின் பலம். முகமும் அகமும் மலரப் பேசுவார் சகோ கணேஷ்.  அவரிடம் புத்தகங்கள் வெளியிட்டது பற்றிப் பாராட்டினேன்.

தற்போது புத்தக விற்பனை பற்றிப் பலவிதமான கருத்துகள் உலவும் நிலையில் பதிப்பாளராக அவரிடம் சில கேள்விகளை முன் வைத்தேன். அதற்கு அவரின் பதில்கள் இதோ.

///புத்தகங்கள் சில பதிப்பித்து இருக்கிறீர்கள். இன்றைய காலகட்டத்தில் புத்தக வாசிப்பு எப்படி உள்ளது. மக்கள் முகநூல் பக்கம் சாய்ந்துவிட்டார்கள் என்று தோன்றுகிறது. புத்தகங்களுக்கு இனி வரவேற்பு இருக்குமா. .///

புத்தக வாசிப்பு : புத்தகம் வாசிப்பவர்கள்தான் எத்தனை ரகம்! புத்தகக் கண்காட்சியில் பக்கங்கள் குறைவான புத்தகமெனில் புரட்டிப் பார்க்கும் சாக்கிலேயே (இரண்டு முறை விசிட் அடித்துக் கூட) மொத்த புத்தகத்தையும் வேகமாகப் படித்து விடுகிறவர்கள், நண்பர்களிடம் அல்லது தெரிந்தவர்களிடம் இரவல் வாங்கிப் படிப்பதை மட்டுமே கொள்கையாக வைத்திருக்கும் சாமர்த்தியசாலிகள், படிப்பதாக வாங்கி வந்து படித்த நூல் நன்றாக இருந்தால் மறுமறு வாசிப்பின் பொருட்டு திருப்பித் தராம்ல் தாங்களே வைத்துக் கொண்டு படித்து ரசிக்கும் புத்திமான்கள், வாடகை நூல் நிலையத்தில் புத்தகம் வாங்கி வாசிக்கும் நல்லவர்கள், சின்ன புத்தகமோ, பெரிய புத்தகமோ விலையைப் பற்றிக் கவலைப்படாமல் மனதுக்குப் பிடித்து விட்டால் உடனே விலை கொடுத்து வாங்கி விடும் அசடுகள்...! இப்படி நிறைய கேட்டகரிகள் இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் புத்தக வாசிப்பு முன்பைவிட சற்று அதிகரித்துத்தான் இருக்கிறது என் கணிப்பில். கவனியுங்கள்... புத்தக வாசிப்பு மட்டுமே அதிகரித்திருக்கிறது. புத்தக விற்பனை அல்ல.

முகநூல் : இன்றைய தேதியில் முகநூல் என்பது நிறையப் பேருக்கு ஒரு போதை வஸ்து போலாகி விட்டது என்பதுதான் என் கருத்து. பஸ்ஸில் செல்கையில், அலுவலகத்தில் இருக்கையில், வாகனம் ஓட்டுகையில் என்று எல்லா சந்தர்ப்பங்களிலும் முகநூலைத் திறந்து லைக் / கமெண்ட் / ஸ்டேட்டஸ் என ஏதோ ஒன்றைச் செய்த வண்ணம் உள்ள பலரைப் பார்க்கிறேன். கருத்தை வெளியிட்ட உடன் மற்றவர்களின் ரியாக்ஷன்களை அறியவும் கமெண்ட் பெட்டியிலேயே உரையாடவும் முடிகிற வசதிதான் இதன் பெரும் ஈர்ப்பு. எங்கெங்கோ தூர தேசங்களில் இருப்பவர்களைக் கூட நட்பாக்கி வைத்துக் கொள்ள முடிகிறது. சாதகங்கள் இருக்கும் அதே அளவுக்கு பாதகங்கள் இருந்தாலும் மக்களை முழுமையாக ஈர்த்து விட்டது, கத்தியை வீட்டுப் பயன்பாட்டிற்கும் வைத்திருக்கிறோம்தானே! ஆக, படிப்பவர்கள் மட்டுமல்ல.. நிறைய எழுத்தாளர்களும் அதன் பக்கம் சாய்ந்து விட்டார்கள் என்பதே என் கருத்து.

புத்தகங்களுக்கு வரவேற்பு : சமீபத்தில் ஒரு புத்தகக் கண்காட்சியில் என் நண்பரின் ஸ்டாலில் அமர்ந்திந்த பொழுது இரண்டு இளைஞிகள் ஸ்டாலுக்கு வந்தார்கள். ஒருத்தி ஒரு புத்த்கத்தை எடுத்துப் பார்த்து ரசித்தாள். “இதை வாங்கலாம்டிஎன்று மற்றவளிடம் காட்ட, “இந்த விஷயம் எல்லாமே கூகிள் சர்ச்ல போட்டா வந்துடும்டி. இதைப்போய் வாங்கணுமா?” என்றாள் அந்த இரண்டாமவள். நான் அவர்களை அருகில் சென்று. “இது மட்டும் இல்லம்மா... கதைகள். க்ட்டுரைகள் உட்பட எல்லாமே இணையத்துல கிடைக்கும். போய் அதையே நீங்க படிக்கறது உத்தமம். இங்க ஏன் டைம் வேஸ்ட் பண்றீங்க?” என, ஏதோ முத்தம் கேட்டு விட்டவனைப் போல என்னை முறைத்துவிட்டுப் போயினர் அவர்கள்.

இப்படி இணையத்தில் கிடைக்கும் வசதிகள் புத்தக விற்பனைக்கு வில்லனாக வந்தாகி விட்டது. நிறைய எழுத்தாளர்கள் இன்று இபுக் வெளியிடுவதில் ஆர்வம் காட்டத் தொடங்கி விட்டனர். இபுக்குகள் இலவசமாகவும், விலை குறைவாகவும் கிடைக்கக் கூடியவை என்பதால்  அதிகம் வரவேற்பை இனிவரும் காலங்களில் பெரும் என்பது என் கணிப்பு.  ஓரிரண்டு புத்தகங்களைப் பதிப்பித்த நான்நமக்கு இது தேவைதானாஎன்று இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஏனெனில்... தமிழ்நாடு அரசின் நூலகத் துறையில் ஆர்டர்களை பெரும் பதிப்பாளர்களே பெற்று முடித்துவிடும் நிலையில் சிறு பதிப்பாளர்கள் வருடம் முழுவதும் நடக்கும் புத்தகக் கண்காட்சிகளைத் தான் நம்பியிருக்க வேண்டி இருக்கிறது. அங்கும் மேற்சொன்ன காரணங்களால் மிகமெதுவான விற்பனை என்கிற நிலைதான்.பதிப்பித்த புத்தகங்களை நம் வீட்டில் விசேஷம் நிகழ்கையில் வருபவர்களுக்கு தாம்பூலக் கவரில் போட்டுத் தர வேண்டயதுதான் என்பதே (சுடுகின்ற) நிஜம். கூட்டிக் கழிச்சுப் பார்த்தா.... புத்தகங்களுக்கான வரவேற்பு இனி குறையும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.///

டிஸ்கி:- மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது சகோ . புத்தகம் படிக்கும் வழக்கம் இரண்டு தலைமுறையாகக் குறைந்து வருகிறது. இலக்கியம் வாழ்வுக்குத் தேவையில்லை என கலை அறிவியல் கல்லூரிகளே நினைக்கின்றன. என்ன சொல்ல.. பகிர்வுக்கு நன்றி பாலா.

8 கருத்துகள்:

 1. மின்னல் வரிகளாய் அருமையான் பேட்டி..

  பதிலளிநீக்கு
 2. அவர் பாணியில் நகைச்சுவை கலந்து நன்றாகவே சொல்லியிருக்கிறார், தனது கருத்துகளை. வெல்டன் கணேஷ்!

  பதிலளிநீக்கு
 3. வருத்தப்படும் உண்மைகளை வாத்தியார் சரியாகச் சொல்லியுள்ளார்...

  பதிலளிநீக்கு
 4. நல்ல கருத்துகளை நறுக்கென்று கூறியுள்ளார் நண்பர் பால கணேஷ். //இவரின் புன்னகையே இவரின் பலம். முகமும் அகமும் மலரப் பேசுவார் சகோ கணேஷ்.// மிகவும் சரி.

  பதிலளிநீக்கு
 5. கடந்த நான்கு நாட்களாக பெங்களூரு சென்றிருந்ததால் வலைப்பக்கம் வர முடியவில்லை. இன்றுதான் கவனிததேன். மிக அழகாக என் கருத்துக்களை தங்கள் தளத்தில் பதிவிட்ட உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி. ‘நாலு பேரு நாலு விதமாச் சொல்வாங்க’ன்னு இல்லாம... பாராட்டி, ரசித்து கருத்துச் சொன்ன அந்த ‘நாலு பேருக்கு’ (விசேஷ) நன்றி,,,!

  பதிலளிநீக்கு
 6. வாத்தியார் சொன்னா கரீட்டா தான் இருக்கும்..!! ;-)

  பதிலளிநீக்கு
 7. அட்டகாசமான பதில்கள் வாத்தியாரே... புத்தகச் சந்தையில் நீங்கள் அந்த குமரிகளிடம் அப்படியொரு பதில் கூறவில்லைஎன்றால் தான் ஆச்சரியம் :-)

  பதிலளிநீக்கு
 8. நன்றி ராஜி

  நன்றி ஸ்ரீராம்

  நன்றி தனபாலன் சகோ

  நன்றி கேஜிஜி

  நன்றி கணேஷ்

  நன்றி கோவை ஆவி..

  நன்றி சீனு.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...