எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 23 பிப்ரவரி, 2012

செல்..பேசி.. காதல்..

செல்.. பேசி.. காதல்..
********************************

முகங்களை படங்களில் மட்டுமே
பார்த்துக் காதலித்தார்கள்.

குரல்களின் தரிசனத்துக்காய்
ஆறுகாலப் பொழுதும் தவமிருந்தார்கள்.

தேவன் தேவியின் ததாஸ்துவோடு
வட்டமிடத் தொடங்கின தலைமேலே குரல்கள்.


குரல்களைக் கைப்பற்றியவர்கள்
வாய்க்குள் குலாவியபடி அலைந்தார்கள்.

பூங்காக்களில் அவை பூத்தன.
சாலைகளில் பச்சையாய் மிளிர்ந்தன.

அலுவலகங்களில் அங்கம் வகித்தன.
படுக்கை அறையில் சங்கமித்தன.

தனக்குத்தானே புன்னகைத்தன.
பைத்தியம்என எண்ண வைத்தன.

காதுக்குள் கவ்விய குரல்களோடு
குடும்பம் நடத்தத் தொடங்கினார்கள்

யாரும் கண்டுணராமல் குரல்களோடு
புணர்ந்தபடி இருந்தார்கள்.

குரல்கள் அலைந்தன
குரல்கள் கொஞ்சின.
குரல்கள் சிணுங்கின.
குரல்கள் சரசமிட்டன.

இருகுரல்கள் குலவிய இடத்தில்
இன்னும் சில பல புகுந்தன.

நட்பென்ற பெயரில்.,
குடும்பம் என்ற பெயரில்.

பலகுரல்கள் ஒலிக்கத்துவங்கியதும்
கருவிகள் பிசிறடிக்க ஆரம்பித்தன.

காது கேட்பானில் அவை
புற்றை விளைத்தன.

கேள்விகள் நாகங்களாக
கொத்தத் துவங்கின.

மூளை வரை கரையான்கள்
அரிக்கத்துவங்கின குளறிய குரல்களில்.

குரல்களைக் கைவிட நினைத்தார்கள்
கைப்பற்றியவர்கள், விடுபடும் வேட்கையில்.

விடுபட்ட குரல்கள் தேடுதல் வேட்டையைத்
துவங்கின வேறொரு இடம் நோக்கி


டிஸ்கி .1. .:- இந்தக் கவிதை ஞாயிறு, ஜனவரி 29, 2012 அதீதம் காதல் சிறப்பிதழில் வெளிவந்தது.

டிஸ்கி.2. :- அதீதத்துக்கு அனைத்து வலைப்பதிவரும் அனுப்பலாம் ( சகோ கணேஷ் கவனத்துக்கு ஸ்பெஷலாக..:) . அனுப்ப வேண்டிய ஐடி .

"Atheetham articles" <articlesatheetham@gmail.com>. நன்றி மக்காஸ்.:)

13 கருத்துகள்:

  1. //குரல்களைக் கைவிட நினைத்தார்கள்
    கைப்பற்றியவர்கள், விடுபடும் வேட்கையில்.

    விடுபட்ட குரல்கள் தேடுதல் வேட்டையைத்
    துவங்கின வேறொரு இடம் நோக்கி//

    நல்ல கவிதை தோழி
    இறுதி வரிகளில் மிரள்கிறது கவிதை

    பதிலளிநீக்கு
  2. கவிதை அருமை சகோதரி...மனதை கவர்ந்த சிறந்த வரிகள்.நன்றி.

    பதிலளிநீக்கு
  3. செல்பேசி... இன்றைய காதல் இப்படித்தான். இது பொய்காதல். கடைசியில் வேறிடம் நோக்கி செல்கிறது.

    பதிலளிநீக்கு
  4. செல் காதல்கள்
    செல்லுவது எங்கே என்று
    ஜீ டிவி யில் நிர்மலா பெரியசாமி அவர்கள் நடத்தும்
    சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தினமும்
    இரவு 9 மணிக்கு பாருங்கள்.
    காதல் வசப்பட்டு
    பெற்றோரையும் இழந்து
    கணவனாலும் புறக்கணிக்கப்பட்டு,
    கைக்குழந்தைகளுடன் அவதியுறும்
    இளம் பெண்கள் குமுறலை,
    ஓயாத ஓலங்களைக்
    கேட்டாவது
    எண்ணித் துணிக கருமம், துணிந்தபின்
    எண்ணுவது என்பது இழுக்கு
    என்னும் வள்ளுவனின் வாக்கை
    நினைவு வைத்துக்கொள்ளட்டும்.


    சுப்பு ரத்தினம்.

    பதிலளிநீக்கு
  5. செல் காதல்கள்
    செல்லுவது எங்கே என்று
    ஜீ டிவி யில் நிர்மலா பெரியசாமி அவர்கள் நடத்தும்
    சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தினமும்
    இரவு 9 மணிக்கு பாருங்கள்.
    காதல் வசப்பட்டு
    பெற்றோரையும் இழந்து
    கணவனாலும் புறக்கணிக்கப்பட்டு,
    கைக்குழந்தைகளுடன் அவதியுறும்
    இளம் பெண்கள் குமுறலை,
    ஓயாத ஓலங்களைக்
    கேட்டாவது
    எண்ணித் துணிக கருமம், துணிந்தபின்
    எண்ணுவது என்பது இழுக்கு
    என்னும் வள்ளுவனின் வாக்கை
    நினைவு வைத்துக்கொள்ளட்டும்.


    சுப்பு ரத்தினம்.

    பதிலளிநீக்கு
  6. செல் காதல்கள்
    செல்லுவது எங்கே என்று
    ஜீ டிவி யில் நிர்மலா பெரியசாமி அவர்கள் நடத்தும்
    சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தினமும்
    இரவு 9 மணிக்கு பாருங்கள்.
    காதல் வசப்பட்டு
    பெற்றோரையும் இழந்து
    கணவனாலும் புறக்கணிக்கப்பட்டு,
    கைக்குழந்தைகளுடன் அவதியுறும்
    இளம் பெண்கள் குமுறலை,
    ஓயாத ஓலங்களைக்
    கேட்டாவது
    எண்ணித் துணிக கருமம், துணிந்தபின்
    எண்ணுவது என்பது இழுக்கு
    என்னும் வள்ளுவனின் வாக்கை
    நினைவு வைத்துக்கொள்ளட்டும்.


    சுப்பு ரத்தினம்.

    பதிலளிநீக்கு
  7. காது கேட்பானில் அவை | புற்றை விளைத்தன.
    கேள்விகள் நாகங்களாக | கொத்தத் துவங்கின.
    மூளை வரை கரையான்கள் | அரிக்கத் துவங்கின குளறிய குரல்களில்.

    -யதார்த்தம் பேசும் வரிகள். நானும் உணர்ந்திருக்கிறேன். கவிதையின் முத்தாய்ப்பு வரிகள் அருமைக்கா... (ஈமெயில் ஐடி நோட் பண்ணிக்கிட்டேன்க்கா... ஸ்பெஷல் தாங்க்ஸ் டு யு)

    பதிலளிநீக்கு
  8. Congrats Sister. Cell phone's role in Love is great. It achieves a speed of communication more than wind speed or probably even the speed of mind.

    Let your poetry flow around in all directions.

    Lakshmanan

    பதிலளிநீக்கு
  9. அரிக்கத்துவங்கின குளறிய குரல்களில்.
    பயனுள்ள கவிதைதான்..

    பதிலளிநீக்கு
  10. கணேஷ் குறிப்பிட்டுள்ள வரிகளையே நானும் குறிப்பிட விரும்புகிறேன். தன்னை மறந்து, தன் சுற்றம் மறந்து, உலகை மறந்து எந்நேரமும் ஒரு போதை வஸ்துவைப் போல் இன்றையத் தலைமுறையை ஆக்கிரமித்திருக்கும் செல்பேசியின் தவறானப் பயன்பாட்டை இதைவிடவும் நாசுக்காய் சொல்ல இயலாது. மனம் நெருடிக்கொண்டே இருக்கின்றன வரிகள்.

    பதிலளிநீக்கு
  11. நன்றி செய்தாலி

    நன்றி குமரன்

    நன்றி விச்சு

    நன்றி சுப்பு

    நன்றி கணேஷ்

    நன்றி லெக்‌ஷி

    நன்றி குணா

    நன்றி சாந்தி

    நன்றி கீதா

    நன்றி யாதும் ஊரே யாவரும் கேளீர்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...