எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 22 பிப்ரவரி, 2012

துண்டான முகம்..


துண்டான முகம்.:-
******************************

இன்னொன்றான முகம்
கழன்று விழுந்தது நேற்று.

சம்பங்கித் தோட்டத்தில் நடந்தது
இந்த முகம் உரிக்கும் உற்சவம்.

ஆட்டில் உரிந்த தோலாய்
கவிச்சியடித்துக் கிடந்தது அன்பு.


முகத்தை ஒரு வட்டமிட்டு
சுருட்டி இழுத்தது சூரிக்கத்தி.

உருண்ட ரப்பர் தோலாய்
உதறி விழுந்தது முகம்.

ஒருசிலமுறை முன்பே
உரிக்கப்பட்டிருந்தாலும் வலித்தது.

சூரிக்கத்திகள் மாறுமே தவிர
அவை வெட்டும் முக அளவு மாறாது.

அதிக சேதாரமில்லாமல் உரிக்கப்
பழகி வருகின்றன சூரிக்கத்திகள்.

ரத்தம் கசியும் கண்ணோரம்
புதைந்த நம்பிக்கையை ருசித்தபடி

உதிர்ந்து விழும் சம்பங்கிகள்
ஒவ்வொன்றாய் ரத்தச் சிவப்பானபடி..

டிஸ்கி..1. :- இந்தக் கவிதை ஞாயிறு, டிசம்பர் 11, 2011 அதீதம் இதழில் வெளியானது.

டிஸ்கி..2..:- மார்ச் மாத பெண்கள் தினத்துக்கு அதீதத்துக்கு படைப்புக்கள் அனுப்புங்க மக்காஸ். கதை, கவிதை, கட்டுரை அனுப்ப வேண்டிய ஐடி, thenulakshman@gmail.com.


6 கருத்துகள்:

  1. அழகுத் தமிழில் அற்புதமான விஷயத்தை இயம்பிய கவிதை மிக நன்று. பெண்கள் தினத்துக்கு நாங்கள் படைப்புகள் அனுப்பலாமா? கடைசித் தேதி என்று எதுவும் உண்டா தேனக்கா...

    பதிலளிநீக்கு
  2. எளிதான தமிழில் அழகான கவிதை..அர்த்தமுள்ள வரிகள் ஒவ்வொன்றும் அருமை..நன்றிகளோடு.

    சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

    பதிலளிநீக்கு
  3. அதிக முறை உரித்து உரித்து சேதாரங்கள் தவிர்க்கப் பழகிவிட்டன சூரிக்கத்திகள்! கூடவே வக்கணையாய்க் காட்டப்பட்டு உரிபடப் பழகிவிட்டன முகங்களும். நல்ல தேர்ச்சிதான். நாவெனும் சூரிக்கத்தியால் சுயமறுபட்டநிலையைச் சொல்லியவிதம் மனம் சுண்டியிழுக்கிறது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி கணேஷ்

    நன்றி ராஜி

    நன்றி குமரன்

    நன்றி கீதா

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...