எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

கம்பன் விழாவில் படத்திறப்பும் புத்தக வெளியீடும் ..பரிசுகளும்

படத்திறப்பு:-
அமரர் திரு ஜி.கே. சுந்தரத்தின் படத்தை புதுச்சேரிக் கம்பன் கழகத்தலைவர் திரு ந. கோவிந்தசாமி திறந்து வைத்தார் ..கம்பன் திருநாளுக்காகவும் கம்பனடிப்பொடிக்காகவும் தமது 93 ஆம் வயதிலும் உற்சாகம் குன்றாமல் விசிறி மடிப்பு அங்கவஸ்திரமும் சந்தனப்பொட்டும் அணிந்து (எங்கள் ஐயாவை நினைவு படுத்துவது போல ) சந்தோஷமாகப் பேசினார்.. பேச்சின் இடையே அண்ணாவின் ‘”தீ பரவட்டும்” என்ற வாசகத்தையும் பாரதிதாசனின் ‘”கம்ப ராமாயணத்தைக் கொளுத்த வேண்டும்” என்ற வாசகத்தையும் நினைவு கூர்ந்தார். இவர் கலந்து கொண்டு அனைவரின் பேச்சையும் ரசித்துக்கேட்டதே மிகச் சிறப்பு...


புத்தக வெளீயீடு:-
கம்பனில் நான்மறை மற்றும் திரு சேதுபதி எழுதிய வரலாறு நடந்த வழியில்:- திரு பழ. பழனியப்பன் நிறுவி உள்ள மீனாக்ஷி பழனியப்பா அறக்கட்டளை ஆய்வுச்சொற்பொழிவு...”கம்பனில் நான்மறை ”.. இது பற்றி சைவ சித்தாந்தச் செம்மணி .. .. கம்பனில் “கல்லாத கடலும் வேதப் பொருளும்“ சாஸ்த்திரம் உரை எழுதிய முதல்வர் திரு. பழ. முத்தப்பன் பேசினார்..

வரலாறு நடந்த வழியில் திரு சேதுபதி
அவர்களால் எழுதப் பெற்றது ..அதில் ஒக்கூர் பக்கத்தில் உள்ள ஊர்க்கோயில்கள் சிதைவுற்றுக் கிடக்கும் வரலாறு..ஒரு ஆவணப்படம் போல் பதிவு செய்து உள்ளது .. வெட்டுவான் கோயில் பற்றியும் .
டாக்டர் சேதுபதி பற்றி தினமணி ஆசிரியரும் .திரு பழனியப்பனும் நெகிழ்ந்தார்கள்..”எங்களோடு வளர்ந்த இளவல் சேதுபதி”(தினமணியில் இவர் பல கட்டுரைகளை எழுதி உள்ளார்).என திரு வைத்யநாதனும்.இது நாட்டரசன் கோட்டை கம்பன் கோயிலைப் பற்றியும் கூறுகிறது என திரு பழனியப்பனும் புகழ்ந்தார்கள்.. கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பதை அங்கே கண்டேன்.. இந்தப்
புத்தகத்தை திரு அய்க்கண் வெளியிட்டார்கள். “உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்” என்ற பாடலையும் குறிப்பிட்டார்கள் ..

திரு முத்தப்பன் தனதுரையில் ”வேதம் தனி மனிதரால் சொல்லப்படவில்லை மனிதர்களால் அல்ல... அது இறைவனால் சொல்லப்பட்டது”. என்றார்..மேலும் வேதத்தின் சொல் போல் ராமனின் அம்பறாத்தூணியில் அம்பு எடுக்க எடுக்க குறையாமல் வந்தன என்றும் “வேதத்தை ஓதுவித்தான் வசிஷ்டன் ..வேதத்தின் பரம் பொருளான இறைவனுக்கே உபநயனம் செய்துவித்தான் என்றும் ராவணன் வேதம் படித்தவன் என்று சீதையைச்சுற்றி இருக்கக் கூடிய அரக்கிகள் சொல்கிறார்கள் “ஐயன் வேதம் ஆயிரம் அறிவான் அறிவாளன்” என்று வேதம் படித்த ராமனுக்கு இணையாக வேதம் அறிந்த ராவணன் இணையாகச் சொல்லப் பட்டுள்ளதாக குறிப்பிட்டார்
இதிலிருந்து போட்டி போடவும் ஒரு தகுதி ., சரிசமமான அறிவு .,இணைத்திறமை வேண்டும் என்பது புலனாகிறது..

மு. மு. இஸ்மாயில் சொல்வதாக,” இரண்யனுடைய சரித்திரம் வேதத்தின் பெருமைக்காகச் சொல்லப்பட்டது ..பிரகலாதன் ..இறைபக்தனாக இருந்ததால் வேதம் படிக்க வேண்டியதில்லை என்ற வேதத்தின் சிறப்பு பற்றிக் கூறுகிறார்.. இரண்யனுக்கு நான்மறைச் சிறப்பைச் சொல்ல.. வேதம் என்பது இன்றியமையாதது அது இறை பக்தனாக இருக்கும் பட்சத்தில் தானே அனைத்தும் அடைந்து விடுகிறது “ என்று கூறியதாக பகிர்ந்தார்..
அடுத்து கம்பனில் நான்மறையை மதுரைக் கம்பன் கழக துணைத்தலைவர்... வேதத்தின் வசுதாரா திரு சங்கர சீதாராமன் வெளியிட திரு ஏ. ஆர். ராமசாமி பெற்றுக் கொண்டார்கள்.

திரு சங்கர சீதாராமன் தனதுரையில் மேலைச் சிவபுரியின் செந்தமிழ்க்கல்லூரி முதல்வர் பழ முத்தப்பன் பற்றி புகழ்ந்துரைத்தார்கள். உச்சிமேல் புலவர் நச்சினார்க்கினியர் என்று கூறினார்
புத்தகம் பற்றிக் கூறும் போது ,”மாத்ரு தேவோ பவ என்று ராமன் தாயரை நினைந்து நைந்தான்..பித்ரு தேவோபவ என்று தந்தையை நினைந்தான்.. ஆச்சார்ய தேவோ பவ என்று வசிஷ்டரை நினைந்து வணங்கினான்.. அதிதி தேவோ பவ என்பதற்கு குகன் சபரி ஆகியோரை படைத்தான் கம்பன் என்றார்.. சீதையை வேதத்தின் மறுவடிவு ..வேதமாதா என்றும் தசரதனின் நான்கு குழந்தைகளும் நான்கு வேதம் போல வளர்ந்தார்கள் என்றும் கம்பனே வேதம் அதில் யஜுர் வேதம் வருகிறது சாமவேதத்தின் சங்கீத பாட்டு உள்ளது என்றும் கூறினார் முடிவில் கம்ப காவியமே வேதம் என முடித்தார்..
பள்ளத்தூர் திரு பழ பழனியப்பன் எழுதிய கம்ப ராமாயண உரை- யுத்த காண்டம் (4தொகுதிகள் ) இதை புதுச்சேரி கம்பன் கழகத் துணைத்தலைவர் திரு வி.பி. சிவக்கொழுந்து வெளியிட ராசபாளையம் திரு முத்துகிருஷ்ண ராஜா பெற்றுக் கொண்டார்கள்..பாங்க் ஆஃப் பரோடாவில் பணி புரிந்தவர் பழனியப்பன்.. வைஷ்ணவி கோயிலில் அமர்ந்து எல்லா ஏடும் உரையும் வைத்துக்கொண்டு (அ. சொ. பெ. கருத்துரையுடன் முதல் மூன்று வந்து விட்டது).. யுத்த காண்டம் உரை எழுதி உள்ளார்...

புதுச்சேரியின் சடையப்ப வள்ளல் திரு சிவக்கொழுந்து எனக் கூறலாம் என கம்பனடி சூடி குறிப்பிட்டார்.. உணவு விடுதி நடத்தும் இவர் (க்ரீன் பார்க்) மாசி மகமன்று யார் சென்றாலும் உணவிடுவார் என்றார்..மாலை நேரத்தில் படிக்கிறவர்களுக்கும் உணவு அளித்து விடுதி நடத்துகிறார் என்றார்.
திரு சிவக்கொழுந்து தனதுரையில் திரு இராம. வீரப்பனின் அணிந்துரை பற்றிக் குறிப்பிட்டார் “பூவோடு சேர்ந்த்த நாறும் மணப்பது போல” தானும் என கூறினார்.. கம்பனைத்தொட்ட அனைவரும் புகழின் உச்சிக்கே போய் இருக்கிறார்கள்.. அதுவே தன்னை அடையாளம் காட்டியுள்ளது எனவும் எனவே அடுத்த பிறப்பிருந்தாலும் கம்பன் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டு மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்..

பரிசுகள்:-போட்டிகளில் பரிசு பெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணாக்கியருக்கு மர்ரே ராஜம் பரிசு., அ. சொ. அ. மீ னாட்சி ஆச்சி பரிசு., சா. நா. நாராயணன் அறக்கட்டளைப் பரிசு., அமெரிக்க உடையப்பா பரிசு மற்றும் ந. சுப்பு ரெட்டியார் பரிசு வழங்கப்பட்டது..அடுத்த வருடத்தில் இருந்து விஸ்வாஸ் அறக்கட்டளை சார்பில் கம்பனில் இசைப் பாடல் போட்டியும் நடத்தி பரிசு வழங்கப்படும் என திரு சங்கர சீதாராமன் அறிவித்தார்..

டிஸ்கிஅ;-பரிசு பெற்ற குழந்தைகளோடு குழந்தைகளாக சந்தோஷத்துடன் நானும் சில புத்தகங்களையும் என் மாமியார் சில சிடிக்களையும் வாங்கிக் கொண்டு வந்தோம்..
அடுத்த இடுகையில் கவிக்கோவின் அருமையான பேச்சைப் பகிர்வேன்..

32 கருத்துகள்:

  1. மீண்டும் ஒரு சிறந்த பகிர்வு!!

    //குழந்தைகளாக சந்தோஷத்துடன் //

    இது தான வாழ்கையில் வேணும்... :-)

    பதிலளிநீக்கு
  2. //அடுத்த வருடத்தில் இருந்து விஸ்வாஸ் அறக்கட்டளை சார்பில் கம்பனில் இசைப் பாடல் போட்டியும் நடத்தி பரிசு வழங்கப்படும் என திரு சங்கர சீதாராமன் அறிவித்தார்..//

    நல்லது...அக்கா...
    அருமை.... கவிக்கோ-வுக்காக காத்து இருக்கிறேன்...தொடரட்டும் பகிர்வுகள்...

    பதிலளிநீக்கு
  3. நல்ல தொகுப்பு..கவிக்கோ பேச்சை எழுதுங்கள்...

    பதிலளிநீக்கு
  4. //அடுத்த இடுகையில் கவிக்கோவின் அருமையான பேச்சைப் பகிர்வேன்..//

    ஆவலாய் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  5. மிக பெரிய ஆச்சர்யம். இலக்கிய விழாவின் நிகழ்வினை, இந்தளவு ஈடுபாட்டுடன் பகிர்ந்து கொள்ளுதல். எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    நண்பர்களே

    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
    உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
    நன்றி
    தலைவன் குழுமம்

    http://thalaivan.com/


    Hello

    You can put our logo and voting button on your blogspot and get more visitors

    http://thalaivan.com/

    பதிலளிநீக்கு
  7. நல்ல தொகுப்பு..கவிக்கோ பேச்சை எழுதுங்கள்...

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    நண்பர்களே

    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
    உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
    நன்றி
    தலைவன் குழுமம்

    http://www.thalaivan.com

    Hello

    you can register in our website http://www.thalaivan.com and post your articles

    install our voting button and get more visitors

    http://www.thalaivan.com/button.html


    Visit our website for more information http://www.thalaivan.com

    பதிலளிநீக்கு
  9. நல்ல பதிவு அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. நன்றி செந்தில் நாதன் உங்க வரவுக்கும் கருத்துக்கும் ..உங்க செல்போனில் தமிழ் படிப்பது பற்றீய இடுகை அருமை

    பதிலளிநீக்கு
  11. நன்றி சீமான் கனி ரோஜா கவிதையா காவியமா

    பதிலளிநீக்கு
  12. புலவன் புலிகேசி சீக்கிரம் வருக டரியல் தருக

    பதிலளிநீக்கு
  13. சங்கவி உங்கள் தோழி பற்றீ படித்து விட்டு வருந்தினேன்

    பதிலளிநீக்கு
  14. நன்றி சை கொ ப விருதுக்கும் பகிர்வுக்கும்

    பதிலளிநீக்கு
  15. நன்றீ ரமேஷ் உங்க வரவுக்கும் கருத்துக்க்கும்

    பதிலளிநீக்கு
  16. நன்றி ட்ரீமர் உங்க இடுகையில் உயிர்பிழைத்தவர் பற்றீய விபரம் அதிசயம்

    பதிலளிநீக்கு
  17. நன்றி சரவணகுமார் ..நண்பர் நலமா

    பதிலளிநீக்கு
  18. நன்றி LK உங்க முதல் வாழ்த்துக்கும் வரவுக்கும்

    பதிலளிநீக்கு
  19. நன்றி LK உங்க முதல் வாழ்த்துக்கும் வரவுக்கும்

    பதிலளிநீக்கு
  20. நன்றீ தலைவன் உங்க முதல் வாழ்த்துக்கும் வரவுக்கும்

    பதிலளிநீக்கு
  21. நன்றி மேனகா உங்க சாலட் அருமை

    பதிலளிநீக்கு
  22. நன்றீ அக்பர் உங்க கதை அருமை

    பதிலளிநீக்கு
  23. நன்றி சசிகுமார் உங்க புகழும் மென்மேலும் ஓங்கட்டும்

    பதிலளிநீக்கு
  24. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    பதிலளிநீக்கு
  25. காரைக்குடி கம்பன் விழா நிகழ்வுகள் குறித்த பகிர்வுகள் அனைத்தும் படித்தேன். அதற்கான பின்னூட்டமும் இட்டேன். எல்லாமே விழாவுக்கு நேரில் வந்து அனுபவித்தது போல ஒரு சுகானுபவத்தைக் கொடுத்தன. எல்லாம் அருமை.

    ஆமா, இப்ப அக்காவுக்கு வேலைப்பளு கூடுதலோ... மறுமொழிகள் உங்கள் வலைப்பூவில்தான் உடனுக்குடன் வரும். சில நாட்களாக இல்லை. அதனால்தான் கேட்டேன்.

    இன்னும் நிறைய எழுதுங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...