எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 11 ஜனவரி, 2010

நாண(ந)யம் நாகப்பன்

"தோட்டத்தில் எல்லாவிதைகளும்
ஒரே நேரத்தில் விதைக்கப்பட்டு
ஒரே சூரியன் கீழ்
ஒரே கிணற்றின் தண்ணீரில்...

ஒன்று மட்டும் ஆழமாய் வேர்பாய்ச்சி
அகலமாய் கிளைபரப்பி
அண்டமெல்லாம் விரிந்து.... "

அதுதான் நாண(ந)யம் நாகப்பன் அவர்கள் .

வங்கிகள்., பத்திரிக்கை .,பல்கலைகழகங்கள்.,
பங்கு வர்த்தகம் என்று எல்லாவற்றிலும்
வெற்றிக்கொடி நாட்டும் சமூகத்தில் பிறந்தவர்..
எம்.பி.ஏ. பட்டதாரி.. உழைத்துப் பொருளீட்டத்
தேவை இல்லாத குடும்பத்தில் பிறந்தும் தனக்கென
ஒர் முத்திரை பதித்தவர் ..

சென்னைப் பங்கு சந்தையின் இயக்குநர்களில்
ஒருவர்.. தமிழகத்தின் முன்னணிப் பங்குத்
தரகர்களில் ஒருவர் ..

பங்கு வர்த்தகம் ஏற்ற இறக்கம் காணும்
போதெல்லாம் இவரது பேட்டியை தவறாது
அனைத்து தொலைக்காட்சிகளிலும் காணலாம்..
பணம் செய்ய விரும்பு என்ற இவரதுதொடர்
விகடனில்வந்தபோது தினம் தவறாது
படித்தவர்களில் நானும் ஒருத்தி..
பணம் செய்யும் யுக்திகளைவிட பணம் பண்ண
வேண்டும் என்ற உத்வேகம்தான் முக்கியம்
என்று கூறுவார் இவர்..

அஞ்சலக சேமிப்புத்திட்டம்., தங்கத்தில் முதலீடு
செய்வது., இன்ஷுரன்ஸ்., ஃபிக்ஸட் டெப்பாஸிட்
இவற்றைவிட ம்யூச்சுவல் ஃபண்ட்., பங்குச்
சந்தையில் முதலீடு செய்வது சிறந்தது எனக்
கூறுவார்.. தினம் தினம் வாங்கி விற்பதை விட
நீண்ட கால முதலீடே சிறந்தது என்பதும்
அவர் கருத்து..

நாணயம் விகடன் சார்பாக பல்வேறு வாசகர்கள்
முதலீட்டாளர்களுடன் தமிழகத்தின் பல்வேறு
ஊர்களில் செல்வத்தைப் பெருக்கும் வழிகள்
பற்றிய கூட்டங்கள் நடத்தி இருக்கிறார்..

தன்னைத்தானே செதுக்கிக் கொண்ட சிற்பம் இவர்..
96 வயதிலும் (இறக்கும் ஒரு வாரம் முன்பு வரை
கூட) ஷேர் பிஸினஸ் செய்துவந்தவர் இவருடைய
தந்தை திரு. வள்ளியப்ப செட்டியார்.. இவர்
தந்தையிடம் பெற்றதும் தானே கற்றதும் அதிகம்..

மத்திய நிதி அமைச்சர் சமூகத்தின் வழி வந்த
அவர் விகடன் எனர்ஜி பக்கங்களில் சொன்னதை
உங்களிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்...

இன்றைய இளைஞர்களுக்கு மிக மிக
முக்கியமானது நிதி திட்டமிடுதல்.. இளம்
வயதிலேயே நிதி திட்டமிடுதலைத் தொடங்க
வேண்டும்..இளைஞர்கள் தங்களின் ஆடம்பரத்
தேவைகளைக் குறைத்துக் கொண்டு எளிய
வாழ்க்கை வாழ வேண்டும்.. அப்போதுதான்
சந்தோஷம் ஆயுள் வரை நீடிக்கும்...

எனவே மக்களே..! பணம் செய்ய விரும்புங்க..!
உங்களுக்கும் உங்க குடும்பத்தார்க்கும்
என் பொங்கல் வாழ்த்துச் செய்தி இதுதான்...!!!

50 கருத்துகள்:

  1. ஆச்சி அவிக சொந்தக்காரவுகளா? செம ரெக்கமண்டேஷனாருக்கு?! (காத கொண்டாங்க எங்கிட்ட 2 கோடி ரூவா கேஷா இருக்கு. அத என்ன பன்ன? ஷ்ஷ் சீக்ரெட்டா சொல்லுங்க)

    பதிலளிநீக்கு
  2. இன்றைய இளைஞர்களுக்கு மிக மிக
    முக்கியமானது நிதி திட்டமிடுதல். .........சும்மாவே மக்கா விவரமாத்தான் இருக்காக. இதில் இப்படி வேற உசுப்பேத்தி விட்டுட்டா..... அக்கோவ், தகவல்களுக்கு நன்றி. பயனுள்ள இடுகை.

    பதிலளிநீக்கு
  3. என்னது நிதி திட்டமிடனுமா? அது எங்க பரம்பரைக்கே பழக்கமில்லைங்க..

    பதிலளிநீக்கு
  4. திட்டமிடுதலும், எளிமையும் வெற்றி வாழ்க்கைக்கான இரண்டு கண்கள். தமிழர் திருநாளுக்கான வாழ்த்துக்களுடன் சிறந்த பகிர்வு. நன்றி

    பதிலளிநீக்கு
  5. பொங்கல் வாழ்த்துகள். நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  6. தமிழர் திருநாள் வாழ்த்துகள் தேனம்மை

    பதிலளிநீக்கு
  7. இனிய பொங்கல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  8. நன்றி அண்ணாமலையான்

    ஐசிஐசிஐ டைரக்ட் டாட் காம் இல் டீமேட் அக்கவுண்ட் ஆரம்பிச்சு உங்க ஷேர் அக்கவுண்ட் ஆரம்பிச்சு பணத்தைப் பெருக்குங்க

    பதிலளிநீக்கு
  9. அட இன்னைக்குத்தான் சாலமோனுக்கு ..உங்க கண்ணாவுக்கு பிறந்த நாளா சித்து..?

    உங்க திருமண நாளுக்கும் சேர்த்து வாழ்த்துக்கள் டா சித்து

    வாழ்நாள் பூராவும் இதேபோல சந்தோஷமா இருங்க

    பதிலளிநீக்கு
  10. இனிய பொங்கல் வாழ்த்துகள்!!

    பணம் செய்ய விரும்புங்க..! சரியாய் சொன்னிங்க!

    பதிலளிநீக்கு
  11. என்னது திட்டமிடனுமா?

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  12. அப்பாடா.. கவிதை தவிர வேற எதுவும் எழுத மாட்டீங்களான்னு கேட்டதற்கு ஒரு அருமையான பதிவு.ஷேர் மார்க்கெட் பற்றி எனக்கும் கொஞ்சம் தெரியும்.

    இவரின் உற்ற நண்பரும் இரட்டையராக கருதப்படும் புகழேந்தியை பற்றியும் ஒரு வரி சொல்லியிருக்கலாம்.

    நல்ல ஆரம்பம். பொங்கல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. நானும் ஐந்து வருடம் முன்பு டே ட்ரேடிங் செய்து பின் அது சரியான வழியில்லை என அறிந்து லாங் டெர்ம் இன்வெஸ்ட்மென்ட் தான் சரி என்று திரும்பிவிட்டேன். நானும் அவரது புத்தகங்களை படித்துள்ளேன்.

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  14. ////இன்றைய இளைஞர்களுக்கு மிக மிக
    முக்கியமானது நிதி திட்டமிடுதல்.. இளம்
    வயதிலேயே நிதி திட்டமிடுதலைத் தொடங்க
    வேண்டும்..இளைஞர்கள் தங்களின் ஆடம்பரத்
    தேவைகளைக் குறைத்துக் கொண்டு எளிய
    வாழ்க்கை வாழ வேண்டும்.. ////

    எல்லோரும் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம். நல்ல இடுகை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  15. இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள், திட்டமிடல் - சரியா சொன்னிங்க‌

    பதிலளிநீக்கு
  16. என்னதான் திட்டமிட்டாலும் கையில் இருப்பது ALWAYS போதாது :(

    அறிவுரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  17. என்னது...பணத்தைப் பெருக்கணுமா? தப்புங்க...நான் கீழயே போடலையே..அப்புறம் என் பெருக்கணும்..நான் பெருக்க மாட்டேன் பொறுக்கி வச்சுப்பேன்..

    பதிலளிநீக்கு
  18. அக்கா, நானும் அவரது நல்ல கருத்துக்களுக்கு ரசிகை.

    /இளைஞர்கள் தங்களின் ஆடம்பரத்
    தேவைகளைக் குறைத்துக் கொண்டு எளிய
    வாழ்க்கை வாழ வேண்டும்.. அப்போதுதான்
    சந்தோஷம் ஆயுள் வரை நீடிக்கும்//

    யார் கேக்குறாங்க...ஹூம்...

    பதிலளிநீக்கு
  19. பகிர்வுக்கு நன்றி.

    நானும் வாசித்திருக்கிறேன்.

    பொங்கல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. ஆஹா...இன்னும் கொஞ்சம் விரிவா எழுதி இருக்கலாம்..

    பதிலளிநீக்கு
  21. மிக நல்ல அலசல்.... இந்த காலத்திற்கு மிகவும் பொருத்தமானது...

    சிக்கனம் நாட்டை காக்கும்.... சேமிப்பு வீட்டை காக்கும்... 7,000 அளவு கீழே போன பங்கு சந்தை குறியீட்டு எண் இப்போது சூடு பிடித்து 18,000 அளவை எட்ட இருக்கிறது... இது சிறந்த முன்னேற்றம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்...

    சரியாக திட்டமிட்டு, பங்கு சந்தையில் நுழைந்தால், வெற்றி நிச்சயம்...

    உங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்... என் பொங்கல் சிறப்பு பதிவு இதோ...

    பொங்கலோ பொங்கல் http://jokkiri.blogspot.com/2010/01/blog-post.html

    பதிலளிநீக்கு
  22. கோபிநாத் எப்படி இப்படி சொல்லிட்டா விட்டுடுவமா

    நாங்க என்ன எம் எல் எம் பிஸினஸா செய்யக் கூப்பிட்டோம் ஷேர் பிஸினஸ்தானே

    பதிலளிநீக்கு
  23. நன்றி தமிழுதயம் உங்க வார்த்தைக்கு


    உண்மைதான் சந்தர்ப்பம் கிடைக்காமல்தான் எல்லாரும் உத்தமர்களாய் இருக்காங்க தமிழுதயம் சரியா சொன்னீங்க

    பதிலளிநீக்கு
  24. நன்றி வானம்பாடி கீரவாணி கிடைச்சுதா வானம்பாடி பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  25. நன்றி நேசன் வாழ்த்துக்கள் உங்களுக்கும்

    பதிலளிநீக்கு
  26. நன்றி தியா ஊன்றுகோல் கவிதை அருமை பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  27. நன்றி செந்தில் நாதன் பொங்கல் வாழ்த்துக்கள் செந்தில் நாதன்

    பதிலளிநீக்கு
  28. நன்றி புலவன் புலிகேசி பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  29. நன்றி சூர்யா பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  30. நன்றி சங்கவி
    பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  31. நன்றி விஜய்
    பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  32. நன்றி நவாஸ்
    பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  33. நன்றி ஷஃபி
    பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  34. நன்றி பட்டியன்
    பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  35. நன்றி ராம்
    பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  36. நன்றி ஹுசைனம்மா உங்க முதல் வருகைக்கு


    கல்லாவுக்கு வருகையில் கல் வைத்த நகையை விட கருணையைக் கைக் கொண்டது அருமை ஹுசைனம்மா

    பதிலளிநீக்கு
  37. நன்றி அக்பர் கருத்துக்கு

    அக்பர் எப்போ விண்வெளி வீரன் ஷூட்டிங் ஆரம்பம் ஹாஹாஹா

    பதிலளிநீக்கு
  38. நன்றி வினோத் பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  39. நன்றி புலிகேசி பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  40. நன்றி கோபி பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  41. 1. எழுத்துக்களைப் பொறுத்தவரையில் புகழேந்தியுடனான கூட்டு முயற்சி என்பது முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒன்று.
    2. தமிழின் மீதும் எழுத்தின் மீதும் பாசம் வைத்துள்ள ஒரு குழுவிற்கு நாகப்பன் அறிமுகம் - நன்றி; ஆனால், அறிமுகம் என்பதையும் மீறி, தனி நபர் துதி எனப் போய்விட்டதோ என அஞ்சத் தோன்றுகிறது. sorry if i am wrong . . .
    4. தேனம்மையின் ”பொது டைரி” இவ்வளவு பேரால் வாசிக்கப்படுகிறதா என்பதில் மகிழ்ச்சி. ஹூம் . . .நானுந்தான் எழுதுகிறேன் . . . முடிஞ்சா பாருங்க : http://nagappanv.blogspot.com ஏதாவது புரிஞ்சா சொல்லுங்க . . .

    பதிலளிநீக்கு
  42. பொங்கல் வாழ்த்துகள்!!
    திட்டமிடல் - சரியா சொன்னிங்க‌

    பதிலளிநீக்கு
  43. வாழ்வில் திட்டமிடுதலும் சேமிப்பும் நிச்சயம் தேவை.ஆனால் கவனம்.

    பதிலளிநீக்கு
  44. நன்றி சுஸ்ரி

    கத்திரிக்காய் சாதம் அருமை சுஸ்ரி

    பதிலளிநீக்கு
  45. நன்றி ஹேமா

    நிச்சயம் கவனம் தேவை

    பதிலளிநீக்கு
  46. நன்றி அக்பர் கதை நல்ல யதார்த்தமா இருக்கு அக்பர்

    பதிலளிநீக்கு
  47. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...