எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மலாய் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலாய் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 ஏப்ரல், 2018

மலாயில் மொழிபெயர்க்கப்பட்ட எங்கள் கவிதைகள்.

1ஆதிரா முல்லை

சிப்பி
தன் மீது விழத் தயாராக இருந்தது
அந்த மழைத்துளி
அப்போதே
ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்
முகமேந்தி
அந்தக் குளிர்ச்சியை
வடவாடைக் காற்றாலோ
வனசாரியின் ஈர்ப்பாலோ
விலகிச் சென்றதந்த
இதமான முதல் துளி

வசப்படாத
வாழ்க்கையைக் கடப்பது
எப்படி என்று
வழக்கிடும் இதயத்தோடு
வாழ்தல்
வழக்காகிப் போக
ஏக்கங்கள் தாங்கிச் செல்லும்
அந்த மழைத்துளியைச்
சந்திக்கும் போதெல்லாம்
வாய்க்காத முத்தத்துக்காய்
ஏங்கியபடி
வான் நோக்கிக் கிடந்தந்த
சின்னச் சிப்பி!

Related Posts Plugin for WordPress, Blogger...