தேசியத்தாய்கள்
“பால் நினைந்து
ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து
பாவியேன் உடைய ஊனினை உருக்கி
உள்ளொளி பெருக்கி
உலப்பு இலா ஆனந்த மாய தேனினைச்
சொரிந்து
புறம் புறம் திரிந்த செல்வமே
சிவபெருமானே
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப்
பிடித்தேன்
எங்கெழுந்தருள்வது இனியே. ”
பாடல்கள் பாடித் தீபம் ஏற்றிக்
கொண்டிருந்த ராஜராஜேஸ்வரி அம்மா விபூதியையும் குங்குமத்தையும் கொண்டு வந்து தேவிக்குப்
பூசி விட்டார். தைராய்டு பிரச்சனையால் அன் ஈவன் மென்ஸஸ்ட்ருவல் ப்ரியடில் சிக்கித்
தவித்துக் கொண்டிருந்த தேவிக்கு தர்மசங்கடமாயிருந்தது.
தான் மாசமாக இருப்பதாக நினைத்து ராஜராஜேஸ்வரி அம்மாள் தாங்கு தாங்கென்று தாங்குவது அவளுக்கு பயத்தைக் கூட உண்டு பண்ணியது. உண்மை தெரிந்தால் என்னாகுமோ என்று முன்பே அவரிடம் சில உடல்நலத் தகவல்களைச் சொல்லி இருந்தாள். சிலபேருக்குக் கர்ப்பம் தரிச்ச பின்னாடியும் லேசா ப்ளீடிங்க் ஆகுமாம்மா என்று.