ஆல்தோட்ட பூபதியும் ஆல்ரவுண்டர் சிம்ரனும்
திரையில் தீப்பிடித்தது போன்ற அழகுடன் நம் கண்முன் ஒளிர்பவர்கள் மூவர். இதில் ஐஸ்வர்யா ராயிற்கு முதலிடம். அடுத்து சிம்ரன், மூன்றாமிடம் தீபிகா படுகோனே. முகத்தில் மச்சம் கொண்ட மச்சக் கன்னிகள் வரிசையிலும் சிம்ரன் இடம் பிடிக்கிறார். முதலிடம் கே ஆர் விஜயாம்மாவுக்கு அடுத்து சுஜாதாம்மா மூன்றாமிடம் உதட்டோர குட்டி மச்சக்காரி சிம்ரன், நான்காமிடம்தான் மனோரமாம்மாவுக்கு.
இடையழகிலும் சிம்ரனுடன் ’நேருக்கு நேர்’ யாரும் போட்டி போட முடியாது. ”மனம் விரும்புதே உன்னை உன்னை” என்று பிரபுதேவா ஸ்டைலில் ஒட்டகமாய் வளைந்து இடுப்பை ஒடிப்பதிலாகட்டும். லோ ஹிப் பாண்ட் போட்டு எந்த பயமுமில்லாமல் துணிச்சலாக ”உன்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா இல்லை நானா” என்று ஸ்டைலாக ஸ்டெப்ஸ் போடவும் சிம்ரன் ஒருவராலேயே முடியும். ஒரு சினிமா விருது ஒன்றில் மேடையிலேயே வினு சக்கரவர்த்தியால் ”சும்மா கொப்பும் குலையுமா மப்பும் மந்தாரமுமா” என்று மொழியப்பட்டவர் சிம்ரன்.