எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 16 டிசம்பர், 2017

சும்மா ஒரு வெளம்பரந்தான்..

விளம்பரங்கள் ஒரு காலகட்டத்தின் வாழ்வியலைப் பிரதிபலிக்கின்றன. ஃபேஷன் ட்ரெண்டிங் மாறுவதை அறிவிக்கின்றன. உடை, அலங்காரம், அவை எடுக்கப்பட்டிருக்கும் விதம் மற்றும் ப்ளாக் & வொயிட் படங்கள் அவை நிச்சயம் 40 முதல் 50 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கவேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றன.

அத்யாவசியமான விஷயம் எல்லாம் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன். , இப்பிடி ஒரு போஸ்ட் போட. படம் கிட்டிச்சு, நீங்களும் கிட்டிட்டீங்க. அப்புறம் கதைக்க என்ன பஞ்சம். :)

நமக்கு சுஜாதா, இந்திரா காந்தி அம்மா, இவங்க போல நடிகை சரிதான்னாலும் ஒரு காலத்துல உயிர். இப்பவும் சரிதாவைப் பிடிக்கும். ஜூலி கணபதி போன்ற படத்தில் நெகட்டிவ் காரெக்டரில் பார்த்த போது கொஞ்சம் கெதக் என்றிருந்தாலும் சரிதாவை ரொம்ப பிடிக்கும். ஏனெனில் மௌனகீதங்கள் வந்தபோது நான் டென்த் படித்துக் கொண்டிருந்தேன். ஊருக்கு ஒரு உறவினர் திருமணத்துக்கு வந்தபோது எங்கள் மாமா மூக்குக் குத்திக் கொள்ளும் எல்லாருக்கும் மூக்குத்தி கொடுப்பதாகக் கூற ஒரு ஆர்வக்கோளாறில் நானும் என் பெரியம்மா பெண்களும் மூக்கைக் குத்திக் கொண்டு வலியால் கண்ணெல்லாம் கலங்கி ( நரம்பில் இறங்கிவிட்டது ஆணி ) ஒரு வழியாக பள்ளிக்குச் சென்றோம்.

அங்கே எங்கள் ஆசிரியை கேட்டார், என்னடி உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா.

இல்லீங்க மிஸ்.

அப்புறம் ஏண்டி மூக்குக் குத்திக்கிட்டு இருக்கே

பெரிய பெண் ஆனா மூக்குக் குத்திக்கணும்னு சொன்னாங்க என்று கொஞ்சம் மழுப்பித் தப்பித்தபோது வந்த படம் மௌனகீதம். அதில் சரிதா மூக்குத்தி மின்ன மின்ன கோபம் ஜொலிக்க நடிப்பார். ரொம்ப ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அதே ஹேர் ஸ்டைலை வேறு பல்வேறு ஆண்டுகளாக ஃபாலோ பண்ணினேன். :)

எங்களுக்குத் தமிழ் வகுப்பு எடுத்த “ அறம்வாழி” மாஸ்டரின் ஐந்து வயதுப் பேரன் என்னைப் பார்த்தால் மூக்குத்திப் பூ மேலே காத்து உக்கார்ந்து பேசுதையா என்று பாடுவான். நாம சரிதாவோ என்ற நினைப்பில் மூக்குத்தி பிடித்துப் போனது உண்மை.

அப்புறம் நூல் வேலி, அவள் அப்படித்தான், நெற்றிக்கண், தண்ணீர் தண்ணீர், ஊமை விழிகள், பொண்ணு ஊருக்குப் புதுசு, தங்கைக்கோர் கீதம், வேதம் புதிது, கீழ்வானம் சிவக்கும்  ஆகிய படங்கள் கொஞ்சம் குழப்பத்தோடு பிடித்தன. காரணம் அன்றைய ஹீரோயின்ஸ் வெறும் மெழுகு பொம்மைகளாக வந்தபோது வெவ்வேறு காரெக்டர்களில் உணர்வு பூர்வமாய் நடித்து மனதைக் கவர்ந்தவர் சரிதா.

நல்லா பார்த்தீங்கன்னா தெரியும் அந்தக் காலத்துல நட்ட நடு நெத்தில பொட்டு வைச்சுக்குவாங்க. சரிதாவின் கண்ணும் நாக்கை மடித்து அவர் செய்யும் குறும்பும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ”ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் “ என்ற பாட்டை என்றைக்குக் கேட்டாலும் நான் ஃப்ளாட்தான். அவ்ளோ ரசிகை அவருக்கு நான்.
சரி விளம்பரத்தை விட்டுட்டு வேறெங்கோ போயிட்டேன். ( சரிதா ரசிகை மன்றம் :)



ஒரு சில விளம்பரங்களின் பின் புறங்களில் சாகர் ஸ்கிம் மில்க் பவுடர், ப்ராமிஸ் டூத் பேஸ்ட் போன்ற விளம்பரங்கள் இருந்தன.

மர்ஃபி ரேடியோ , குட்டிக்குரா பவுடர், நீலி பிருங்காதி தைலம்  போன்ற விளம்பரங்களை நாம மறக்க முடியாது. மர்ஃபி ரேடியோவில் சுருட்டைத்தலை உடைய துறு துறு குழந்தை வாயில் ஒற்றை விரலை அலட்சியமாக வைத்திருப்பது கவர்ச்சி, அதேபோல் அன்றைய நடிகைகள் ஜப்லா கழுத்து வைத்த முழுக்கை ரவிக்கை அணிந்து உயரக்கொண்டை போட்டு குட்டிக்குரா பவுடர் விளம்பரத்தில் ஜொலிப்பதும் கவர்ச்சிதான்.

இந்த விளம்பரம் எல்லாம் நான் எடுத்து கட் பண்ணி வைச்சது என் பதின் பருவத்தில் அதுனால இருவர் மட்டும் இருக்கும் இந்த விளம்பரங்கள் பாதிக்கு மேல் எதுக்குன்னே ஞாபகம் வரலை. இது ஓசிஎம் சூட்டிங் ஷர்டிங்க்குக்காகனு தெரியுது.

மிலிந்த் சோமன் , ஜான் ஆப்ரஹாம், ஷாரூக் கான், போன்ற ஓரிரு மாடல்களை   மட்டுமே தெரியும். :)
பரிவாய் நோக்கும் இந்தப் பெண்மணியின் கண்கள் எவ்வளவு அழகு :) பாம்பே டையிங் சாரிக்காக இருக்குமோ தெரியவில்லை.
அட சிகரெட் விளம்பரம் கூட எடுத்து வைச்சிருக்கேன். :)
ஏதாவது ரின் விளம்பரமா இருக்கும் :) அல்லது ரீகலா இருக்கலாம்.
இவங்க ஜீனத்தா இல்லை பர்வின் பாபியா. லுக்கையும் மூக்கையும் பார்த்த ஜீனத் அமன்னுதான் தோணுது :)

இது ஜேசிடி ஷர்ட்டிங் சூட்டிங்கா இருக்கலாம். மாடல் பேர் தெரில.
இவங்க தீப்தி நாவல் அவர் சேகர் கபூர். விளம்பரம் ஏதாவது சூட்டிங்க் ஷர்ட்டிங்கா தெரில.

இவங்க ரெண்டு பேரும் எதுக்கு முறைச்சிட்டு இருக்காங்க.. :)

இந்த ஆண் யாருன்னு தெரில. பட் பெண்ணை நல்லாவே தெரியும் இவங்க ரதி அக்னிஹோத்ரி. முரட்டுக்காளையில் நடிச்சு கலக்கினவங்க.

எந்தப் பூவிலும் வாசம் உண்டு பாட்டை இவங்க பாடிக் ( ! ) கேட்டதால இன்னிக்கும் மறக்க மாட்டேன். நல்ல மெசேஜ் சொன்ன பாட்டு அது. ஆனா இந்த விளம்பரம் தான் எதுக்குன்னு தெரில. ஏதாவது ஜுவல்லரியா.. ?
அதான் தலைப்பிலேயே சொல்லிட்டேனே.. சும்மா எல்லாம் வெளம்பரந்தான்னு அப்புறமும் எதுக்குன்னு தேடுறீங்களா என்ன :) 

6 கருத்துகள்:

  1. விளம்பரங்களை ரசித்தேன். நான் சரிதாவின் ரசிகன். சாவித்திரிக்குப் பின் சரிதாவின் படங்களை ரசித்துப் பார்த்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  2. ரசனையான கலெக்ஷன். நான் கூட இப்படி ரசித்தவைகளில் மிக ஆரம்பகால அனு அகர்வால் படம், ​தினேஷ் சூட்டிங் கவாஸ்கர் படம் போன்றவை உண்டு.

    பதிலளிநீக்கு
  3. நாங்கள் இருந்த குடி இருப்பில் விளம்பரப் படம் போட்டு எதன்விளம்பரம் என்னும் கேள்வியும் போட்டியாக இருக்கு

    பதிலளிநீக்கு
  4. அஹா நன்றி ஜம்பு சார்

    நன்றி ஸ்ரீராம் . சூப்பர்.

    அட நல்ல போட்டிதான். கண்டுபிடிச்சீங்களா பாலா சார் :)

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...