எவ்வளவுதான் நல்லவர்களாக இருந்தாலும் சிலர் தம் கோபத்தால் அனைத்தையும் கெடுத்துக் கொள்வார்கள். ஆனால் பஞ்சபாண்டவர்கள் தம் பொறுமையால் எதற்கும் உதவாத காட்டையே திருத்தி நாடாக்கினார்கள். அதைக் கண்டு துரியோதன் முதலானோர் அழுக்காறு அடைந்தார்கள். பாண்டவர்கள் எப்படிக் காட்டைத் திருத்தி நாடாக்கினார்கள் எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
அஸ்தினாபுர அரண்மனையில் குருவம்சத்தில் பிறந்த திருதராஷ்டிரன் மூத்தவர் ஆனாலும் பார்வையற்றவர் என்பதால் ஆட்சிப் பொறுப்பை ஏற்க இயலாமல் இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் ராஜ்ஜியத்தின் மன்னராவதற்கும் சில கட்டுப்பாடுகள் இருந்தன. அதனால் திருதராஷ்டிரன் தன் தம்பியான பாண்டுவை மன்னராக்கினார்.