”உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்பதும் ”உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்பதும் பழமொழி. !
நெய்தல் நிலத்துக்கே உரிய ஒரு தொழில் உப்பு விளைவித்தல். அந்தக் காலத்தில் பண்டமாற்று முறைக்கும் உதவிய ஒரு பொருள் உப்பு. களர்நிலம், உவர்நிலம் என்று உப்பு விளைவிக்கப்படும் பூமி அழைக்கப்படுகிறது. உப்பு அளம் என்றும் கோவளம், பேரளம் என்று கடற்கரைக் கிராமங்களில் பெயர் அமைந்திருப்பதும் இதற்கு எடுத்துக்காட்டு.
உப்பு விற்றவர்களை உமணர்கள் என்று பண்டைஇலக்கியக்கியங்கள் குறிப்பிடுகின்றன. கழுதைகளின் முதுகில் உப்பை மூட்டையாகக் கட்டிச் சென்று விற்பவர்களை உப்புக் குறவர்கள் என்று கூறுவதும் உண்டு.
உப்புப் பெருகுவதுபோல் பணம் பெருகும் என்பதால் உப்பை பூஜை அறையில் வைத்து வணங்குவோரும் உண்டு. உப்பு என்பது பணத்துக்குச்/தனத்துக்குச் சமமாகக் கருதப்படுகிறது.
உப்பு என்றதும் காந்தியடிகளின் தண்டி யாத்திரையும் வேதாரண்யம் உப்பு சத்யாக்கிரகமும் நினைவுக்கு வரலாம்.
உணவு வகைகளில் (தற்காலத்தில் உப்பு சேர்க்காவிடினும்) இயற்கையாகவே சில காய்கறிகளில் உப்புச் சத்துகள் உறைந்துள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உப்பில் அயோடின் இருக்கவேண்டும் என்பதற்காகவே கல் உப்பின் பயன்பாடு ( சுத்திகரிக்கப்படாத கடல் உப்பு ) வலியுறுத்தப்படுகிறது. டேபிள் சால்ட் எனப்படும் நைஸ் உப்பு/தூள் உப்பு/ பொடி உப்பில் இந்த அயோடின் கொண்டது என்று விளம்பரப்படுத்துகிறார்கள். அப்போது இதில் இயற்கையாக இருக்கும் அயோடின் என்னாச்சு ?
ராக்சால்ட், இந்துப்பு, ப்ளாக்சால்ட், சைனீஸ் சால்ட் எனப்படுபவை, பாறையில் இருந்து கிடைப்பவை, நாம் உபயோகப்படும் கல் உப்பே கடலில் இருந்து கிடைக்கும் உப்பாகும்.
இவை தூத்துக்குடி திருச்செந்தூர் செல்லும்வழியில் அமைந்த உப்பளங்கள்.
கடற்கரை அருகில் உள்ள நிலங்களை வயல் பாத்திகள் போலப் பிரித்து அதில் கடல் நீர் கொட்டப்பட்டு ஆவியாக்கப்படுகிறது.