எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 4 செப்டம்பர், 2014

தேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.

131. சங்கீத ஸ்வரங்கள். ஏழே கணக்கா

அழகனில் மம்முட்டியும் பானுப்பிரியாவும் பாடும் பாடல். இரவில் ஆரம்பித்து விடியற்காலையில் முடியும். இரவு தொலைக்காட்சி நிகழ்ச்சி முடிவும் காலையில் சூரிய கிரணங்களோடு தொலைக்காட்சி ம்யூசிக்கும் அழகு. மேலும் இருவரும் படுத்தபடியும் அமர்ந்தபடியும் திரைச்சீலையைத் தொட்டுக் கொண்டும் பேசிக் கொண்டே இருப்பார்கள். இந்தப் பாடல் பலரின் தூக்கத்தைக் கெடுத்ததோடு மட்டுமல்ல ரிங் டோனாகவும் இருக்கிறது. :)

132. ஜல் ஜல் ஜல் என்னும் சலங்கை ஒலி.

அவன் தான் திருடன் என்றிருந்தேன். அவனை நானே திருடிக் கொண்டேன். முதன் முதல் திருடும் காரணத்தால் முழுசாய்த் திருட மறந்துவிட்டேன். என்ற வரிகள் பிடிக்கும்.  புன்னகை முகத்தோடு சரோஜா தேவி பாடும் நல்ல ரிதமிக்கான பாடல். பள்ளிக் கூடத்துக்குத் தினமும் மாட்டு வண்டியில் போவோம் அந்த இனிமையான நினைவுகள் மறுபடியும் நிழலாடும் இந்தப் பாடல் கேட்கையில்.

133. காற்றில் எந்தன் கீதம்.

ஸ்ரீதேவியும் ரஜனியும் நடித்த படம் ஜானி. இதில் டபிள் ஆக்ட் ரஜனி. இந்தப் பாடல் ரொம்ப மெலடியஸாக இருக்கும். தனிமையும் ஏக்கமும் பொங்கி வழியும் பாடல். 

134. ஆசையக் காத்துல தூதுவிட்டு.



அதே படத்தில் ஜெயசுதா காட்டில் பாடும் பாடல். மலைஜாதிப் பெண்ணாக ஜெயசுதா ரஜனியைக் காதலிப்பார். மிக அழகான காட்சியமைப்பும் உடைகளும் இருக்கும். அடர்ந்த இருளில் கானகத்தில் பான் ஃபயர் மாதிரி ஜெயசுதா அழகாக இருப்பார்.

135. பார்த்த முதல் நாளே.

கமலினி முகர்ஜியும் கமலும் பாடும் பாடல். வேட்டையாடு விளையாடு படம். இருவருக்கும் ரொம்பப் பொருத்தமாக இருக்கும். மிக அந்யோன்யமான பாடல்.

136. தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே.

எஸ் எஸ் ஆர், விஜயகுமாரி நடித்த ஆலயமணி படப் பாடல். காலையில் நான் ஓர் கனவு கண்டேன். என் கண்களில் அதை நான் எடுத்து வந்தேன். எடுத்து வந்ததை குறைவுபடாமல் நான் கொடுத்துவிட்டேன் உன் கண்களிலே. என்ற வரிகளில் அழகு.

137. தூங்காத கண் என்று ஒன்று.

குங்குமம் படத்தில் சிவாஜி சாரதா பாடும் பாடல். வெகு தூரம் நீ சென்று நின்றாலும் உன் விழி மட்டும் தனியாக வந்தாலும். வருகின்ற விழி ஒன்று தருகின்ற பரிசொன்று பெருகின்ற சுகம் என்றும் உண்டு.

138. நானே வருவேன்.

ஜெயாம்மா பாடும் பாடல். கொஞ்சம் த்ரிலாக இருக்கும். வெண்ணிற உடை அணிந்து தேவதையாக அவர் மலைச்சரிவில் நடந்து செல்வார். ஜெய்சங்கர் பாடல் கேட்டுப் பின் தொடர்வார். இசையும் த்ரிலைக் கூட்டும். 

139. என்னவோ என்னவோ.

விஜய் சிம்ரன் நடித்த பிரியமானவளே படம். உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன். உன் ஆயுள் வரை நான் வாழ்ந்திருப்பேன். என்ற வரிகள் அற்புதம். 

140. செண்டு மல்லிப் பூப்போல் அழகிய பந்து

தலை வழக்கம்போல லவ் ஆல் என்று பாட சுஜாதா லவ் ஒன் என்று பாடுவார். என்றுமிந்த இதயம் ஒருவனுக்கென்று இருப்பதைக் கூறட்டும் விரைவினில் சென்று என்று பந்திடம் சொல்வது போன்ற பாடல். பாண்ட் ஷர்ட்டில் கூட சுஜாதா அழகு.

  டிஸ்கி:- இவற்றையும் கேளுங்க. :)

1. தேன் பாடல்கள் .. அழகும் அழகும்.  

2. தேன் பாடல்கள். எனக்காகவும் உனக்காகவும்.

3. தேன் பாடல்கள். தனிமையும் காதலும்.

4. தேன் பாடல்கள் . ரோஜாவும் தேனும்

5. தேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்

6. தேன் பாடல்கள். நிலவும் மயிலும். 

7. தேன் பாடல்கள். காற்றும் காதலும்.  

8. தேன் பாடல்கள். ஆசையும் ஆட்டமும்.    

9. தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆற்றங்கரை மரமும்.

10. தேன் பாடல்கள் தலைவர்களும் தலைவியும் கெமிஸ்ட்ரியும்.

11. தேன் பாடல்கள். மழையும் பூச்சரமும்.  

12. தேன் பாடல்கள். தேடலும் துடிப்பும்.  

13. தேன் பாடல்கள். கண்ணழகும் கண்ணனும்.

14. தேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.  

15. தேன் பாடல்கள். யமுனையும் ஓடமும்.  

16. தேன் பாடல்கள். மாயனும் முருகனும்.

17. தேன் பாடல்கள். ஆயர்பாடியும் ஆலய மணியும். 

18. தேன் பாடல்கள். மார்கழியும் மல்லிகையும். 

19. தேன் பாடல்கள். அன்பும் அழகனும்.    

20.  தேன் பாடல்கள். காதலும் மயக்கமும்.

21. தேன் பாடல்கள். மாலையும் மலரும்.

22. தேன் பாடல்கள். நாணமும் தவிப்பும்.

23. தேன் பாடல்கள். பாசமும் பிரிவும். ( ரொமான்ஸ் வெள்ளி )

24. தேனே உனை நான் தேடியலைந்தேனே.

25. தேன் பாடல்கள். பொன்வீதியில் மானும் முயலும் மயிலும்.



3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...