எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
RAMU MAMA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
RAMU MAMA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 செப்டம்பர், 2017

தாய்மாமா வாய்ப்பது தவப்பயன்.

உங்களுக்குத் தாய்மாமா இருக்கிறாரா. ? ஒன்றா இரண்டா.  ? ஒன்றோ இரண்டோ மாமாக்கள்  இருக்கின்றார்கள் என்றாலே நீங்கள் புண்ணியம் செய்தவர்கள்தான்.  எனக்கு நான்கு அம்மான்கள் இருக்கிறார்கள். அப்போ நான் மிகுந்த தவப்பயன் செய்தவள்தானே.

எப்போதோ ஒருமுறை பார்த்துக் கொண்டாலும், எப்போதும் உங்களுடன் தொடர்பில் இல்லாதபோதும் முக்கியமான தருணங்களில் அவர்கள் அன்பு உங்களை ஆசீர்வதிக்கும். தாய்க்கு நிகர் தாய்மாமாக்கள்.  என்றால் மிகையில்லை.

என்னுடைய மூத்தமாமா தெய்வத்திரு சுப்பையா அவர்கள் காரைக்குடியில்  திருக்குறள் கழகத்தினை நிறுவியவர்களுள் ஒருவர். மூன்றாவது மாமா லயன் திரு வெங்கடாசலம் இன்றும் அக்கழகத்தின் செயலாளராகப் பணியாற்றி வருடம் ஒருமுறை விழா நடத்தி அக்கழகத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்கள். மேலும் காரைக்குடி புத்தகத் திருவிழாக்களை அதன் செயலாளாராகத் திறம்பட நடத்துபவர்கள். நான்காவது மாமா நாணயம் திரு நாகப்பன் அவர்கள் பங்குச்சந்தையின் இயக்குனராகவும், பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் பங்குச்சந்தை பற்றிய நுண்ணிய தகவல்களை அளித்தும் அது தொடர்பான கருத்தரங்குகள் நடத்தியும் சிறப்பாகச் செயலாற்றி வருகிறார்கள்.  
இங்கே நான் சிறப்பாகக் குறிப்பிட வந்தது என் இரண்டாவது மாமா ஜோகூர் திரு ராமநாதன் அவர்களை பற்றி. அவர்களை பற்றி முன்பே சிலமுறை எழுதியும் சென்னை அவென்யு, கொளத்தூர் டைம்ஸ், ஆகிய பத்ரிக்கைகளுக்காகப் பேட்டி எடுத்தும் வெளியிட்டுள்ளேன்.  வைரவன்பட்டியில் நடந்த அவர்களின் பீமரத சாந்திக்கு வெளியிடப்பட்ட நூல் பற்றியும் அவர்களின் பண்புநலன் பற்றியும் இங்கே எழுத விழைகிறேன்.
சிறுவயதில் எங்கள் ஐயாவுடன் மலாயாவுக்கு சென்றவர்கள் எங்கள் மாமா. கல்லுரிப் படிப்பு சென்னை கிறிஸ்டியன் காலேஜ். அதன்பின் திருமணம், மலாயாவில் கெமிஸ்ட்ரி டீச்சராகப் பணி புரிந்து தாயகம் திரும்பி செபியின் அங்கத்தினராகி பங்குச்சந்தை வணிகம். இப்போது கற்பித்தலை ஹாபியாகச் செய்துவருகிறார்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...