1601. avoid bubble busters and work for progress.. happy morning makkass..
1602. தலைவர் சிலமுறை முட்டாளே என்று திட்டி இருக்காரு. சீறி எழுந்து சினக்கும் நான் இன்று சிரித்து அனுபவித்தேன். ஒருவேளை பழகிருச்சோ
1603. அன்பை அதிகம் ஊற்றினாலும் நட்புத்தாவரம் பட்டுவிடும்.
1604. தனக்குத்தானே சாரல்கவரி வீசிக்கொள்கிறது மழை.ஒரு கையில் மிஷ்கின், இன்னொரு கையில் இதமான சூட்டில் நரசூஸ், பால்கனி சேரிலும் குட்டிமுத்தம் இட்டு இழுக்கிறது மழை. கொசுவலைத் தடுப்பின் பின் பின் சேரில் விழுந்து ஆடி மடிசாயும் மிளகாய்ச்செடியின் பூவும் நானும் மழையுடன் கைகோர்க்க காற்றும் குளிருடன் நடனமாடத் துவங்குகிறது.
1605. சரம் சரமாய்க் குதித்திறங்குகிறது மழை , ஒருமுறை ஆமோதிப்பாய் "ம்" என்று சொன்னதற்கு. தேர்வடமாய் என்னைச்சுற்றி முறுக்கி இழுத்தாட்டுகிறது . மூழ்கி எழுந்து இலையைப் போல மிதந்து மிதந்து பின்னே போகிறேன்.
1606. அளவற்ற பெருவெளி நீர்த்திப்பியால் நெகிழ, சந்தோஷமாய்க் கரைந்தோடுகிறது சேறு, சுயமிழத்தலில் இவ்வளவு இன்பமா
1607. பால்கனிச்சுவரில் ஒண்டி துளசியும் மிளகாயும பாலக்கும் ஆச்சார்யக் கண்கொண்டு எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கின்றன திடீரென நடனத்தை நிகழ்த்திய மழையை. எனக்குத்தான் பதக் பதக் என்கிறது எங்கே மழை தன் சலங்கை உதறி அவற்றைத் தள்ளிவிடுமோவென.