எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 3 அக்டோபர், 2018

காரைக்குடிச் சொல்வழக்கு :- அப்புராணியும் உக்கிராணமும்.


1061.குடைக்கொசுவலை/தொட்டிக் கொசுவலை - குழந்தைகளைப் படுக்கையில் தூங்கவைக்கும்போது குடைக்கொசுவலை போட்டு வைப்பதுண்டு. தொட்டிலைச் சுற்றிக் கட்டவும் கொசுவலையை உயரமான பாவாடை போல் தைத்து உபயோகிப்பார்கள்.  

1062. கைப்பண்டம் கருணைக்கிழங்கு - கஞ்சம்பிடித்தவர் கையில் இருந்து ஒரு பொருளையும் வாங்க முடியாது. அவர்களின் கைப்பண்டத்தை அடுத்தவர்களுக்குக் கொடுக்க யோசிப்பார்கள். ஆனால் அடுத்தவர்களை தானம் செய்யும்படி வலியுறுத்துவார்கள். அப்படிப்பட்டவரைக் குறிப்பிடும்போது அவர்களின் கைப்பண்டம் கருணைக்கிழங்கு என்று சொல்வதுண்டு 

1063. அப்புராணி - அப்பாவி, ஒன்றும் அறியாதவர் , பழிபாவம் தெரியதவர், வெள்ளந்தி, வெகுளி, குற்றமற்றவர். 

1064. உக்கிராணம் - ஒரு விசேஷம் என்றால் அதற்குத் தேவையான மளிகை, அரிசி, பருப்பு பயறு வகைகள், காய்கறி , கனி, பால், தொன்னைகள், பாக்குமட்டைத்தட்டுகள், வாழை இலை, பழக் கப்புகள், முந்திரி, பாதாம், நெய், பழ டின்கள்,  போன்ற பொருட்களை ஓரிடத்தில் அல்லது ஒரு அறையில் சேர்த்து வைப்பார்கள். அதற்கு மொத்தமாக உக்கிராணம் என்று பெயர். இதை சமையல் ஆள் அல்லாத ஒருவரிடம் ஒப்படைத்து விடுவார்கள். அவர் அந்த விசேசத்தின் போது சமையலுக்குத் தேவையான பொருட்களை உக்கிராணத்தில் இருந்து அளந்து எடுத்துக் கொடுப்பார். இதைப் பொதுவாக பெண்கள் மேற்பார்த்துக் கொள்வதால் அவருக்கு உக்கிராணக்காரக்கா என்று பெயர்.

1065. ஊவுதி, உவ்வூதி, துண்ணூரு, விவூதி, திருநீறு, திருநீர் - நெற்றியில் மூன்று பட்டையாக இடும் சைவச் சின்னம், சிவச்சின்னம், விபூதி. 



1066. பட்டியக்கல் - கீழ்வாசலை பத்தியுடன் இணைக்கும் பகுதியில் இது இருக்கும்.  இந்தப் பட்டியக்கல் ஒரேமாதிரியாக பட்டி போல் பத்தியில்  நீளப்படையில் அமைக்கப்பட்டிருக்கும் கல்லாகும். 

1067. மரவுதட்டி - மறைவு தட்டி. சின்ன பார்ட்டீஷன் போல. ஆல்வீடு, பத்தி, பட்டாலை போன்றவற்றில் சின்னத் தடுப்புப்போல மறைக்க உதவுவது. புள்ளிகள் அதிகம் உள்ள வீட்டில் பல பங்குக்காரர்கள் இருப்பதால் இவ்வாறு தங்கள் பக்கங்களை மறைவுதட்டி வைத்து மறைத்து அலமாரி போன்றவற்றை வைத்துக் கொள்வார்கள். இதில் மறைக்க மரத்தட்டி இருக்கும். சிலவற்றில் நாற்புறமும் உருண்டை ஆணி மாட்டி துணித்தட்டியாக வைத்துக் கொள்ளும் வசதி இருக்கும். 

1068. சொட்டாங்கி - சொட்டாங்கிக் கல் விளையாட்டு. ஐந்து கூழாங்கற்களை அல்லது ஐந்து சிறு கருங்கல் சல்லிகளை வைத்து விளையாடப்படும் விளையாட்டு. இது கண்ணுக்கும் கைக்கும் பயிற்சி கொடுக்கும். இருவரில் இருந்து பலர் வரை விளையாடலாம். ஒன்றிலிருந்து பத்துவரை இதில் விளையாட்டுக்கள் உள்ளன. 

1069. சோமாத்தி - அலுக்கை, களைப்பு தீர ஓய்வெடுத்தல், உடல் நோவால் உடலை நெளித்து எங்காவது சுருண்டு கொள்ளுதல் அல்லது படுத்துக் கொள்ளுதல், ஒரு வேலையைச் செய்யச் சோம்பல்பட்டு ஒதுங்குதல், ஓய்வு, அலுப்பு, சோம்பல், ஓய்ந்தமர்ந்து சுகம் காணுதல், ஒன்றும்செய்யாமலிருத்தல்.

1070. வருந்தொட்டியும் - வரும்வரைக்கும், சென்றவர் திரும்பி வருகின்ற வரைக்கும்,

1071.உசுப்புதல் - எழுப்புதல், தூக்கத்திலிருந்து எழுப்புதல், ஒரு விஷயத்தைச் செய்யத்தீவிரப்படுத்தல். 

1072. வீட்ட இருக்கையில் - வீட்டில் இருக்கையில். 

1073. கினா - கனவு, கனா 

1074. கெடை -  மேலுக்கு முடியாமல் இருப்பது  & வீட்டுத் தூரம் கிடப்பது, பலத்த உடல்நலமின்மை, எழுந்து அமரமுடியாமல் படுத்த படுக்கையாய் இருப்பது, வயதால் நோவால் எழாமல் படுத்திருப்பது. 

1075. சிப்பாணி - சிரிப்புப் பொங்குதல், 

1076. கள்ளிப்பொட்டி/கலியம்பொட்டி - கலிங்க மரம் போன்ற உறுதியான மரத்தால் செய்த பெட்டி, 

1077. சத்தவடம் - சத்த நேரம், கொஞ்ச நேரம், 

1078. யாது இல்லை - ஞாபகம் இல்லை. 

1079. இதுன்னப்ப - ஒரு விஷயம் நடந்தபோது அதைப்பற்றிக் குறிப்பது. 

1080. தெரியணுமின்ன - தெரியவேண்டும் அல்லவா,/ தெரியவேண்டும் இல்லையா, 


டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1

15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11. 


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12. 

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13. 

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14 

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!! 

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.  

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்.. 

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம். 

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

 
55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.

56. திருப்புகழைப் பாடப் பாட..

57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.


58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.

59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.

60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும். 

61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப் புகைப்படங்கள்.  

62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும். 

65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும். 

66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும். 

67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 ) 

69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க. 

70.  மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.

71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்கால எழுத்துக்களும்.

72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!

 

73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES. 

 

74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே. 

 

75.  காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி. 

 

76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும். 

 

77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும். 

 

78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும் கிருஷ்ணனும். 

 

79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும் சரஸ்வதியும். 

 

80. செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கணார் இயம்பும் அகத்திணையின் அகம் :-

 

 81.  மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.

 

82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.

 

83.  காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச் சடங்குகளும்.

 

84. காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும். 


85.உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிகளும். :-

 

86. காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும், பெருமாளும் தேவியும். 

 

87. இந்த சீர் போதுமா ?! 

 

88. புராதன வீடுகளும் புதுப்பித்தலும் 

 

89. முயற்சி திருவினையாக்கும் திரு இராஜமாணிக்கம். 

 

90. சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன் ) . 

 

91.தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன்.

 

92. இனியெல்லாம் பிஸினஸே

 

93. தாய்மாமா வாய்ப்பது தவப்பயன்.

 

94. வட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.

 

95. தலைச்சீலையில் முடிவதும்,  தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடி கைவேலைப்பாடு.  

 

96.மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.







104. திருப்புகழும் உபதேசமும் சிவதீட்சையும்.

105. காரைக்குடிச் சொல்வழக்கு, பிச்சோடாவும் சித்தாடையும்.

106. பள்ளத்தூர் அளகஞ் செட்டியார், காளியாயா ஏழூர்ப் பொதுப் படைப்பு.







டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.

10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் ) 

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள். 

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் 

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

1 கருத்து:


  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...