எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 23 ஜனவரி, 2019

செவ்வந்திச் சரங்களும் சிறுமுயல் குட்டிகளும்.

2021. ஆங்கிலப் புத்தாண்டுக்கு ஆந்திராவுலயும் கர்நாடகாவுலயும் வங்கிகள் லீவ் இல்ல.
#Desi_Ppl. !

2022. எல்லாரும் பொறுப்பா போஸ்ட் போடும்போது  நாம மட்டும் நாடோடி மாதிரி போஸ்ட் போடுறமே.. ஹாஹா கொஞ்சம் கில்டியாதான் இருக்கு.

2023. இன்னும் துவங்கவே இல்லை
அனைத்தும் சொல்லி முடித்துவிட்டதுபோல் இருக்கிறது.

2024. கூடா காமம் விளக்கும் கதைகள் அதிகம் சிலாகிக்கப்படுகின்றன, வாசிக்கப்படுகின்றன. கரமுண்டார் வீடு, மாதொரு பாகன், அபிதா, மோகமுள்.

2025. அதாண்டா இதாண்டா அலமாண்டா இதாண்டா. :) காலை வணக்கம் மக்காஸ்.



2026. தினம் ஒரு கைப்பிடி போதும். மன அழுத்தம் குறையும். ஹெல்த்தி ஸ்நாக்ஸ்.

2027. Hulk <3 p="">

2028. முகாமுக்கு போகவிடாம கட்டி வைச்சிட்டாங்க  :(

2029. Circles & Candlelights.. Anthony Vs Antonio

https://www.youtube.com/watch?v=Du8HRf6pRVY



2030. தன்னெஞ்சறிவது பொய்யற்க. - சுயபோதனை.

2031. அலைச்சுக்கான்களின் இழுப்பில்
அலைவுறுகிறது
நில/னைவுப் பாய்மரம்.

2032.செவ்வந்திச் சரங்களைக்
கரங்களில் சுழற்றிக்
காணாமல் போகிறான்
இருள் தேசத்துள்.
நிலவுக்குத் தூண்டிலிட்டு
அலைவீசிக் காத்திருக்கிறது குளம்.
நிலவு பிடி விளையாட்டில்
விர்ரிட்டுக் கிடக்கிறது குளத்தின் கரம்.
ஓடியும் ஆடியும்
விடியலில் வெளுத்துக்
கரையேறுகிறது நிலவு.
நீரிலும் நனையாமல்
நிலவையும் தொடாமல்
மேலெழும்புகிறான் இவன்
ஃபிக்ஸல்கள் மருவிய கன்னச்சிவப்பின்
குங்குமத் தீற்றலோடு..

2033.பகையை மட்டுமல்ல. அன்பையும் மிச்சம் வைக்காமல் தீர்த்துவிட வேண்டும். :) <3 p="">
2034. Vasu Devan sir சொல்றமாதிரி அர்த்தமுள்ள எவ்ளோ விஷயங்கள் எழுதியும் இந்த பானக, பொங்கல் போஸ்டுக்குத்தான் நூத்துச்சொச்சம் லைக்ஸ். உயிரக் கொடுத்து எழுதி போஸ்ட் போட்டிருக்கேன். , கண்ணு பொக்கையானாலும் பரவாயில்லைன்னு பல புஸ்தகம் படிச்சு புக்ஃபேர்ல வாங்கப் போறீங்கன்னு நினச்சு எழுதியிருக்கேன். என் நம்பிக்கையையும் உழைப்பையும் வீணாக்கிடாதீங்க மக்காஸ்

2035. சிங்கம் போன்ற ஆண்களையும் சிறுமுயல்குட்டிகளாக்கும் அன்பு மனைவிகளிடத்தில் இருக்கிறது..

2036.ஏண்டி பௌலிங் பண்றியா..

.......

திருஷ்டி சுத்திப் போடுறியா...

...............

என்னதான் பண்றே. அடிக்க வர மாதிரி..

கை கொறையிறதுக்கு எக்ஸர்ஸைஸ் பண்றேன்.. கிர்ர்.. 3:)

இல்ல வாய்க்குள்ள ஏதோ முணுமுணுத்தியே..

ஆசிலேஷன கவுண்ட் பண்ணிட்டு இருந்தேன்.

#பபுள்பஸ்டர்_புருஷன்.

2037. Hall of Fame/ limelight.

Minority Report என்ற படத்தில் precogs vision என்றொரு சமாச்சாரம் உண்டு. அதில் டாம் க்ரூஸை ப்ரீ க்ரைம் செய்ய தயார்படுத்துவார்கள். அதல்ல நான் சொல்ல வந்தது. வெகுஜனத்துக்கும் precog vision மூலம் ஜனாதிபதி உரையாடி புகழ்வார்.

சுஜாதாவும் ஒருமுறை "எல்லோருக்குமே தன் வாழ்நாளில் " 15 நிமிட புகழ் " நிச்சயம் உண்டுன்னு சொல்லியிருக்கார்.

எல்லார்கிட்டயும் தனித்துவமான திறமைகள் உண்டு. , எழுத்தோ, ஓவியமோ, இன்னபிற கலைகளோ, மனிதாபிமானமோ , குறிப்பிட்டுச் சொல்லும்படி தனியான டிஸைனோடுதான் வெகுஜனங்களையும் இறைவன் படைத்திருக்கிறான். மனிதர்களின் கண்ணோட்டங்களும் மதிப்பீடுகளும் மாறுபடலாம்.

நம் கண்ணுக்குத் தென்படும் நல்ல பக்கங்களைப் புகழ்வோமே. மனிதர்கள் மகத்துவமானவர்கள்.

2038. சென்ற வாரம் தெ ம்யூல் பார்த்தேன். க்ளிண்ட் ஈஸ்ட்வுட் 88 வயசுலயும் கலக்குறார். தமிழ் குருவி மாதிரி. 90 வயசு ஆள் ஒருத்தர் கோகெய்ன் கடத்தல்காரரா பிடிபட்ட பேப்பர் நியூஸ வைச்சு எடுக்கப்பட்ட படம் .

நேத்திக்கு க்ளாஸ் படம். ஷ்யாமளன் பை நைட் டைரக்‌ஷன். ப்ரூஸ் வில்லீஸ், சாம்வல் ஜாக்ஸன்னு தலைவருக்குப் பிடிச்ச ஆஸ்தான நடிகர்கள். எக்ஸ்பாண்டபிள்ஸ், ஸ்ப்ளிட் நு முந்தைய படங்களோட தொடர்ச்சி. காமிக் காரெக்டர்ஸா தம்மை உருவகப்படுத்தி செயல்படும் மனிதர்கள் கதை.

இதுல என்னை ஆச்சர்யப்பட வைத்தவர் ஜேம்ஸ் மாகவோய். (James McAvoy). எக்ஸ் மேனில் பார்த்திருந்தாலும் இதில் ஸ்பெஷல் நடிப்பு. மிஸ்டர் ஹேண்ட்ஸமா இருந்தவர அரை மொட்டைத் தலையோட படம் முழுக்க உலவ விட்டிருக்காங்க.

சைல்ட்ஹுட் காமிக் மெமரீஸ்ல உழலும் கெவினா அபாரம். அவர மீட்டெடுக்கும் காதலியா அன்யாவும் ஓகே.

குழந்தைத்தனமான கேரக்டர் என்றால் நம்மூர் நடிகர்கள் போல் மெண்டலி ரிட்டார்டர்ட் ஆக ஓவர் ஆக்ட் செய்யாமல் குழந்தைத்தனமாகவே நடித்து கெவின் (ஜேம்ஸ்) கவர்கிறார்.

ஃபோரம் மால் பிவிஆரில் ஹவுஸ்ஃபுல். கெவினின் நடிப்புக்கும், கண்ணசைவுக்கும் புன்னகைக்கும் மென்பொறியாளர்கள் அனைவரும் மெல்லிய கிண்கிணிப் புன்னகையோடு ரசிக்கிறார்கள்.

மொத்தத்தில் ரெண்டு படம் ரெண்டுபேர் பார்க்க 2000 ரூபாய் செலவு

2039. பெண் : என் புருஷன் பகல்ல இந்தியன். இரவுல அந்நியன்.

தோழி: அப்பிடியா!

பெண்: ஆமா பகல்ல நியாயத்த தட்டிக் கேப்பாரு. இரவுல அநியாயத்த தட்டிக் கேப்பாரு.

தோழி: பகல்ல ஓகே. இரவுல என்ன அநியாயம் ?

பெண் : பார்லேருந்து நேரா வந்து சாப்பிட உக்காந்தா மிளகாய் சட்னிலே மிளகாய் எங்கே ? இட்லி ஏன் ஓவலா இல்ல..

தோழி. ஹாஹா ஹா.

#சொந்தக்கதை_இல்லை

2040. மனைவி/காதலி:- அதே ஜீனி, அதே பால், அதே டிக்காக்‌ஷன்.. உங்க மிச்ச காஃபி மட்டும் எப்பிடி டேஸ்டா இருக்கு... :)

கணவன்/காதலன்:- அடிப்பாவி.. ஒரு நிமிஷம் செல்ஃபோன் பேசுறதுக்குள்ள நான் மிச்சம் வைச்ச காஃபியையும் காலி பண்ணிட்டியா.....:)) காலை வணக்கம் காஃபி பிரியர்களே..!!!

டிஸ்கி :-




4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


















5 கருத்துகள்:

  1. என்னென்னவோ எண்ணங்கள் அத்தனையும்போஸ்டிலே

    பதிலளிநீக்கு
  2. அனைத்தும் சுவாரஸ்யம்! மூவி க்ளிப் நல்லாருக்கு. பார்க்க முடியுதான்னு பார்க்கிறோம்...

    அல்மாண்டா, யானை எல்லாம் அழகு.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  3. முகாமுக்குப் போக முடியாம. அதிகம் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி டிடி சகோ

    நன்றி பாலா சார்

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    நன்றி ஜம்பு சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...