எனது பதிமூன்று நூல்கள்

சனி, 5 ஜனவரி, 2019

சாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “!

வாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றார்கள். படித்துப் பயன் பெற வேண்டுகிறேன் மக்காஸ். 

எல்லோருக்கும் தேவை ”காஃப்ஃபீடு” !

ஸார்,  இன்ஷுரன்ஸ் எல்லாம் வேஸ்ட் ஸார்.   முப்பது வருஷம் கழிச்சி பணத்துக்கு மதிப்பே இருக்காது.  ஒங்களுக்குத் தெரியுமா அன்னைக்கு ஒரு கப் காஃபி ஆயிரம் ரூபா ஆகிடும்.

ஏன்யா சேமிக்கலைன்னு கேட்டா வீல்பர்ரோ எக்கனாமிக்ஸ் பத்திப் பேசுவாங்க. 

இதோ படத்தில் இருக்கிறதே வண்டி நிறைய பணம்.  அதைத் தள்ளிக் கொண்டு போகிறார் ஒருவர்.

திடீரென எங்கிருந்தோ வந்து குதிக்கிறார்கள் சில வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள்.  செல்வந்தரிடமிருந்து வண்டியைப் பிடுங்கிக் கொள்கிறார்கள்.  அடுத்து ஒரு காரியம் செய்கிறார்கள்.  அதுதான் ஆச்சரியமே.  வண்டியில் உள்ள பணத்தைத் தெருவில் கவிழ்த்துக் கொட்டுகிறார்கள்.  பணத்தை விட்டு விட்டு வண்டியைத் தள்ளிக் கொண்டு ஓடி விடுகிறார்கள்.   

ஏனென்றால் பணத்தை விட வண்டி மதிப்பு மிக்கது.  இதையே “WHEELBARROW” பொருளாதாரம் என்று சொல்வார்கள்.


அசாத்தியமான சூழல்களில் பணம் தன் மதிப்பை இழப்பது உண்மையே.  பணவீக்கமும் அப்படியே.  ஆனால் அதுவே சாஸ்வதமாக இருந்து விடாது.  பொருளாதாரம் எப்படியாவது தன்னைத் தகவமைத்துக் கொள்ளும். 

தள்ளு வண்டிப் பொருளாதாரம் நிச்சயம் வந்தே தீரும்.  அதனால் நான் சேமிக்க மாட்டேன் என்று சொல்வது சரியான தொலைநோக்குப் பார்வையல்ல.   

பணம் மதிப்பிழக்கும் போது பண்ட மாற்று முறை தானாக உள்ளே புகுந்து விடும்.  பொருளாதாரம் முதுகை நிமிர்ந்தும் போது பணம் மீண்டும் மதிப்பு பெறும்.

டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது காலக் காப்பீடு.  தவணையைக் கட்டுவோம்.  பாலிஸி முதிர்வு தேதி வரை.  ஆனால் முதிர்வுத் தொகை என்று எதுவும் கிடைக்காது.   

சாதாரணமாக ஒரு லட்சம் பாலிஸிக்கு வருடப் பிரீமியம் ரூ 5000 இருக்கும். ஆனால் இதே ஐயாயிரத்திற்கு டேர்ம் பாலிஸி 20 லட்சத்திற்குக் கிடைக்கும்.  அதுதான் பெனிஃபிட்.

குடும்பச் சுமை பெரியதாக இருந்து பிரீமியம் கட்டுவது சிரமம் என்னும் நிலை இருந்தால் டேர்ம் பாலிஸியை எடுக்கலாம்.   30 வயது நிரம்பியவர் தன் 60 வயது வரை 25 லட்சத்திற்கு வருட பிரீமியம் சுமார் ரூ 7000/- தான்.   அதாவது நாள் ஒன்றுக்குச் செலவு ரூ 20  மட்டுமே.  ஒரு கப் காஃபீயின் விலை !  அப்ப இது காப்பீடு அல்ல.  COFFEEடு ! இது எப்டீ இருக்கு !

டிஸ்கி:- காப்பீடை, காஃபி ( விலை) யோட சேர்த்து காஃப்ஃபீடு ஆக்கிக் கொடுத்திட்டீங்க. டேர்ம் பாலிசியின் நன்மை பத்தியும் அதன் எளிய (தொகை ) முதலீடு பத்தியும் சிறப்பா சொன்னதுக்கு நன்றி விவிஎஸ் ஸார் ! 

3 கருத்துகள்:

 1. மிக மிக அருமையான கருத்துக்களைக் கொண்ட சாட்டர்டே போஸ்ட்! தகவலுக்கு தங்கள் இருவருக்கும் மிக்க நன்றி

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 2. நன்றி துளசி சகோ & கீத்ஸ்

  நன்றி வெங்கட் சகோ

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...