பலவான் என்றால் வலிமை உடையவன். வலிமை என்றால் சாதாரண வலிமை அல்ல. நேர்மையும் வீரமும் கொண்ட ஒருவன் பத்துத்தலை உள்ள ஒருவனைக் கைக்குள் பிடித்து அடக்க முடியுமா. அடக்கி இருக்கிறானே. அந்தப் பத்துத்தலை கொண்டவனும் வீரதீரப் பராக்கிரமம் மிக்கவன்தான். அதெப்படி முடியும் என்று நினைக்கிறீர்கள்தானே. அந்த பலவான்களைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
கிஷ்கிந்தை என்றொரு நாடு இருந்தது. அதை நிரஜன் என்னும் வானர அரசன் ஆண்டுவந்தான். அவனது மகள் விரஜா மிக மிக அழகி. அவளை நிரஜன் ருஷீடன் என்ற வானர அரசனுக்கு மணம் செய்து கொடுத்தான். இவர்களுக்கு வாலி, சுக்ரீவன் என்ற இரு வானர இளவரசர்கள் பிறந்தார்கள்.
வாலி மிகுந்த வலிமை வாய்ந்தவன். இவன் சுவேஷன் என்ற வானர அரசனின் மகளான தாரையை மணந்தான். கேசரி என்ற வானரனுக்கும் அவனது மனைவி அஞ்சனைக்கும் பிறந்த அனுமன் பிறந்தார். கிஷ்கிந்தையை வாலி ஆட்சி செய்துவர அனுமன் அவருக்கு மந்திரியாக ஆலோசனை வழங்கி வந்தார்.
இது இப்படி இருக்க இந்த தசமுகன் என்பான் யார் என்று பார்ப்போம். இவன் பத்துத்தலை கொண்டவன். இலங்காதிபதி. சிறந்த சிவபக்தன். வீணை இசைப்பதில் வல்லவன். இவன் பாடிய சாமகானத்தைக் கேட்டு சிவன் மகிழ்ந்து பல வரங்கள் கொடுத்திருக்கிறார்.
இவன் திக்பாலகர்களை வெற்றி கொண்டவன். தோல்வி என்பதே அறியாதவன். மூன்று லோகமும் இவன் காலடியில். நவக்ரகங்களும் இவனது சிம்மாசனப்படியில் . இப்படியான கீர்த்திகளைக் பெற்ற இவன் வாலியின் வலிமையைக் கேள்விப்பட்டு அவனை அடக்க வேண்டும் என எண்ணினான்.
அப்படியான ஒரு சந்தர்ப்பமும் வாய்த்தது. வாலி மிகுந்த பக்திமான்.தினமும் காலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்து நித்ய பூஜைகளை முறைப்படிச் செய்து கடவுளை வணங்கி வருவான்.
ஒருநாள் இவன் தென்கடலில் குளித்து முடித்து பூஜை புனஸ்காரம் செய்து சூரியபகவானை வணங்கிக் கொண்டிருந்தான். இதை தென்கடலுக்கு அப்பாலிருந்த இலங்காதிபதியான இராவணன் என்ற தசமுகன் அறிந்தான். உடனே கடுகி வந்து சேர்ந்தான்.
நியம நிஷ்டையின்போது வாலி திருப்பித் தாக்கமாட்டான் என்று நினைத்து வாலியின் பின்புறம் வந்து நின்றான் அந்த தசமுகன். தனது கதையை எடுத்து வேகமாகத் தாக்க முயல அஷ்டாவதானியான வாலி இதை அறியாமல் இருப்பானா. அவனது மனம் பூஜையில் இருந்தாலும் செவிகளில் பின்புறம் யாரோ தாக்க வந்த அரவம் கேட்கத்தான் செய்தது. மன்னன் அல்லவா? எல்லாப்பக்கமும் விழிப்புணர்வோடு இருந்தான்.
கண்டும் காணாதபடி இருந்த வாலி சடாரெனத் திரும்பி தசமுகனை இறுக்கிப் பிடித்தான். அப்படியே கதையோடு அவனைத் தனது அக்குளில் இடுக்கிக் கொண்டான். தசமுகனின் நிலையோ பரிதாபம். அசைய முடியவில்லை. ஆனால் இந்த வாலி அவனை இடுக்கியபடியே எல்லா சமுத்திரங்களுக்கும் சென்று நீராடினான். நிதானமாக அமர்ந்து ஜபம் தபம் எல்லாம் முடித்தான்.
ராவணனின் நிலைதான் இம்சை. வலிமைமிக்க வாலியின் கரங்களுக்குள் நசுங்கிக் கிடந்தான். மனதுக்குள் சிரித்தபடி தசமுகனை எங்கும் இறக்கிவிடாமல் கிஷ்கிந்தைக்குச் சென்றான் வாலி. தன் மகன் அங்கதன் படுத்திருக்கும் தொட்டிலின் அருகே சென்று தசமுகனை பொம்மை போலத் தொட்டில் கம்பியில் கட்டித் தொங்கவிட்டு விளையாட்டுக் காட்டினான்.
தசமுகனுக்கோ அவமானம் பிய்த்துத் தின்றது. பூஜையில் இருந்த வாலியைப் பின்புறம் சென்று நேர்மையற்ற முறையில் தாக்கியது தவறுதானே என்று உணர்ந்தான்.
“வாலி என்னை மன்னித்துவிடு “ என்று இறைஞ்சினான்.
“மூவுலகும் உன் காலடியில் என்ற மமதையில் திரிந்தாயே கடைசியில் வானரமாகிய என்னிடம் மாட்டிக் கொண்டாயே “ கெக்கலித்தான் வாலி.
வானர அரசனான வாலி மன்னிக்கும் பெருந்தன்மை கொண்டவன். உடனே மன்னித்து அவனை விடுவித்தான். இராவணன் வாலியின் வல்லமையைப் பாத்துத் தன்னை நண்பனாக ஏற்கும்படிச் சொல்லிச் சென்றான்.
ஒரு தலை உள்ளவன்தான் வாலி. அவன் பராக்கிரமமோ பெரிது. நேர்மையானவன், வலிமை மிக்கவன். அதனால்தான் பத்துத்தலை கொண்ட தசமுகனை கைப்பிடிக்குள் பிடித்து அடக்கவும் முடிந்தது. பேராண்மை மிக்கவன் ஆதலால் அவனை மன்னித்து விடுவிக்கவும் முடிந்தது. வலிமையிலும் நல்லுள்ளத்திலும் வாலியைப் போலத் திகழ்வது சிறப்புத்தானே குழந்தைகளே.
டிஸ்கி:- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 4 . 1. 2019 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் அஷோக் & தேவராஜன் ஷண்முகம் சார்.
டிஸ்கி:- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 4 . 1. 2019 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் அஷோக் & தேவராஜன் ஷண்முகம் சார்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
சிறப்பான கதை. சிறுவர்களுக்கு இந்த மாதிரி புராணக் கதைகளை கொண்டு சொல்வது ஒவ்வொரு பெரியவர்களின் கடமை.
பதிலளிநீக்குதொடரட்டும் சிறப்பான பதிவுகள்.
வாலியின் வலிமையை உங்கள் எழுத்து மூலம் அறிந்தேன். அருமை.
பதிலளிநீக்குஅழகிய குட்டிக் கதை... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅழகான கதை! நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துகள்!
நன்றி வெங்கட் சகோ
பதிலளிநீக்குநன்றி ஜம்பு சார்
நன்றி அதிரா
நன்றி துளசி சகோ :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!