எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 1 நவம்பர், 2017

மெர்சலும் துப்புக்காரர்களும்.

1621. Ore mercelathan keethu. 😂


1622. உக்கிரமான சாமியை எல்லாம் பாஸ்வேர்டா வைச்சா எந்த உக்கிரம் எந்த ஐடிக்குன்னு மறந்துபோகுது. இந்த ஐடில இந்த லாப்டாப்புல இன்ன தேதிலதானே பாஸ்வேர்ட் மாத்தினேன்னு காமிக்கிறது என்ன பாஸ்வேர்டுன்னும் காமிக்கலாம்ல.  :P 

1623. நாம டிம் டிப் செய்தாலும் எதிர்க்க வர்றவங்க நம்ம கண்ணை குருடாக்கிடுறாங்களே. இந்த பஸ் , லாரி கூட பரவாயில்லை. வேன்., கார்க்காரங்களுக்கு கர்ட்டஸின்னா என்னன்னு லைசென்ஸ் கொடுக்கும்போதே க்ளாஸ் எடுக்கணும். 


1624. சிலபேர் ரோட்ல துப்புவாங்க. சிலபேர் போஸ்ட்ல துப்புவாங்க. அது ஒரு நோய்.

1625. நீங்க சமீபத்துல படிச்சு வியந்த நாவல் எது. ? ரசிச்சுப் பார்த்த சினிமா எது..?

1626. உரிமையில்லாத விஷயங்கள் கிடைக்கும்போது மறுக்காவிட்டால் உரிமையுள்ள விஷங்களை இழக்க நேரிடும். 

1627. புத்தக வாசிப்பு என்பது ஜுரம் போன்றது. தானாகத் தணிந்தால் உண்டு. :) 

1628. நிறைய விஷயங்களை( உண்மைகளை)க் கொட்டி இருக்கிறார் சோ. தர்மன். வாசித்துப் பாருங்கள். !
http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/article5331336.ece

1629. திருநெல்லையம்மன் மண்டபத்தில் தேர்க்கோலம். !


1630. Album நம்ம சென்னையேதான். :) <3 span="">


1631. எனக்கு பிடிச்ச ரைட்டர்ஸ் பல பேரு... அவங்கள்ல சிலர்..
கல்கி
தி. ஜானகிராமன்
லா.ச.ராமாமிர்தம்,
கி ராஜநாராயணன்
புதுமைப் பித்தன்
ந. பிச்சமூர்த்தி
வண்ணதாசன் 
வண்ண நிலவன்
ராஜேந்திர சோழன். 
சுந்தர ராமசாமி
பிரபஞ்சன்
வைக்கம் முகம்மது பஷீர்
தோப்பில் முகமது மீரான்,
வேல இராமமூர்த்தி
ப சிங்காரம்
கந்தர்வன்
தஞ்சை பிரகாஷ்
பூமணி
ஃபியொதர் தஸ்தவ்யெஸ்கி
கமலாதாஸ்
ஜெயமோகன்
கோணங்கி
ராகவன் சாம்யேல்,
கவிதா சொர்ணவல்லி
கனவுப் ப்ரியன்
மொழிபெயர்ப்பாளர்கள் - என் மகாலிங்கம், சுகுமாரன், ஷாந்தா தத், எம் ஏ சுசீலா (ம்மா ) , கா நல்லதம்பி . இராஜேஸ்வரி கோதண்டம்.
-- உங்களுக்குப் பிடிச்ச எழுத்தாளர்களை குறிப்பிடுங்க..

1632. 1.விக்டர் ஹியூகோவின் ”ஏழை படும் பாடு”,
2. ஃப்யோதர் தஸ்தாவ்யெஸ்க்யின் ”குற்றமும் தண்டனையும் & அசடன். ( சுசீலாம்மா மொழி பெயர்ப்பு ) .
3. வைக்கம் முகம்மது பஷீரின் ”மந்திரப் பூனை”. & மதிலுகள்.
4. கல்கியின் ”சிவகாமியின் சபதம்”.
5. சுசீலா தேஷ்பாண்டேயின் ”மௌனத்தின் குரல்”.
6.ப சிங்காரத்தின் ”கடலுக்கு அப்பால்” ( & புயலிலே ஒரு தோணி )
7. வேல ராமமூர்த்தியின் ”குற்றப் பரம்பரை”
8. லா. ச. ராமாமிர்த்தத்தின் “ அபிதா “
9. சுந்தர ராமசாமியின் “ ஜே ஜே சில குறிப்புகள்.
10. ஜெயமோகனின் “ கன்யாகுமரி “
11. ஸ்டெல்லா புரூஸின் “ அது ஒரு நிலாக்காலம். “
12. கவிதா சொர்ணவல்லியின் “ பொசல் “
-- இவை எனக்குப் பிடித்த புனைவு இலக்கியங்கள். உங்களுக்குப் பிடித்த புனைவு இலக்கியம் பற்றிக் குறிப்பிடுங்களேன்.


1633.நிஸிம் இசக்கியேலின் ஹிம்ஸ் இன் டார்க்னெஸ். ( சிலவற்றை இருளின் கீதங்கள் என மொழிபெயர்த்துள்ளேன் )
http://honeylaksh.blogspot.com/…/nissim-ezekiel-hymns-in-da…
http://honeylaksh.blogspot.com/2015/02/blog-post_15.html
டென்மார்க் நாவலாசிரியை சிக்ரிட் அண்ட்செட்டின் சில எழுத்துக்கள்.
http://honeylaksh.blogspot.com/2015/10/sigrid-undset.html
ரோமானிய அறிவுஜீவி ஆக்டேவியன் பேலரின் சில கவிதைகள். ( எல்லாவற்றிற்கும் நமக்கு நேரம் இருக்கிறது - என்ற கவிதையை மொழிபெயர்த்துள்ளேன்.) 
http://honeylaksh.blogspot.com/2016/01/octavian-paler.html
கன்னட மொழியிலிருந்து திரு . காளிமுத்து நல்லதம்பி அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்ட மொட்டு விரியும் சத்தம் என்ற கவிதைத் தொகுதியை வாசித்திருக்கிறேன்.
http://honeylaksh.blogspot.in/2014/05/blog-post_29.html
பாட்டியின் கனவுகள் – சிவராம காரந்த். ( முக்கஜ்ஜீய கனஸுகளு - தமிழில் DR. டி பி சித்தலிங்கையா).
மௌனத்தின் குரல் – சுசீலா தேஷ்பாண்டே.
குற்றமும் தண்டனையும், அசடன் – ஃபியோதர் தஸ்தவ்யெஸ்கி – சுசீலாம்மா மொழிபெயர்ப்பு.
http://honeylaksh.blogspot.com/2015/09/blog-post_48.html
மந்திரப்பூனை, மதிலுகள் – வைக்கம் முகம்மது பஷீர். – சுகுமாரன் மொழிபெயர்ப்பு.
http://honeylaksh.blogspot.in/2012/12/blog-post.html
http://honeylaksh.blogspot.in/2013/05/blog-post_8.html
ஏழைபடும் பாடு – விக்டர் ஹியூகோ.
மிக்கேல் ஷோலகேவின் ரஷ்யச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு
கே என் மகாலிங்கத்தின் மொழிபெயர்ப்பில் இரவில் நான் உன் குதிரை என்ற 17 நாடுகளையும் மொழியையும் சார்ந்த சிறுகதைகள்.
http://honeylaksh.blogspot.in/2012/12/blog-post_11.html
--- இவை நான் வாசித்த வேற்றுமொழி இலக்கியங்கள். இவற்றில் என்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் கன்னடக் கவிஞர் பி லங்கேஷ். , வைக்கம் முகம்மது பஷீர், போலந்தின் ஐசக் பாஷவிஸ் சிங்கர் , பிரிட்டிஷ் நாவலாசிரியை வர்ஜீனியா வுல்ஃப், சித்ரா திவஹருண்ணி.
--- உங்களைக் கவர்ந்த வேற்றுமொழி இலக்கியத்தையும் எழுத்தாளரையும் பட்டியலிடுங்களேன். ( மிஷேல் ஃபூக்கோ, ஆல்பர் காம்யூ, ஹாருகி முரகாமி பற்றி அறிந்திருக்கிறேன். ) இன்னும் தெரிந்துகொள்ள & வாசிக்க ஆசை.

1634. Thirukkalyana prasadham 😍


1635.. பையன் :- நேத்து நைட் பாரடைஸ்ல சிக்கன் பிரியாணி, சித்திக்ல கபாப், 
சிக்கன் ட்ரம்ஸ்டிக், சிக்கன் தந்தூரி, கோங்குரா சிக்கன் க்ரேவி சாப்பிட்டோம் மா.
நான்:- இதுதான் காரணமா.
பையன் :- எதும்மா.
நான்:- நேத்து நைட் கனவுல பூரா காப்பாத்து காப்பாத்துன்னு கூட்டம் கூட்டமா கோழிங்க ஓடியாந்துச்சுடா :P
பையன் :- அம்மா குண்டா.. நீங்க எனக்கு அம்மாவா சிக்கனுக்கு அம்மாவா.

1636. டென்ஷன் என் கூடவே பிறந்தது. எவ்வளவுதான் நான் கோபத்தை கிளப்பினாலும் பொறுமையா இருப்பாரு என் கணவர். அவரோட அன்பு பண்பு பாசம் நேசம் காதல் எல்லாத்தையும்விட எனக்கு ரொம்பப் பிடிச்சது அவரது தன்மையான குணம்தான். உங்க வாழ்க்கைத் துணைகிட்ட உங்களுக்குப் பிடிச்ச குணத்தைப் பத்தி சொல்லுங்களேன்.

1637. ஒரே ரொமாண்டிக் சாங்க்ஸ். லவ் யூ ஜெயா - Thenammai Lakshmanan was watching Jaya Max.

1638. எழுத்தாளார் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலி.

1639. போன வருடம் கம்பர் விழாவிலும் இவரது பேச்சுக்கேட்டு நான் இப்படி நினைத்தேன். !. மேலும் காரைக்குடி புத்தகத் திருவிழாவில் ஒரு முறை நாஞ்சிலாரும் இப்படி அன்பார்லிமெண்டரி வேர்ட்ஸ் பயன்படுத்தி , பயப்படுத்தி இருக்கிறார். காரைக்குடிக்கென்று சில தராதரம் இருக்கிறது. அது இம்மாதிரி எழுத்தாளர் பேச்சாளர்களின் பேச்சால் தரம் தாழ்ந்து விடுகிறது. இனி அழைக்குமுன்னே யோசிக்க வேண்டும். அல்லது அவர்களுடைய வெல்விஷர்ஸ் யாரும் அவர்களுக்கு இங்கே இலக்கியம் தவிர எந்தத் தரம்தாழ்ந்த வார்த்தைகளும் தகாது என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும்.

https://www.facebook.com/saba.saba.35762241/posts/2063146287251856

1640. ஆலத்தின்கீழ்
ஞானம் கிடைத்தது
சுஃபலருக்கு.
நிலம் ஒன்று.
நிழல் விரியலாம்
வேர் பரவலாம்
தொழுவத்துப் பசுக்களுக்கு
ஞானம் பெருக்குவது
அடுமனையாக இருக்கலாம்
நெருப்பு ஒன்று
ஐந்தவித்தலும்
அன்னம் பாலித்தலும்.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :) 

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான். 

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும். 

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும். 

59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள். 

60. தல ஃபேன்ஸும் கலகலப்பும். 

61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும். 

62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும். 

63. தேசப்பற்றும் தேசப்பித்தும். 

64.  தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.

65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும். 

66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.  

67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால். 

68. முயலும் மானும் மயிலும் பூக்களும் . 

69. டாகிங்கும் ஹாக்கிங்கும். 

70. பாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் பஸ்களும்.

71. பிரிவின் வெறுமையும்காலிக்குடங்களும் 

72. சனி லைக்கோ முனி லைக்கோ ... விடாது கருப்பு

73.  நேற்றைய மீனும் ஞாபகக் கொக்கும்.

74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


82. மெர்சலும் துப்புக்காரர்களும். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...