வெள்ளி, 17 நவம்பர், 2017

அசையும் பொழுது.

பகல் தோணி
சூரியத் துடுப்பில்

மரங்கள் மண்ணுடன்
நித்யப் புணர்வில்

குதிரைகள் லாடமில்லாமல்
குளம்படி பதித்து
அவசர ஓட்டம்புற்களுக்குள்
பூத்தையல் போடும் மரம்

ஆலவிழுதுகள்
கரம்நீட்டிச் சுயம் விரிக்கும்.

மேடையில் அடிக்கடி
இளைப்பாறிச் செல்லும்
ஒற்றைப் பயணி.

மனமோ
உணர்வின் அடுப்பில்.

*  ~  *  ~  *  ~  *  ~  *  ~  *  ~  *  ~  *  ~  *  ~  *  ~  *

புண்பட்ட ஆலங்கள்
தினம் வழிப்போக்கர்களைச்
சுமந்துகொண்டு

வீடுகள்தோறும்
மின்சாரக் கம்பிகள்
விளக்கெரிக்கவும் அணைக்கவுமாய்.

இருட்டுக் கிராமத்தின்
கட்டைவண்டி மாடாய்
அசையும் பொழுது.

உருவமில்லாத இசையாய்
வழியும் வெய்யில்.

-- 85 வருட டைரி.

1 கருத்து :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...