திங்கள், 13 நவம்பர், 2017

ஃபாத்திமா அம்மாவின் அப்ரிஷியேஷனும் சஜஷனும். !

மதுரை ஃபாத்திமாக் கல்லூரியில் தமிழ்த்துறையில் என்னைப் புதுப்பித்த இருவர் சுசீலாம்மா, ஃபாத்திமா அம்மா. புதுக்கவிதை பற்றிய அசைன்மெண்டை கவிதையாகவே எழுதிக் கொடுத்ததால் ஐந்துக்கு நாலே முக்கால் மதிப்பெண்கள் கொடுத்தவர்.

இவர்கள் இருவரும் கொடுத்த ஊக்கத்தாலேயே நான் ரசயானம் படித்தாலும் தமிழை நேசித்தேன். தமிழ் கவிதைப் போட்டிகளில் கலந்துகொண்டேன்.

இனி ஃபாத்திமா அம்மாவின் அப்ரிஷியேஷன்.

துடைப்பம் பற்றிய கவிதை, அதன் எடுப்பு முடிப்பு எல்லாமே நன்று.

சஜஷன்.

பொருள் பற்றிய சிந்தனையில் தானாய் வரும் படிமங்களோடு வேறு சில படிமங்களைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாம். கவிதையில் அவை ஒட்டாமல் தனியே இருக்கின்றன. கவிதை நீளமாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லையே.
” ஆண்டவரே, என் இறைவனே, வியத்தகு செயல்கள் பல நீர் செய்தீர் :எங்கள்பால் உமக்குள்ள எண்ணங்களில் உமக்கு நிகர் எவருமில்லை. அவற்றை நான் எடுத்துரைக்க விரும்புவேனாகில் அவை எண்ணில் அடங்கா “ - சங் 39 :5.

உங்கள் கவிதைகளை
வாசிக்கும் போதெல்லாம்
ஒரு ஏக்கம்
 என்னுள்  நிழலிடுகிறது.

ஒரு சின்னப் புன்னகை,
வியப்பு விளிம்பிடும்
‘நன்றாய் இருக்கிறது ‘ என்ற வார்த்தை
ஒரு தலையசைப்பு
இவற்றைத் தவிர
ஒரு கவிதையையே பதிலாகத்
தரமுடியவில்லையே என்ற ஏக்கம்தான் அது. --

*              *                    *                   *                   *                  *                  *

ஃபாத்திமா அம்மாவின் அன்பும் பாசமும் அலாதியானது. நன்றியும் அன்பும் அம்மா.

3 கருத்துகள் :

துரை செல்வராஜூ சொன்னது…

தமிழ் என்றாலே இனிமை தான்..

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அவருடைய அன்பினை உங்கள் எழுத்து மூலம் உணரமுடிகிறது. வாழ்த்துகள்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி துரை சகோ

நன்றி ஜம்பு சார்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...