புரவிக்கு சுசீலாம்மாவின் வாழ்த்துக்கடிதம்
நாங்கள் கல்லூரிப் பருவத்தில் கொண்டு வந்த கையெழுத்துப் பத்ரிக்கை புரவி ( PEGASUS ).
அதற்கு சுசீலாம்மாவின் வாழ்த்துக் கடிதம்.
புரவிப் படைப்பாளிகட்கு,
புரவியின் பாய்ச்சலை ஒரே மூச்சில் ரசித்துவிட்டு, ரசனையின் சூடு ஆறுமுன் இதை எழுதுகிறேன்.
“சின்னஞ்சிறு கதைகள் பேசி” உழலும் மனித மந்தையரிடையே புரவிக் கூட்டம், அபூர்வமாய் மொட்டுவிட்டிருக்கும் ஒரு குறிஞ்சி மலர்க்கூட்டம் ! பேசிவிட்டுப் பிரியாமல் செயல் வடிவம் கொடுக்க முனைந்தமைக்கு முதற் பாராட்டுக்கள் !
குஞ்சின் தழல் வீரம்... மூப்பை விட விஞ்சியதுதான். ! காரணம், இளமை பாய்ச்சலுக்கு முன்.. முதுமைத் தள்ளாட்டம் தோற்றுத்தானே போகிறது. ? பதினாறடி பாயும் குட்டிகள்.. இன்னும் பன்னூறடிகள் தாவ வேண்டுகிறேன் !
புரவியின் கடிவாளம் இலக்கியத்தை நுனிப்புல்லாக்கும் படைப்பாளிகட்கும், விமர்சகர்களுக்கும் ஒருங்கே இடப்பட்டிருக்கிற கண்டனக் கடிவாளம். ! WELL DONE ! .
திமிறல்களில் கவிதை, சிறுகதை, உரை, தேர்தல் என வெரைட்டி கொடுத்திருப்பது நன்றாக இருக்கிறது.
பாத்திமா லாயத்திலிருந்து பயண இலக்கை நோக்கிப் பாயத்தொடங்கி இருக்கும் அருமைப் புரவிகளே !
உங்கள் கனைப்பும், திமிறலும், மேய்ச்சலும் , பிறவும் தொடர்ந்து பெருகட்டும். !
புரவி என்ற பெயர் கொண்டாலும் உங்கள் பார்வைகள், புரவிப்பார்வையாக அல்லாமல் விசாலித்து விஸ்தீரணப்படட்டும். !
குழந்தைகள் பெற்ற குழந்தையாய்ப் ‘புரவி’ கண்டு குதூகலிக்கிற மனதுடன்..
எம். ஏ. சுசீலா.
* * * * * * * * *
ஹ்ம்ம் புரவியைத் திரும்பக் கொண்டுவரலாமா என்ற எண்ணம் அவ்வப்போது எழுகிறது. அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும். பார்க்கலாம்.

வாழ்த்துக்கள் சகோதரியாரே
பதிலளிநீக்குயாரிந்த சுசீலாம்மா
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார் சகோ
பதிலளிநீக்குபாலா சார் .அவங்க ஃபாத்திமாக்கல்லூரியின் எங்க தமிழம்மா. ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி மற்றும் பலரோட நூல்களை மொழிபெயர்த்தவங்க. சிறுகதைத் தொகுப்புகள் பல வெளிவந்திருக்கு அவங்களோடது.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!