முன்னே எல்லாம் சொத்தைப் பல் என்றால் பிடுங்கிவிடுவார்கள் டாக்டர்கள். இல்லாவிட்டால் தங்கப்பல் கட்டி விடுவார்கள். என் சொந்தக்காரர்களில் ஓரிருவர் இதுபோல் கட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களை நினைக்கும்போதெல்லாம் தங்கப் பல்லே பிரதானமாய் நினைவில் பளீரிடும். ! இப்போது எல்லாம் சொத்தை( யை) எடுத்துவிட்டுப் பூசி மெழுகி விடுகிறார்கள். அதன் மேல் சிர்க்கோனியம் பல்லை டூத் பிக் போன்ற மரக்குச்சிகளால் சொருகிவிடுகிறார்கள்.
இங்கே காண்பவை அனைத்தும் மாடல் பற்களே. என்னுடையவை அல்ல. கடைசியா கொடுத்திருக்கேன் என்னோட சிர்க்கோனியம் பல்லை ! :)
சில ஆண்டுகளுக்கு முன் துபாய் சென்றிருந்தபோது இடது காதுப்பக்கம் ஏக வலி. அதன் பின் அந்தப்பக்கம் கடைசிப்பல்லிலும் ஒரே வலி.
வலின்னா வலி சும்மா உங்க வலி எங்க வலி இல்ல. இடது கன்னத்தையே பிய்க்கும் வலி.
போன முறை சென்றிருந்தபோது வாசலின் ஒன்று (216 /- ) ரூபாய்க்கு வாங்கியதால் பல் வலியைத் தம்பியிடமும் சொல்லவில்லை. கிராம்பைக் கடித்து சுய வைத்தியம். ஹா ஹா என்று அவ்வப்போது காற்றை ஊதிக்கொள்வது. எசகு பிசகாக ஐஸ் வாட்டர், ஐஸ் க்ரீம், இனிப்பு வகையறா பட்டால் தொலைந்தது . காதும் கன்னமும் வாயும் கடுத்துவிடும் கடுத்து.
ஒரு வழியாக ஒருவாரத்தில் ஊருக்கு வந்ததும் ரங்க்ஸுடன் பெங்களூருவில் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பிரபலமான டெண்டல் க்ளினிக்கு விஜயம் செய்தால் அங்கே கத்துக்குட்டி டாக்டர்களாக இருந்தார்கள். நம்ம பல்லை வைத்துத்தான் கற்றுக் கொள்வார்கள் போல. பல்லுக்குள் ஃபோர்செப்ஸால் தட்டி விளையாடினார்கள். கொஞ்சம் பயமாகவே இருந்தது. எக்ஸ்ரே எல்லாம் எடுத்துப் பார்த்தாங்க. இந்தப் பல்லுதான்னும் கண்டுபிடிச்சாங்க.
அதன்பின் கோவைக்குப் பல் டாக்டரைப் பார்க்க விஜயம் செய்தோம்.
அதற்கு முன் அங்கே ட்ரீட்மெண்ட் எடுத்த உறவினர்களிடம் எல்லாம் கேள்வித் தாள் அனுப்பாத குறையாக கேள்விகள் கேட்டோம். சிலர் ஒரு பிரபல மருத்துவமனையில் ஒரு பல்லுக்கே ரூ 20,000 ரூட் கேனால் ட்ரீட்மெண்டுக்காகக் கொடுத்திருந்தார்கள். அங்கேயும் போய் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி எக்ஸ்ரேயெல்லாம் பிடிச்சு வைச்சிக்கிட்டோம்.
அலசி ஆராய்ந்து நூறடி ரோட்டில் இருந்த ஒரு டாக்டர் நன்றாகப் பார்க்கிறார் எனக் கேள்விப்பட்டு அவரிடம் சென்றோம். இவரிடம் ஒரு பல்லுக்கு ஐயாயிரம்தான்.
இந்த டாக்டர் எப்போதும் மாலையில்தான் பார்ப்பார்.
சென்றபோது ரொம்பக் கூட்டம். அந்த மாடி வளைவில் ஸ்டூல் போட்டு உட்கார்ந்திருந்தார்கள். அதில் ஒருவர் வேகமாக கன்னத்தைப் பிடித்தபடி வந்தார். வந்து அந்த நர்ஸிடம் ”பல்லை உடனே எடுக்கணும்” என்றார். நர்ஸ் ”ஏன் போன வாரம்தானே கட்டினது” என்றார். ”இல்ல வலிக்குது அதுனால எடுத்திடலாம்” என்றார்.
கிலியுடன் அமர்ந்திருந்த நமக்கு இன்னும் கிலி ஏறியது. ”முறுக்கு, சீடை சாப்பிட்டீங்களா, இல்ல, நான் வெஜ் , சப்பாத்தி, சாக்லேட் சாப்பிட்டீங்களா” என்றார் நர்ஸ்.
”வீட்ல விசேஷம்னா இதெல்லாம் சாப்பிடாமலா” என்றார் வந்தவர்.
ரூட் கேனால் பண்ணலாமா இல்லாட்டி சொத்தைப் பல்லைப் பிடிங்கிட்டே போயிடலாமா என்ற டைலமா என்னைப் பிடித்து ஆட்டியது.
ஆனால் ரங்க்ஸோ அந்த இடத்தில் கேப் விழுகும் அதில் நீ சாப்பிட்டது எல்லாம் போய் மாட்டி இன்னும் கஷ்டமாயிடும். அதுனால ரூட் கேனால் செய்திடலாம் என்றார்.
ஒரு வழியாக துணிந்து டாக்டரிடம் காட்டியாச்சு. அவர் பார்க்கவே கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ்ட் டாக்ட்ராகத் தெரிந்ததால் அதிகம் பயம் இல்லை.
வாயில் வழக்கம்போல் முரட்டு சிரின்ஞ் ஒன்றை எடுத்து முரணையின் இருபக்கமும் மரமரப்பு ( அனெஸ்தீசியா) ஊசி குத்தினார். டுர்ர் டுர்ர் என்று ஏதோ ஒரு மிஷினை வைத்து க்ளீன் செய்தார். ஆனால் பல்லை ரொம்ப துருவல. ”ரொம்ப வலிக்குமே” என்றார். வாய்க்குள் தண்ணீரை மைன்யூட் ஹோஸ் மூலம் அடித்து துப்பச் சொன்னார்.
”இல்லையே” என்றேன். இதுக்கு அப்பனான வலியை எல்லாம் நான் துபாயிலேயே அனுபவிச்சிட்டேன். இதெல்லாம் சும்மா.. என்று ( வடிவேலு பாணியில் படிக்கவும் ). சொல்லாமல் நினைத்துக் கொண்டேன். பின்னர் பஞ்சைக் கடித்துக்கொள்ளச் சொல்லிப் போகச் சொன்னார். சில மருந்து மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார்.
இரண்டு நாள் கழித்து வந்தும் வலியில்லை என்றவுடன் டாக்டர் விநோதமாகப் பார்த்தபடி பல்லுக்கு அளவெடுக்க ஏதோ ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் போல் ஒன்றை நர்ஸிடம் கொடுக்கச் சொன்னார்.
நர்ஸ் பிசைந்து கொடுத்ததை அப்படியே என் மேலண்ணத்தில் வைத்துப் பல்லைக் கடித்துக் கொள்ளச் சொன்னார். ஐந்து நிமிடம் கழித்து எடுத்தார்.
அந்த அளவுதான் இது. இதை அப்படியே கேரளாவுக்கு அனுப்பிடுவாராம். இந்த சிர்க்கோனியம் பல் செய்து வந்தபின் வர சொன்னார். ஒரு வார காலம் ஊர் சென்று திரும்பினோம்.
நாலு வகையான டீத் க்ரௌன்ஸ் பயன்படுத்தப்படுது. இந்த ரூட் கேனால் சிகிச்சைல. சிராமிக், போர்சிலின், தங்கம் , சிர்க்கோனியம் மாதிரி மெட்டல். இதுல சிராமிக் முன் பற்கள் கட்டப் பயன்படுது. போர்சிலின் கொஞ்சம் காஸ்ட்லி.
அடிக்கடி ஃபோன் செய்து இருக்காரா எனக் கேட்டு 10 நாள் கழித்துத்தான் திரும்பினோம். அதுவரை ஒரே பக்கமாக சாப்பாட்டை மென்று மென்று இன்னொரு பக்கப் பற்களே தேய்ந்து போன மாதிரி ஒரு ஃபீலிங்க் வந்துவிட்டது.
இதற்கு முன்பே இரண்டு கடைவாய்ப்பற்களை ( விஸ்டம் டீத் ) அதுதான் நமக்கு அதிகமா இருக்கே அதுனால பல்லுக்கென்ன விஸ்டம் அப்பிடின்னு கன்னத்தைக் குத்திக்கிட்டு இருந்ததை எடுத்தாச்சு. அது நம்ம ஹானரரி பிரசிடெண்டுக்கே பல் டாக்டரான பாலி நர்சிங்ஹோமில் டாக்டர் பாலியிடம் எடுத்தது என்ற பெருமையை அடைஞ்சு டில்லி மண்ணுல புதைஞ்சிருச்சு. !
ஆனா பள்ளிக்கூடம் படிக்கும்போது ”நொறுங்கத்தின்றவனுக்கு நூறு ஆயுசு ” அப்பிடின்னு சொன்னாரு ஒரு வாத்யார். அதக் கடைபிடிச்சு கடைப்பிடிச்சு சாப்பாடு நொறுங்குச்சோ இல்லையோ பல் கால்ஷியம் இல்லாம தேய்ஞ்சுபோச்சு. அப்போ எல்லாம் கால்ஷியம் சாண்டோஸ்னு அப்பு யானையோ நாய்க்குட்டியோ போட்ட டப்பாலேருந்து தினம் ஒரு மாத்திரை சாப்பிடுறது. அது போக சத்துன்னு சொல்லி பெரடால்னு ஒரு மீன் எண்ணெய் விட்டமின் டானிக்கைக் குடுத்துப் பிரட்ட வைப்பாங்க.
இது என் பல் மோல்டான்னு தெரியல. அங்க இருந்தத எடுத்துப் போட்டிருகேன். ஆங்க் பல் ஒட்டுன கதையை விட்டுட்டு டில்லிக்கதைக்கும் பால்ய கதைக்கும் போயிட்டேன்.
மறு நாள் போனா டூத் பிக் மாதிரி ரெண்டை முரணைல சொத்தை எடுத்த பல்லுக்கிட்ட சொருகி சிமிண்ட் மாதிரி கொழைச்ச ஒண்ணை வைச்சு இந்தப் பல்லை ஒட்டி அதோட பஞ்சையும் ஒட்டிக் கடிச்சுக்கச் சொன்னாரு.
இரண்டுமணி நேரம் இந்தப் பஞ்சை எடுக்கல. அதன் பின் எடுத்தா வாய்குள்ள ஏதோ தடுத்துக்கிட்டே இருக்கமாதிரி இருக்கு. நல்லா எல்லாப்பல்லையும் வைச்சு இந்தப் பல்லைக் கடிக்கிறாமாதிரி ஒரு மாதிரி புரியாம வந்திச்சு. மறு நாள் போய் கேட்டா பல்லுல ரெண்டு தட்டு தட்டிட்டு. , இதோ சரியாயிடுச்சே என்கிறார் டாக்டர். பட் நமக்கு நாலு நாளாச்சு இந்தப் பல் செட் ஆக.
பட் ஒரு வருடம் கழிச்சு முறுக்கு கிறுக்கு எல்லாம் திங்காம ஒரு சுபயோக சுபதினத்தில் சப்பாத்தியோ சாக்லெட்டோ சாப்பிட்டது ஒட்டிக்கிட்டு இந்தப் பல்லு அப்பிடியே வந்திருச்சு.
காரைக்குடில ஒரு டாக்டர்கிட்ட பல்ல எடுத்துட்டுப் போனா அவர் திரும்ப சிமிண்டு கொழைச்சுப் பூசி ஒட்டி விட்டாரு. அப்ப சொன்னாரு. “ சிக்கன் கூட திங்கலாம். ஆனா சப்பாத்தி, சாக்லெட் சாப்பிடாதீங்க. அதுல எடுத்துட்டுத் திரும்ப வந்தா ஒட்ட முடியாது”ன்னு.
முறுக்கு சீடை எல்லாம் சாப்பிடுறேன் ஒண்ணும் பண்ணல இதுவரை. ஆனால் சப்பாத்தியை வலது பக்கமாவே மென்னு பல்லுத் தேயுது. ஆமா எங்க உறவினர்கள்ல சிலர் ரெண்டு பக்கமும் சிர்க்கோனியம் பல்லை கன்னா பின்னான்னு கட்டி இருக்காங்களே எப்பிடி சாப்பிடுறாங்க.? அது போக வட இந்தியர்களின் முக்கிய உணவே சப்பாத்தி தானே. அத இந்தமாதிரிப் பல்லுக் கட்டுன அந்தப் புள்ளக எல்லாம் எப்பிடித்தான் சாப்பிடுதுகளோ.

கொஞ்சம் சுஜாதா கொஞ்சம் கல்கி ரொம்பவே ரசித்தேன். சுவையும் சத்தும் நிறைந்த பாரம்பரிய உணவைப் போன்ற சுவையும் தகவலும் நிறைந்த "சும்மா" blog (இதையே உங்கள்blog யின் tagline ஆக வைத்துக் கொள்ளலாம். ROYALTY கட்டாயம்)
பதிலளிநீக்குகொஞ்சம் சுஜாதா கொஞ்சம் கல்கி ரொம்பவே ரசித்தேன். சுவையும் சத்தும் நிறைந்த பாரம்பரிய உணவைப் போன்ற சுவையும் தகவலும் நிறைந்த "சும்மா" blog (இதையே உங்கள்blog யின் tagline ஆக வைத்துக் கொள்ளலாம். ROYALTY கட்டாயம்)
பதிலளிநீக்குசிர்க்கோனியம் பல்லினால் சிக்கலும் உண்டோ?
பதிலளிநீக்குஎனக்கு இந்த பற்களால் தொந்தரவு ஏதுமில்லைஎல்லாமே டென்சர்ஸ் எழுத்து நடையே வித்தியாசமாகத் தெரிந்தது
பதிலளிநீக்குநன்றி நலந்தா செம்புலிங்கம் சார் !!!!!!!
பதிலளிநீக்குநன்றி ஜம்பு சார்
நன்றி பாலா சார்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
நகைச்சுவையுடன் பல்வலி மற்றும் பல்சிகிச்சை!!! சிர்க்கோனியம் பல் ஜெர்க்கோனியம் போல இருக்கே.ஹாஹாஹா
பதிலளிநீக்குஜெர்க்கோனியம்தான் கீதா. அதை சிர்க்கோனியம் என்று கிண்டலுக்காக எழுதி இருக்கேன் :)
பதிலளிநீக்கு