செவ்வாய், 14 நவம்பர், 2017

என் குழந்தைகள் தினக் கவிதை. !!!

என் முதல் பையன் வெங்கட் பிறந்த ஓரிரு வருடங்களில் எழுதியது !
எழுதமுடியும் என்னால்
நன்றாக
எழுதமுடியும்.

முறிந்த மனச்சிறகுகளை
வெட்டிப் போட்டு
புதுச் சிறகு
இணைத்து என்னாலும்
எழுதமுடியும் நிச்சயமாய்.


எனக்காய்
என் மகன் இருக்கும்போது
என் இறந்தகாலங்களை
அவன் கண்ணாடியாய்ப் பிரதிபலிக்கும்போது
நிச்சயம் நான்
எழுதிக்கொண்டுதான் இருப்பேன்.

என் மகனுடைய
சிணுங்கல்களில்
ஏழு  ஸ்வரங்களும்
குதித்துவரும்போது

என் மகன்
என்னை இறுக்கத் தழுவும்போது

என் தேவையை
அவன் பரிபூரணமாய் உணர்த்தும்போது
நான் எழுதிக்கொண்டே இருப்பேன்.

என் மகனுக்காய்
நான் பூத்தையலிடும்போது
அவனுக்குப் பிடித்த பதார்த்தம் செய்யும்போது
ஒருஅருமையான
படிக்க முடியாத கவிதையை
என் கை
எழுதிக்கொண்டேதானே
இருக்கிறது.

என் மகன்
குனிவதும்
நிமிர்வதும்
ஊர்வதும்
நடப்பதும்
பேசுவதுமே
உலகில் மிகச் சிறந்த
கவிதையாய் இருக்க
எனக்கேன் வேறு கவிதை ?

4 கருத்துகள் :

Mey சொன்னது…

சூப்பர்!☺️☺️☺️

G.M Balasubramaniam சொன்னது…

குழந்தையின் வளர்ச்சியை கவிதையாக்கலாம்

Siruvarkathaikoodam சொன்னது…

அருமை!
சிரிக்கும்போது
குழந்தையின்
கன்னத்தில்
ஒரு
சிறு
குழி
விழுமே
அதைவிடவா
நாம்
அழகுகவிதை
எழுதிவிடுவோம்
என்பார்
வலம்புரி ஜான்!
அதுபோல
உங்கள் மகன்
அசைவுகளும்
கவிதை பிறக்கிறது!
வாழ்த்துகள்!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மெய்யர்

நன்றி பாலா சார்.நிச்சயம் எழுதுகிறேன்.

நன்றி சிறுவர் கதைக்கூடம்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!


கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...