எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 31 ஜூலை, 2015

அவங்கதான் இவங்களா..

81 - 84 வரையிலான குமுதம் விகடன் அட்டைப்படங்கள். என்னுடைய சேமிப்பில் இருந்து கண்டெடுத்தேன். அட அட அட கொள்ளை அழகுக் குழந்தைகள். ஆமா இப்ப எல்லாம் குழந்தைகளைப் புகைப்படம் எடுத்து அட்டைப்படம் போட்டா யாரும் பார்க்கிறதில்லையா. இல்லாட்டி  பெத்தவங்க ஒப்புக்கிறதில்லையா. என்னவோ போங்க.. இவங்க எல்லாம் இப்ப வளர்ந்துருப்பாங்க.,

ஒரு வேளை அவங்கதான் இவங்களா :) :) :)


அப்பக் கூட குமுதம் குறும்பைப் பாருங்க. :)

வியாழன், 30 ஜூலை, 2015

முன்னோடிகள் மறைவதில்லை.

கல்லூரியில் சேரும் முதல் நாள். முதல்வரைச் சந்திக்க வேண்டும். ஒரே டென்ஷன்.தந்தையுடன் ரிஷப்ஷனில் நின்றது ஞாபகத்தில் பக்கத்தில் ஒரு சின்ன கெபி. குழந்தை யேசுவைச் சுமந்த மேரி கண்ணில் பட கல்லூரி பற்றிய பயத்தோடு சின்ன பெரிய வேண்டுதல்கள் எல்லாம். முதல்வர் சந்திப்புக்குப் பின் ராகிங் இருக்குமே. அதுதான். 

என்னுடைய டர்ன். அப்பாவோடு உள்ளே நுழைந்து மாலை வணக்கம் சொன்னேன். கண்ணாடியணிந்த கம்பீரமான உருவம். சிம்மம்போன்ற பார்வை. நான் மிரட்சியோடு இருக்க அப்பா’ கெமிஸ்ட்ரில நல்ல மார்க் இருக்கதால பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரி க்ரூப் கிடைக்குமா ‘ என்று கேட்டார். லேசான கனிவோடு கேட்ட கோர்ஸில் கையெழுத்திட்டுக் கொடுத்தார் சகுந்தலா மேடம் . கொஞ்சம் பயமும் அதிகம் நம்பிக்கையுமாக வெளியே வந்தேன். 

புதன், 29 ஜூலை, 2015

முகமூடிகளும் மனப்பூக்களும்.

321. கன்னியாகுமரியை நான் ஒரு ரயில் பயணத்தில் படித்தேன் . அவர் சொன்ன ஒரு விஷயம் ஆச்சர்யப்பட வைத்தது. பெண்ணை முழுமையாக யாருமே உணர்ந்ததில்லை., அவள் மனதின் அடி ஆழத்தை உணரவே முடியாது எல்லாவிதத்திலும் என்ற இடம் பிடித்தது. ஆனால் ஆரம்பம் ஏனோ கொஞ்சம் பிடிக்கல. சைக்கலாஜிக்கலா ஒரு ஆண் அதுவும் காதலன் , (கணவன் இல்லை ) இப்படியும் தன் காதலி பத்தி அவளுக்கு ஒரு சிதைவைச் சிந்திக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தது. ஆனால் பல மனிதர்களின் இயல்பைப் பார்த்தா அது உண்மையான விஷயமாகவும் இருக்கலாம் என  இப்பத் தோணுது.

322.  இனி எதுவும் செய்து திருத்திவிடமுடியாது அம்முகத்தை.

தனக்கு மட்டுமே தெரிந்த கோணல், தனக்கு மட்டுமே தெரியாத அழுக்கு,பிறருக்குத் தெரியும் இனிப்பும் கசப்பும் பூசிக்கிடக்க பலவருடங்களாக தேய்த்துக் கழுவிக் கழுவிச் சுத்தம் செய்த அம்முகத்தில் சுருக்கங்கள் சேரத்துவங்கி இருக்கிறது வயோதிகத்தின் வலியாய்.

திருத்தமுடிந்த சிலவும் திருத்தமுடியாத பலவும் நிறைவேறாத கனவுகளும் எதிர்பாராத நிகழ்வுகளும் அசைக்க நதியில் மிதக்கும் சருகாய் காயத்துவங்கி இருக்கிறது அவ்வுடல்.

மீட்டெடுக்க முடிந்த சொச்ச ஞாபகங்களை அசைபோட்டுக்கொண்டிருக்கிறது அந்த மனம்.

வீட்டின் ஒரு பகுதி இளையோர் உலகமாயிருக்க
இன்னொரு பாகம் முதியோர் இல்லமாய் ஆகிக்கொண்டிருக்கிறது.

323. புதுக்கவிதைகளை எள்ளி நகையாடியவர்கள் இன்று பாராட்டுக் கட்டுரைகள் எழுதுகிறார்கள் :)
காலத்தின் கட்டாயம். :)

324. நடிகர்கள் பெருகிவிட்டார்கள் எல்லாத் துறையிலும்.

செவ்வாய், 28 ஜூலை, 2015

பூக்களும் பூவையர்களும்.

பூக்களும் பூவையர்களும்.


பூக்களிலே நானும் ஒரு
பூவாய்த்தான் பிறப்பெடுத்தேன்.
பூவாய் நான் பிறந்தாலும்
பொன்விரல்கள் தீண்டலையே.
பொன்விரல்கள் தீண்டலையே
நான் பூமாலை ஆகலையே.

என்ற மு மேத்தாவின் கவிதை கல்லூரிப் பருவத்தில் படித்தது. அரளிப்பூ சொல்வது போல் அமைந்த இக்கவிதை முதிர்கன்னிகளையும் அவர்தம் நிலையையும் குறிப்பது. இன்னும் மறக்காமல் நினைவில் நிற்கின்றது.

நேரு மாமா என்றால் க்கெல்லாம் ரோஜாப்பூ ஞாபகம் வரும். புன்னகை பூத்தல், நறுமுகை, ென்னஅரும்புதல், முல்லைச் சிரிப்பு, இவை எல்லாமே மலர் தொடர்பான சொற்கள். மலர்விழி, பூங்குழலி, மல்லிகா, ரோஜா, பைரோஸ், ஜாஸ்மின், தாமரை, செந்தாமரை, குறிஞ்சி, வாணி, திலகம், செண்பகம், வள்ளி, புஷ்பா, மாலா , ஃப்ளோரா, ஃப்ளாரன்ஸ், என்று நம்மூர்ப் பெண்களின் பெயர்களிலும் சரி மலர்கள் மணம் வீசுவன.

ஞாயிறு, 26 ஜூலை, 2015

என்னது..பரிசுத்தொகை.. ஒரு லட்சத்து இருவதாயிரமா..!!!

எலே சாந்தி மாரியப்பன், ராமலெக்ஷ்மி, ஜெயந்தி ரமணி, ஹுசைனம்மா, ரூஃபினா ராஜ், தமிழ் அரசி, சக்தி செல்வி,  கீதா மதிவண்ணன், உமையாள், பவள சங்கரி, அகிலா புகழ், உஷா, யாழ் தர்மினி, ஈழவாணி, நிவேதா உதயராயன், சாய் இந்து,  சாந்தாதத் மேடம், சுபாஷிணி மேடம், சரஸ்வதி ராஜேந்திரன் மேடம் ..... எடுங்கலே பேனாவை :) -- கீபேடை.  எழுதுங்கலே கல்கி குறுநாவல் போட்டிக்கு.. ஒரு பரிசாவது வாங்கிர்ரம்லே :)


சனி, 25 ஜூலை, 2015

வலம்புரியாம்.



எல்லாம் குப்பை. !
எழுதாதே என்று சொல்ல
உனக்கேது அதிகாரம்
சர்வாதிகாரம்,
அதி காரம்.

அனைத்தும் வலம்புரியானால்
வல்லமை இழந்துபோகும்

முத்துக்கள் சித்தித்தால்
விட்டெறியவா முடியும்.?

ஊக்கமளிக்கும் பின்னூட்டங்களும் பகிர்வுகளும் :)

பாராட்டும் வார்த்தைகள் நம்முள் உற்சாகத்தைப் பிறப்பிக்கின்றன. அதிலும் நாம் ஒரு கட்டுரை சிறப்பானதாகக் கருதும்போது அதற்குக் கிடைக்கக் கூடிய பின்னூட்டங்களை ஊன்றிக் கவனிக்கிறோம். நாம் சொல்லவந்ததை சரியாக யார் கிரஹித்திருக்கிறார்கள் என்று. அவ்வாறு நம் எண்ணப் போக்கோடு இன்னொருவரின் சிந்தனையும் ஒத்துப் போகும்போது மகிழ்வுண்டாகிறது.

மேலும் சில சமயம் நம்முடைய நல்ல குணங்கள் என்று (!) நாம் நினைத்துக் கொண்டிருப்பதையும் யாராவது சிலாகித்தால்  நம் மூளையெனும் பொன்னேட்டில் பொறிக்கப்பட்டு மறக்கவியலா கல்வெட்டாகிறது. அப்படி மகிழ்வித்த சில ஊக்கமூட்டும் பின்னூட்டங்களை இங்கே பகிர்ந்துள்ளேன் :)


புதன், 22 ஜூலை, 2015

தாமரைகள் கூம்பிவிடுமுன்.



தாமரைகள் கூம்பிவிடுமுன்
எழுதிவிடவேண்டும்

சமவெளி இருட்டுச் சகதிக்குள்
வம்சவெளிதெரியாமல்
பள்ளத்தாக்குகளாய்
பதுங்கிப் போவதற்குள்

செவ்வாய், 21 ஜூலை, 2015

பெண் பூக்கள்.

உங்கள் பேரன்புடனும் பேராதரவுடனும் என் அடுத்த கவிதைத் தொகுதி பெண்பூக்கள் வெளிவந்துவிட்டது .

////// 3 1/2  வருடங்களுக்கு முன்

திங்கள், 20 ஜூலை, 2015

செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

செட்டி நாட்டுத் திருமணங்களில் பெண்ணுக்கு குறைந்தது 4 அலமாரிகளாவது வைப்பார்கள். தேக்கு மர அலமாரி, கண்ணாடி அலமாரி ( இதுவும் தேக்குதான் ). காட்ரெஜ் பீரோ, அடுப்படி வலை பீரோ என்று.

106. கருங்காலி மரத்தில் மரப்பெட்டகங்களும் செய்து கொடுப்பார்கள். அவற்றில் சாமான்களை வைப்பார்கள்.

107. திருமண காலங்களில் மாப்பிள்ளை பெண்ணுக்குக் கவரி வீசுவதுபோல இந்த விசிறியால் விசிறுவார்கள். பிரம்பு  விசிறியில் கைப்பிடி அழகாக சுற்றப்பட்டு முழுவதும் ஸாட்டின் துணியினால் வெட்டி ஒட்டித் தைக்கப்பட்டு ஜால்ரா மடிப்பு அமைக்கப்பட்டு எம்ப்ராடரி லேஸால் அழகுபடுத்தப்பட்ட கண்கவர் விசிறி இது :)

இது கொஞ்சம் சிம்பிள் பேட்டர்ன். கைபிடித்து விசிற அழகான இடைவெளியும் அதன் மேல் இதழ் போன்ற அமைப்பில் துணித்தையலும் மிக அழகு இல்லயா :)

காதல் காதல் காதல்.



காதல் காதல் காதல்.

நாட்காட்டியில் இருக்கும் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு விசேஷ நாளாக அறிவித்து அதை வணிகமயமாக்கும் முயற்சியில் மேற்குலகம் ஈடுபட்டிருக்கிறது. தந்தையர் தினம், அன்னையர் தினம், காதலர்தினம் என்று. அந்த வணிகத்தில் அதிகம் கொள்முதல் ஆவது காதலர் தினத்தில்தான். உலகெங்கும் மில்லியன் கணக்கில் புறாக்கள், சிறகுள்ள தேவதைகள் கொண்ட காதலர்தின வாழ்த்து அட்டைகளும், சிவப்பு இதயங்களும் ( சாக்லேட்டுகள் ) சிவப்பு ரோஜாக்களும் , பரிமாறிக்கொள்ளப்படுவது அன்றுதான். அதை ஒட்டி ஒரு வாரம் விழாக்கோலம்.

ரோமப்பேரரசில் வீரர்களுக்கு திருமணமாகிவிட்டால் போரில் நன்கு யுத்தம் செய்யமாட்டார்கள் என்று திருமணத் தடையும் காதல் தடையும் ஏற்படுத்தப்பட்டிருந்ததாம். வேலண்டைன் என்ற பாதிரியார் அவர்களுள் காதலித்த வீரருக்கு ரகசியத் திருமணம் செய்து வைத்த காரணத்தால் மரண தண்டனை பெறுகிறார். பண்டைய ரோமில் கொண்டாடப்பட்ட லூபர்கேலியா என்ற திருவிழாவின் வீரியத்தைத் தடை செய்யவே புனித வேலண்டைன் நாள் என்று அறிவிக்கப்பட்டுக் காதலர் தினம் கொண்டாடப்படுவதாகவும் சொல்லப்படுவதுண்டு.

வியாழன், 16 ஜூலை, 2015

காரைக்குடி புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்.

காரைக்குடியில் சென்ற ஒரு மாதமாக சேத்தியா தோப்பு  அபிநயா புத்தக நிலையத்தார் ஆரியபவன் அருகில் உள்ள ராமநவமி திருமண மண்டபத்தில் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறார்கள். அங்கே எனது நூல்களும் இடம் பெற்றுள்ளன.ஓரளவு விற்பனையும் ஆகி உள்ளன.

குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 10. சொப்புச் சாமானும் நுங்கு வண்டியும்.


45. இனிஷியல் கேம் :-

ஒரு பேப்பரில் அடுத்தடுத்து டப்பா போடும் விளையாட்டு -- மேலே கீழே கோடுபோட்டு டப்பாவா ஃபில் பண்ணி ஒவ்வொரு டப்பாவிலும் முடிவுக்கோடு போட்டவங்க இன்ஷியல் எழுதிக்கலாம்

இது இருவர் விளையாடும் விளையாட்டு. ஒரு ப்ளயின் பேப்பரில் ஒரு கோடு போட்டு ஆரம்பிக்க வேண்டும். அடுத்தவர் அதன் மேல் அல்லது கீழ் அல்லது சைட் கோடு போடலாம். அடுத்து முதலாமவர் மூன்றாவது கோடு போட நான்காவதாக ஒரு கோடு போட்டு டப்பா போல முடிக்க வேண்டும். இது அடுத்தவர் போட்டு விடாமல் நாமே போடவேண்டிய ஒரு புத்திசாலித்தனமான விளையாட்டு. அதிகம் யார் இன்ஷியல் இருக்கிறதோ அவரே ஜெயித்தவர். இதை 3 வயதுக் குழந்தையுடனும் விளையாடலாம்

46. அம்மா குத்து அப்பா குத்து.  

ஏழெட்டு மாதக் குழந்தையிலிருந்து இந்த விளையாட்டை விளையாடலாம்.இரு கைகளையும் நாம்விரித்துப் பிடித்துக் கொண்டு அதன் நடுவில் 

புதன், 15 ஜூலை, 2015

செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும்.

97.அரிசி அளக்கும் படிதான் இது. இதில் க்ரோஷா நூலைக் கொண்டு பின்னல் வேலைப்பாடு செய்திருக்கிறார்கள். அதன் பின் விளிம்பிலும் கீழேயும் கலர் தகடுகளால் பட்டி அடித்திருக்கிறார்கள். திருமணச் சீரில் வைப்பதற்காக இந்த அலங்காரம். :)
98. இது ஒரு சின்ன பாட்டில். இதில் பாசி வேலைப்பாடு செய்திருக்கிறார்கள்.அதுக்குள்ளே வேறு கலர் பாசிகளையும் கோர்த்து டிசைன் செய்திருக்கிறார்கள். !

புரவியாய் ஒரு ஆளுமை.

நிறத்திலும் புறத்திலும்
நிரம்பும் காற்று
சுவாசத்தைச் சீராக்கி
முன்னெடுக்கச் சொல்கிறது.


தனித்திருக்கிறேன் ஆனாலும்
சேணங்களற்ற பயணம்

திங்கள், 13 ஜூலை, 2015

கன்னட ”ஸகி “ பத்ரிக்கையில் எனது கவிதை. ”நீரின் பயணம்”. ( இருமுறை ) !!!

கன்னட ஸகியில் கவிதை.

டிசம்பர் 1 - 15 இதழ். இந்தப் புத்தகத்தில் கடைசியில் இருப்பதுதான் என்னுடைய கவிதையின் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்த சகோ காளிமுத்து நல்ல தம்பி அவர்கள் புகைப்படமும் ( மேலே இருப்பவர்  ) வெளியாகி உள்ளது.அதே கவிதை முதலிலும்  சகியில் (மார்ச் 1 - 15 என நினைக்கிறேன். )வெளியாகி உள்ளது.

புதன், 8 ஜூலை, 2015

”இணைய”ற்ற தெப்பம். ( சொல்வனத்தில் )

”இணைய”ற்ற தெப்பம்..
******************************
 மந்திர உச்சாடனங்களுக்குள்
மிழற்றுகின்றன மாயக் கிளிகள்.
தாழி தப்பிய ஆலிலை வெண்ணைய்
பில்லையில் சுமந்தபடி பயணிக்கிறார் பெருமாள்.
சவ்வுமிட்டாயும் சீனிமிட்டாயும்
சிவப்பாய் சிதறிக்கிடக்கின்றன காடா விளக்கில்.
வாழையை வாளெடுத்து
வெட்டிச் செல்கிறாள் கரகமஹாராணி.

உறக்கத்தின் வேர்.



இரவின் கருமை நீர்க்கச் செய்யும்
இருசொட்டுக் கண்ணீர்த்துளிகள்
உறக்கத்தின் வேர்பிடிக்குமுன்
கிளைபடர்ந்து விடுகிறன..

திசைகளற்ற கனவுகளைத்
துரத்தும் கண்கள்
கோளங்களாய் அசைகின்றன.

செவ்வாய், 7 ஜூலை, 2015

தனக்காக.

கரை கடப்பதும்
அணை கடப்பதும்
அவள் நிர்ணயித்ததல்ல
கரையேறவிடாத அழுத்தம்.

துளியாய் முத்தமிடுவதும்
வெள்ளமாய்ப் பொங்குவதும்
அவள் தேர்ந்தெடுப்பதில்லை
சூழ்நிலை மேகம்.

ஞாயிறு, 5 ஜூலை, 2015

காதல் அகராதி :-


காதல் அகராதி :-

உருவத்தின் வரைபடம்



4.4.86.

7. பிஞ்சுகள் பழுக்கும்
வெம்பலில்

விளக்கின் உதடுகள்
ஒளியை உச்சரிக்கும்.

சூரியன் ஓடிக்கொண்டே
இருக்கிறது.
விரல்களால் சரியான
நிழலைப் பிடிக்க முடியவில்லை.

நிலைத்தன்மை



4.4.86.

6. எத்தனை சாவிகள்
எண்ணற்ற வடிவத்தில்
சிறிதும் பெரிதுமாய்
பூட்டுக்கு ஒத்துவராமல்.

அரைகுறையாய்
அங்கங்கே
பல கட்டிடங்கள்.

நிலத்துள்ளே
கழிவுத் திட்டுகள்

நதியும்
பிளவுகளுடன்

வியாழன், 2 ஜூலை, 2015

கொடுத்தலும் எடுத்தலும்.





3.4.86.

5. கடன்களைக்
கொடுக்கவேண்டுமென்ற
நிதானத்தில்தானே
இருந்தன
அந்தப் பறவைகள்.
பின்னும் ஏன்
இந்த
இராட்சச வலி..?

இதுவோ
கொடுத்தலும்
எடுத்தலும் வேண்டா
பாழ் உலகம்.

புதன், 1 ஜூலை, 2015

பெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும். நமது மண்வாசம் & ஷெனாய் நகர் டைம்ஸ்.

பெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்.

பெண்களுக்கான சமத்துவ உரிமைகள் வழங்கப்பட்டாலும் பெண்களுக்கான சலுகைகளும் சட்டங்களும் இன்னும் பெரும்பாலான பெண்களுக்கு சரியாகத் தெரிவதில்லை.. வாரிசு உரிமைச் சட்டம், வரதட்சணைக் கொடுமைத் தடுப்புச் சட்டம், குடும்ப வன்கொடுமை தடுப்புச்சட்டம்னு ஒரு சில சட்டங்கள் பத்தி ஓரளவு விலாவாரியா தெரிஞ்சிருக்கும். ஆனா பெண் குழந்தை கருவில் இருப்பதிலிருந்தே அரசாங்கம் கொடுக்கும் பலவிதமான சலுகைகளையும் பெண்களுக்கான சட்டங்களையும் பற்றித் தெரிந்து கொள்வோம்.
Related Posts Plugin for WordPress, Blogger...