சிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய எங்கள் ப்ளாகின் ஸ்ரீராமின் விமர்சனப் பார்வை.
இந்தத் தொகுப்பில் 15 சிறுகதைகள் உள்ளன. தினமணி கதிர், திண்ணை, தினமலர் பெண்கள் மலர், மேரிலேன்ட் எக்கோஸ், தினமலர் வாரமலர், பெண்கள் ராஜ்ஜியம், புதிய தரிசனம்,தென்றல் (அமெரிக்க தமிழ் மாத இதழ்) ஆகிய பத்திரிகைகளில் வெளியானவை. இதில் புத்தகத் தலைப்பாகியுள்ள சிவப்பு பட்டுக் கயிறு கதை மனதை அசைத்து விட்டது. ஏதோ தத்து கொடுப்பார்கள் எங்கள் இல்லங்களிலும். ஆனால் இந்த மாதிரி ஒரு உறவறுத்து இன்னொரு உறவுடன் சேரும் வேதனை படிக்கும்போது மனதில் பதிந்தது.
மணமான புதிதில் பெண்கள் புகுந்த வீட்டில் சுவாசிப்பது பற்றி தேனம்மை எழுதி இருப்பதை ரசிக்க முடிந்தது.
"தாய்
வீடு சொந்த சுவாசம் போலவும், மாமியார் வீடு கொஞ்ச காலத்துக்கு ஆக்சிஜன்
சிலிண்டரில் சுவாசிப்பது போலவும் இருக்கிறது. வீட்டின் கதவுகள், ரூம்கள்,
அலமாரிகள், பொருட்களுடனான பரிச்சயம் அதிகமானபின் அதுவும் இன்னொரு சுவாசமாய்
ஓடிக்கொண்டு இருக்கிறது"
சூலம் கதை ஆரம்பக்
காட்சிகளை ஒரு திரைப்படக் காட்சி போல வர்ணிக்கிறார். ஒரு டெலூசன் போல கதை
முடிவு. தற்கொலையா, தண்டனையா? நாயகிக்கு விடுதலை! அதையும்
மனத்தளவில்தான் வைத்துக் கொள்ளவேண்டும்!
கருணைக்கொலை
என்பது ஆக்சிமோரானோ! அதனால்தான் கருணையாய் ஒரு வாழ்வு என்று தலைப்பாக்கி
ஒரு உண்மை சம்பவத்தில், இருநிலை விவாதமாய், கற்பனை உரையாடலைப்
புகுத்தியிருக்கிறார்.
தொடர்ந்து இங்கே படிக்கலாம். !

இந்தத் தொகுப்பில் 15 சிறுகதைகள் உள்ளன. தினமணி கதிர், திண்ணை, தினமலர் பெண்கள் மலர், மேரிலேன்ட் எக்கோஸ், தினமலர் வாரமலர், பெண்கள் ராஜ்ஜியம், புதிய தரிசனம்,தென்றல் (அமெரிக்க தமிழ் மாத இதழ்) ஆகிய பத்திரிகைகளில் வெளியானவை. இதில் புத்தகத் தலைப்பாகியுள்ள சிவப்பு பட்டுக் கயிறு கதை மனதை அசைத்து விட்டது. ஏதோ தத்து கொடுப்பார்கள் எங்கள் இல்லங்களிலும். ஆனால் இந்த மாதிரி ஒரு உறவறுத்து இன்னொரு உறவுடன் சேரும் வேதனை படிக்கும்போது மனதில் பதிந்தது.
"பின்னால்
இங்கு வரப்போக முடியும் என்றாலும் அன்றைய கணக்குப்படி அந்த வீட்டோடான
வாழ்வு முடிந்து விட்டது. இனி அது வேறு வீட்டுப்பிள்ளை."
மணமான புதிதில் பெண்கள் புகுந்த வீட்டில் சுவாசிப்பது பற்றி தேனம்மை எழுதி இருப்பதை ரசிக்க முடிந்தது.
தொடர்ந்து இங்கே படிக்கலாம். !
சிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்,
டிஸ்கி:- தீபாவளிப் பரிசாக இதை அக்டோபர் 27 அன்றே ஸ்ரீராம் இதை எங்கள் ப்ளாகில் போஸ்ட் செய்திருக்கிறார். ஆனால் நான் நவம்பர் 25 தான் பார்த்தேன்.அவ்ளோ சுறுசுறுப்பு. அதுக்கு நடுவுல அதே எங்கள் ப்ளாகில் ஓரிரண்டு போஸ்டுகளுக்குக் கமெண்டியபோதும், சேணமிட்ட குதிரை மாதிரி இதைப் பார்க்காம வந்திருக்கேன்.
வலையுலக நண்பர்களுக்கு நான் மிகவும் கொடுத்து வைத்திருக்கிறேன். ராமலெக்ஷ்மி, விஜிகே சார், ஸ்ரீராம், இன்னும் வெங்கட் சகோ, குமார் சகோ, பாலா சார், ஜெயக்குமார் சகோ, ஜம்பு சார், விசு சார், உமேஷ், கோமதி மேம், மனோமேம், கீதா, கீத்ஸ் & துளசி சகோ, டிடி சகோ, யாழ்பாவண்ணன் சகோ, கலையரசி, நெல்லைத்தமிழன், கீதா மேம், பகவான் ஜி, கில்லர் ஜி, மோகன் ஜி, துளசி, தென்றல், அமுதா, பா கணேஷ் சகோ, ஆதி வெங்கட், ரமணி சார்,சுரேகா, ரத்னவேல் ஐயா,( விட்டுப் போனவர்கள் மன்னிக்க. இங்கே இல்லையே தவிர என் இதயத்தில் இருக்கிறீர்கள். :) ஆகியோருக்கு என் நன்றியும் அன்பும் வாழ்த்துகளும்.
ஒவ்வொரு கதைக்கும் சிறுகுறிப்பா சுருக் நறுக் விமர்சனம் அருமை ஸ்ரீராம் . :)
தீபாவளிப் பரிசாக இவ்விமர்சனத்தைப் போட்டிருக்கீங்க. அதன் பின் இரு முறை வந்திருக்கேன். ஆனா இதைப் பார்க்கலை ஸ்ரீராம். வீட்டில் அநேக வேலைகள், பயணம், ஏதேதோ எழுத்து படிப்பு. இதைப் பார்க்காததுக்கு மன்னிக்க. :) மிக அருமையான விமர்சனத்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஸ்ரீராம். !

நன்றி!
பதிலளிநீக்கு//தீபாவளிப் பரிசாக இதை அக்டோபர் 27 அன்றே ஸ்ரீராம் இதை எங்கள் ப்ளாகில் போஸ்ட் செய்திருக்கிறார். ஆனால் நான் நவம்பர் 25 தான் பார்த்தேன். அவ்ளோ சுறுசுறுப்பு.//
பதிலளிநீக்குபிரபலங்களுக்கு இதெல்லாம் மிகவும் சகஜமே.
மேலும் மிகப்பிரபலமான தாங்கள் எங்களையெல்லாம் ஒரேயடியாகக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாமல், ஜஸ்ட் ஒரு மாதத்திற்குள்ளாகவே வந்து கவனித்துள்ளீர்கள். அதுவே மிகப்பெரிய விஷயமாக்கும். :)
கவனித்ததோடு மட்டுமல்லாமல் அடுத்த ஒரே வாரத்தில் இப்போது தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளீர்கள்.
‘ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ அவர்களும் மேலே நன்றி கூறி சிறப்பித்து விட்டார்.
இருவருக்கும் என் வாழ்த்துகள்.
அவரது தளத்திலும் படித்தேன். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குநல்ல விமர்சனம் அக்கா... ஸ்ரீராம் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஎங்களை எல்லாம் சொன்ன தங்களுக்கும் நன்றி.
மகிழ்ச்சி... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஅங்கேயும் படித்தேன்! வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
பதிலளிநீக்குநன்றி விஜிகே சார்.செம கலாய். :)
நன்றி வெங்கட் சகோ
நன்றி குமார் சகோ
நன்றி ஜெயக்குமார் சகோ
நன்றி டிடி சகோ
நன்றி மாதவி.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!