தலைச்சீலையில் முடிவதும், தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடி கைவேலைப்பாடு.
*861.திருமண நடைமுறைகளில் தலைச்சீலையில் முடிவது என்று ஒரு சடங்கு உண்டு. மணவறையில் மாப்பிள்ளையும் பெண்ணும் அமர்ந்திருக்க அவர்கள்பின் நின்று மாப்பிள்ளை, மணமகளின் மாமன்மார்கள் , திருமணம் செய்துவைக்கும் வேதியர் சொன்னபடி வெற்றிலை பாக்கை இருவர் தலையிலும் மாற்றி மாற்றி வைத்து எடுப்பார்கள். ( இதை என் உறவினர் ஒருவர் சொன்னார் ) இதில் திருமணம் முடிந்ததும் செல்லும் வழிச்செலவுக்கான பணத்தை மாமன் கொடுக்க மணமகள் எடுத்துத் தலைச்சீலையின் முந்தியில் முடிந்து வைப்பதுதான் தலைச்சீலையில் முடிவது.
*862.திருப்பூட்டி முடிந்ததும் மாமியார் சடங்கு, நாத்தனார் சடங்கு முடிந்து அந்த வெற்றிலை பாக்கை இடுப்பில் செருகி வைத்துக் கொள்ளச்சொல்வார்கள். அது என்று நினைத்து எழுதி இருக்கிறேன் முன்னொரு இடுகையில்.
திருப்பூட்டிய பின்பு மணவறையை வலம் வரும்போது மாப்பிள்ளையின் அங்கவஸ்த்ர நுனி & பெண்ணின் திருமணப் பட்டின் முந்தி இரண்டையும் முடிச்சிட்டு இருப்பதையும் தலைச்சீலையில் முடிவது என்று எண்ணி இருக்கிறேன். பொதுவாக இங்கத்திய திருமணங்களில் கிடையாது. அது வடநாட்டார் பழக்கம்.
நிற்க.
தலைச்சீலையில் முடிவதற்கும் இந்த தலைப்பு முடிவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சிண்டு முடிவதற்கு கூட :)
*863.பட்டுப்புடவை வாங்கியதும் கடைக்காரர்கள் கசவு பிரித்து முடிந்து கொடுப்பார்கள் அது குஞ்சலமாகத் தொங்கும்.
நாம் *864 முந்திமுடியச்சொல்லிக் கொடுத்தால் இதற்கென காரைக்குடியில் இருக்கும் கைவினைக் கலைஞர்கள் ( பெண்கள்) புடவைக்கு முதலில் ஓரம் அடிப்பார்கள். அதன்பின் இந்தக் குஞ்சலத்தைப் பிரித்து நன்கு நீவி சிறிய சீப்பால் சீவுவார்கள். *865இரு வரிசையில் இருந்து ஏழு வரிசை வரைமுடிந்து கொடுப்பார்கள். இந்த ஏழு வரிசை முடிந்து கொடுக்க ஒரு வரிசைக்கு 50 ரூபாய் வீதம் மொத்தம் 350 ரூபாய் ஆகும். ஓரம் அடிக்க இருபது ரூபாய் தனி.
ஆனால் ஏழுவரிசை முடிய நூல் பத்தாவிட்டால் முந்தியில் நிறைய பிரித்து விட்டு முடிவார்கள். இவ்வாறு முடிந்தால் *866.சித்திரமாய் அழகாய் இருக்கும்.
இவ்வாறு இதை முடியாவிட்டால் ஓரம் எல்லாம் பிரிந்து விடும் என்பதெல்லாம் இல்லை. இது காரைக்குடிப் பக்கட்டு மட்டுமே இருக்கக்கூடிய ஒரு கைவேலைப்பாடு. ஒவ்வொரு ஊரிலும் ஒரு எம்பிராய்டரி, பின்னல் வேலை இருப்பது போல் காரைக்குடிக்கே உரித்தான கைவேலை இது.
முன்பெல்லாம் யாரிடமாவது கொடுத்துத்தான் முடிவது வழக்கம். இதை நானே பின்ன கற்றுக் கொண்டேன். இங்கே இருக்கும் புடவைகள் ( 20 பட்டுப்புடவைகள் இருக்கும் ) நானே முடிந்ததுதான். ( தற்பெருமை. )
ஆனால் சிலவற்றை இரு வரிசைகளும். அதிகபட்சம் நான்கு வரிசைகளும் முடிந்துள்ளேன். ஒவ்வொரு குஞ்சலமாகப் பிரித்து *867முக்கோணமாகவும். எல்லா குஞ்சலத்தையும் பிரித்து வரிசையான *868செயின் முடிச்சாகவும் முடிந்துள்ளேன்.
கல்யாணம் ஆனதிலிருந்து ஊசி நூல் பின்னுறது, பிரிக்கிறது , முடியிறது.. ஸ்வெட்டர், க்ரோஷா, எம்பிராய்டரி, ப்ளவுஸ் ஹெம்மிங் என்று டிவி பார்க்கும்போதெல்லாம் இதுதான் என் வேலைகள். ரங்க்ஸ் கொஞ்சம் தள்ளியே அமர்ந்துகொள்வார். ஊசி நூலால் குத்தி விடக்கூடாது அல்லவா :) :)
3,2,1, தனிப்பின்னல் & செயின் பின்னல் முடிச்சு
4, 3, 2 1 செயின் பின்னல் முடிச்சு
4, 3, 2 1 செயின் பின்னல் முடிச்சு
2, 1 & 3, 2, 1 சிம்பிள் முடிச்சு
2, 1 & 3, 2, 1 சிம்பிள் முடிச்சு
2, 1 & 3, 2, 1 சிம்பிள் முடிச்சு
4, 3, 2, 1 செயின் முடிச்சு & 4, 3, 2, 1 தனி கோபுர முடிச்சு
ரொம்பப் பொறுமை தேவைப்படும் வேலைப்பாடு இது. ஒரு புடவைக்குத் *869தலவு முடிய மூன்று நாட்களில் இருந்து ஒருவாரம் வரை ஆகும்.
சரியாக முடியவராவிட்டால் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்துத் தொட்டுக்
கொண்டு பிரித்து முடிவார்கள். பிசிறு இல்லாமலும் நீட்டாகவும் வரும்.
நம்மைப் போன்ற கற்றுக்குட்டிகளெல்லாம் முடிந்ததும் கத்திரிக்கோலால்
*870முடிச்சில் நுனியை சீராக வெட்டி விட்டு பிசிறுகளையும் கட் செய்துவிட்டால்
சூப்பராக இருக்கும். :)
டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.
*861.திருமண நடைமுறைகளில் தலைச்சீலையில் முடிவது என்று ஒரு சடங்கு உண்டு. மணவறையில் மாப்பிள்ளையும் பெண்ணும் அமர்ந்திருக்க அவர்கள்பின் நின்று மாப்பிள்ளை, மணமகளின் மாமன்மார்கள் , திருமணம் செய்துவைக்கும் வேதியர் சொன்னபடி வெற்றிலை பாக்கை இருவர் தலையிலும் மாற்றி மாற்றி வைத்து எடுப்பார்கள். ( இதை என் உறவினர் ஒருவர் சொன்னார் ) இதில் திருமணம் முடிந்ததும் செல்லும் வழிச்செலவுக்கான பணத்தை மாமன் கொடுக்க மணமகள் எடுத்துத் தலைச்சீலையின் முந்தியில் முடிந்து வைப்பதுதான் தலைச்சீலையில் முடிவது.
*862.திருப்பூட்டி முடிந்ததும் மாமியார் சடங்கு, நாத்தனார் சடங்கு முடிந்து அந்த வெற்றிலை பாக்கை இடுப்பில் செருகி வைத்துக் கொள்ளச்சொல்வார்கள். அது என்று நினைத்து எழுதி இருக்கிறேன் முன்னொரு இடுகையில்.
திருப்பூட்டிய பின்பு மணவறையை வலம் வரும்போது மாப்பிள்ளையின் அங்கவஸ்த்ர நுனி & பெண்ணின் திருமணப் பட்டின் முந்தி இரண்டையும் முடிச்சிட்டு இருப்பதையும் தலைச்சீலையில் முடிவது என்று எண்ணி இருக்கிறேன். பொதுவாக இங்கத்திய திருமணங்களில் கிடையாது. அது வடநாட்டார் பழக்கம்.
நிற்க.
தலைச்சீலையில் முடிவதற்கும் இந்த தலைப்பு முடிவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சிண்டு முடிவதற்கு கூட :)
*863.பட்டுப்புடவை வாங்கியதும் கடைக்காரர்கள் கசவு பிரித்து முடிந்து கொடுப்பார்கள் அது குஞ்சலமாகத் தொங்கும்.
நாம் *864 முந்திமுடியச்சொல்லிக் கொடுத்தால் இதற்கென காரைக்குடியில் இருக்கும் கைவினைக் கலைஞர்கள் ( பெண்கள்) புடவைக்கு முதலில் ஓரம் அடிப்பார்கள். அதன்பின் இந்தக் குஞ்சலத்தைப் பிரித்து நன்கு நீவி சிறிய சீப்பால் சீவுவார்கள். *865இரு வரிசையில் இருந்து ஏழு வரிசை வரைமுடிந்து கொடுப்பார்கள். இந்த ஏழு வரிசை முடிந்து கொடுக்க ஒரு வரிசைக்கு 50 ரூபாய் வீதம் மொத்தம் 350 ரூபாய் ஆகும். ஓரம் அடிக்க இருபது ரூபாய் தனி.
ஆனால் ஏழுவரிசை முடிய நூல் பத்தாவிட்டால் முந்தியில் நிறைய பிரித்து விட்டு முடிவார்கள். இவ்வாறு முடிந்தால் *866.சித்திரமாய் அழகாய் இருக்கும்.
இவ்வாறு இதை முடியாவிட்டால் ஓரம் எல்லாம் பிரிந்து விடும் என்பதெல்லாம் இல்லை. இது காரைக்குடிப் பக்கட்டு மட்டுமே இருக்கக்கூடிய ஒரு கைவேலைப்பாடு. ஒவ்வொரு ஊரிலும் ஒரு எம்பிராய்டரி, பின்னல் வேலை இருப்பது போல் காரைக்குடிக்கே உரித்தான கைவேலை இது.
முன்பெல்லாம் யாரிடமாவது கொடுத்துத்தான் முடிவது வழக்கம். இதை நானே பின்ன கற்றுக் கொண்டேன். இங்கே இருக்கும் புடவைகள் ( 20 பட்டுப்புடவைகள் இருக்கும் ) நானே முடிந்ததுதான். ( தற்பெருமை. )
ஆனால் சிலவற்றை இரு வரிசைகளும். அதிகபட்சம் நான்கு வரிசைகளும் முடிந்துள்ளேன். ஒவ்வொரு குஞ்சலமாகப் பிரித்து *867முக்கோணமாகவும். எல்லா குஞ்சலத்தையும் பிரித்து வரிசையான *868செயின் முடிச்சாகவும் முடிந்துள்ளேன்.
கல்யாணம் ஆனதிலிருந்து ஊசி நூல் பின்னுறது, பிரிக்கிறது , முடியிறது.. ஸ்வெட்டர், க்ரோஷா, எம்பிராய்டரி, ப்ளவுஸ் ஹெம்மிங் என்று டிவி பார்க்கும்போதெல்லாம் இதுதான் என் வேலைகள். ரங்க்ஸ் கொஞ்சம் தள்ளியே அமர்ந்துகொள்வார். ஊசி நூலால் குத்தி விடக்கூடாது அல்லவா :) :)
3,2,1, தனிப்பின்னல் & செயின் பின்னல் முடிச்சு
4, 3, 2 1 செயின் பின்னல் முடிச்சு
4, 3, 2 1 செயின் பின்னல் முடிச்சு
2, 1 & 3, 2, 1 சிம்பிள் முடிச்சு
2, 1 & 3, 2, 1 சிம்பிள் முடிச்சு
2, 1 & 3, 2, 1 சிம்பிள் முடிச்சு
4, 3, 2, 1 செயின் முடிச்சு & 4, 3, 2, 1 தனி கோபுர முடிச்சு
ரொம்பப் பொறுமை தேவைப்படும் வேலைப்பாடு இது. ஒரு புடவைக்குத் *869தலவு முடிய மூன்று நாட்களில் இருந்து ஒருவாரம் வரை ஆகும்.
ஒரு வேளை முந்தானை முடிச்சும் இதுவு ம் ஒன்றோ
பதிலளிநீக்குillai Bala sir :)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!