புராதன வீடுகளும் புதுப்பித்தலும்.
*841இந்தப் புராதன வீடுகள் சுமார் 500 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்டவைதான். பெரும்பாலானவை 200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும். இவற்றைக் கட்டியவர் கொள்ளுப்பாட்டையா. தன் ஒரே வருமானத்தில் அவர்கள் கட்டிய இவ்வீடு இன்று அவர்களது பிள்ளைகுட்டி பேரன்பேத்திகளால் நிரம்பி *842.பங்கு வீடாகி விட்டது. ஆனால் ஒருவரே ரிப்பேர் பார்க்க இன்றைய வருமானத்தில் இயலுவதில்லை. எனவே அனைவரும் பங்கேற்று பழுது பார்க்கின்றார்கள். ஓரளவு பழுது உள்ள வீடுகள் தப்பிப் பிழைக்கின்றன. ஆனால் நிறைய*843 அளவில் சேதமான வீடுகளை *844மேங்கோப்பைப் பிரித்துவிட்டு இடத்தைப் பிரித்துக்கொண்டு பிளாட் கட்டி விடுகிறார்கள்.
*845மீனாக்ஷி சொக்கர் திருமணம். விஷ்ணு தாரை வார்க்கிறார்.
கீழே பிரம்மா அமர்ந்திருக்கிறார். நடுவில் ஹோமத்தீ. மிக அற்புதமான முன்கோப்பு அமைந்த இல்லத்தில் என் சகோதரனுக்கும் பங்கிருக்கிறது.
*846மேலே உச்சியில் மஹாலக்ஷ்மி அருள்பாலிக்க இருபுறமும் கவரிப் பெண்கள்.
*846அதன் கீழ் பக்கவாட்டில் இருபுறமும் காவலர்கள்.
*847இடி விழாமலிருக்க உச்சியில் வைத்த வரகு சாமை பொதித்த கலசங்கள் முறிந்துள்ளன.
*848வேதியர் வேள்வியில் நெய் வார்க்கிறார். இரு பக்கமும் தும்புருவும் நாரதரும் இசைக்கிறார்கள். அவர்கள் இருபுறமும் இரு குழந்தைகள் அமர்ந்திருக்கிறார்கள்.
சாதாரண பிளாட்டுகளை உள்ளும் புறமும் பெயிண்ட் செய்யவே லட்சக்கணக்கில் செலவாகிறது. இம்மாதிரிப் *849பெரிய கோட்டை போன்ற இல்லங்களுக்கும் அதைப் போன்று பன்மடங்கு செலவாகிறது. *850கரையான் மருந்தடித்தல், விட்டுப் போன இடங்களை பூசுதல், ( சுவர் காரைக் கலவையால் ஆனது. *851முட்டை வெண்கருவும் சுண்ணாம்பும் அம்மியில் அரைத்துக் குழைத்துப் பூசியதால் அவை கெட்டியாக நிற்கின்றன.) ஓடுகளை மாற்றுதல். அதன் பின் மரத்துக்கு வார்னிஷும், இயற்கை வண்ண ஓவியங்களுக்கு பெயிண்டும், உள்ளே வேறுவித வண்ணங்களும், வெளியே சுண்ணாம்பும் அடிக்கிறார்கள்.
*852கீழே சிம்மங்கள். இப்பகுதி வீடுகளில் அநேகமாக *853நாகங்கள் கொண்ட தூண்களும், சிம்மங்கள் கொண்ட முன்கோப்புகளும் அதிகம் காணப்படுகின்றன.
*854வாசலில் காக்கும் தெய்வம் பிள்ளையார்பட்டிக் கற்பகவிநாயகர்
நிறைய பொருட் செலவு கொண்ட வேலை இது. இம்மாதிரி இல்லங்கள் காரைக்குடியை ஒட்டிய கிராம & நகர்ப்புறங்களில் இருப்பதால். வெளிநாட்டிலோ வெளியூரிலோ செட்டிலான இளம் வயதினர் வந்து பார்த்துப் பராமரிக்காமலே இவ்வில்லங்கள் பாழடைந்து விடுகின்றன.
*855 பேர்ந்த காரைகளை சிமிண்ட் கலவை கொண்டு அடைக்கிறார்கள்.
*856 மழையால் துருப்பிடித்த ஜன்னல் கம்பிகளை சீர் செய்து உப்புத்தாளால் தேய்க்கிறார்.
*857 தூண்கள் வார்னிஷ் அடிக்க தயாராய் உப்புத் தாளில் தேய்ந்து நிற்கின்றன.
*858சில மாதம் முன்பு மராமத்து செய்யப்பட்டு பெயிண்ட் அடிக்கப்பட்ட பாட்டியாயா வீடு
பராமரிப்பிற்காய் காத்திருக்கும் சில வீடுகள்.
*859நன்கு பராமரிக்கப்பட்டுவரும் ஒரு வீடு திருமணக் கொண்டாட்டத்தில் ஜொலிக்கிறது.
தூண்களாலும் உறவினர்களாலும் நிரம்பி இருக்கும் ஹால். *860 சுற்றிலும் உள் மாடி வளைவு.
திருமணம் போன்ற அனுவல்கள் தவிர வருடத்தில் ஓரிரு முறையாவது வீடுகளுக்கு வந்து படைப்பு, பூசை, குலதெய்வம் கும்பிடுதல், முன்னோர்களை வணங்குதல் ஆகியவற்றைச் செய்தால் வீடும் விளங்கும். வீட்டுக்கும் ஆன்மா உண்டுதானே. அது தான் உருவாக்கிய குழந்தைகள் தன்னை நாடி வருவதை எதிர்பார்த்துக் காத்திருக்காதா என்ன. ?
டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

முன்னோர்களின் ஆசிர்வாதத்தை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லுபவர்கள் வாழ்க! வீடுகளின் பிரம்மாண்டமும் அழகும் அசர வைக்கின்றன!
பதிலளிநீக்குவீடுகளின் பிரம்மாண்டமும் கலை நயமும் வியக்க வைக்கின்றன
பதிலளிநீக்குஇதுபோன்ற வீடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் சகோதரியாரே
வீடுகள் ரொம்ப அழகாக இருக்கின்றன. கலைநயத்துடன். வீடு என்பது நான்கு சுவர்களால் ஆனது...ஆனால் அதற்கு உயிர் கொடுப்பது அதில் வாழும் குடும்பங்களின் அன்பு அந்தச் சுவர்களை இல்லமாக மாற்றுகிறது இல்லையா....ஹவுஸ் என்பதற்கும் ஹோம் என்பதற்கும் உள்ள வித்தியாசம் எனக் கொள்ளலாமோ...அவை பாதுக்காட்டப்பட வேண்டும். எல்லா படங்களும் அழ்காக இருக்கின்றன...சகோ/தேனு
பதிலளிநீக்குஇதுபோன்ற வீடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் . தமிழகத்தின் பெரிய பணக்காரர்களில் சிலர் செட்டியார்கள் தானே. அவர்கள் நினைத்தால் அடுத்து வரும் பல தலைமுறைக்கு இதைக் காப்பாற்றிக் கொடுக்க இயலுமே ?
பதிலளிநீக்குநவீன வீடுகளைப் புதுப்பிப்பதே சிரமம் புராதன வீடுகள் என்றால் கேட்கவே வேண்டாம்
பதிலளிநீக்குThanks Madhavi :) <3
பதிலளிநீக்குAam Jayakumar sago.
unmaithan Geeths. nandri
ellaar veedukalukkum avargal eppadi selavu seyya mudiyum. avaravar veetai avaravar selavil okkittuk kolla vendiyathuthan Baskar sago :)
aam Bala sir.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!