எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 6 அக்டோபர், 2017

பார்க் கல்லூரி மாணவிகளின் நடனம்.

பார்க் கல்லூரியின் மகளிர் மன்றத்தின் ஆரம்பவிழாக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தேன்.

அதன் பின்னர் அங்கே சாஃப்ட் ஸ்கில் ட்ரெயினர் திரு வீரராகவன்  ஒரு கவிதை  வாசித்தார்.




அதன் பின் பெண்குழந்தைகளின் நடனம் துவங்கியது. மிக அருமையாக ஆடினார்கள். அனால் அனைத்துமே அன்றைக்கு ஹிட்டாக இருந்த சினிமாப் பாடல்கள்தான்.

கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன்  போன்ற ஓரிரு பாடல்கள் தெரிந்தவையாக இருந்தன !.


தான் இருந்தால் மாணவிகள் தயக்கப்படுவார்கள் இது அவர்களுக்கான நாள் ஆகையால் முழுமையாக அதை என்ஜாய் செய்யவேண்டும் என்று சொல்லி கல்லூரி முதல்வர் திரு திருமாறன் ஜெயராமன் அவர்கள் எங்களை அமர்ந்து களிக்கச் சொல்லிவிட்டு விழா அரங்கிலிருந்து அலுவலக அறைக்குச் சென்றுவிட்டார்.


கொண்டாட்டமும் கைதட்டலும் தூள் பறந்தது.


காற்றில் கொடிகளை போல அசைந்தாடினார்கள் அவர்கள் ! நாங்கள்  நடனங்களைக் கண்டு களித்தோம் .


 நிகழ்வுகளையும் எங்களையும் புகைப்படம் எடுத்த மாணவிக்கு நன்றி :)

அப்போது வீரராகவன் சார் சொன்னார் இந்தப் பசங்க க்ளாசில் ரொம்ப அமைதியா இருப்பாங்க பேசக்கூட மாட்டாங்க. பயந்துக்குவாங்க.  ஆனா இங்கே எவ்வளவு ஃப்ரியா ஆடுறாங்க. எவ்ளோ திறமை இருக்கு. என்று அசந்தார்.!
2013 இல் எடுத்த புகைப்படங்கள். இப்போ இவுங்களுக்கெல்லாம் திருமணமாகி இருக்கலாம். எங்காவது பணியிலும் அமர்ந்திருப்பார்கள். ஆனால் இந்த நடனங்களில் காணப்படும் அந்த இளமைப் பருவத்துக்கே உரிய கொண்டாட்டத்தை இப்ப மிஸ் செய்திருக்கலாம். ஆனாலும் கடமைகள் முக்கியம் அல்லவா. அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன். !

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...