உறவினர் ஒருவர் வீட்டில் கதவின் கைப்பிடியை சுற்றி வித்யாசமாக அமைந்திருந்த மரவேலைப்பாடு. பூக்கள் இலைகள் வளைவுகளை சிற்பம்போல் எப்படி இப்படி நுண்ணியமாக செதுக்க முடிந்தது எனத் தெரியவில்லை. அதன் பக்கமே சாவிக்கான துவாரமும் செதுக்கப்பட்டிருக்கிறது !
வார்ப்பிரும்பில் செய்யப்பட்டு சில்வர் வண்ணம் அடிக்கப்பட்டிருக்கும் கைப்பிடியின் கொண்டியிலும் எத்தனை நெளிவு சுளிவுகள்.
முழுக்கதவு வேலைப்பாடும் உங்கள் பார்வைக்கு.
இவை அந்தக் கதவின் இருமருங்கிலும் உள்ள மரத்துண்டில் செதுக்கப்பட்ட வட்டங்கள். இது தாருகாவன முனிபத்னியர் உருவமா இல்லை வேறு ஏதும் தேவியர் உருவமா தெரியவில்லை. ஆடை நெகிழும் நிலை அவ்வாறு எண்ண வைக்கிறது. மேலும் பூதகணங்கள் & முனிவர்கள் சுற்றிலும் நின்று வணங்குவதாலும் அவ்வாறிருக்கலாம் என எண்ணினேன். சுற்றிலும் பர்ணசாலை இருக்கும் காட்டை நினைவுறுத்த பசுமை இலைகளும் மரங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
எல்லா வீட்டிலும் காணப்படும் குழலூதும் கிருஷ்ணன் . &
காளிங்க நர்த்தனன். பக்கத்தில் கதவின் முன்புற சிற்ப வேலைப்பாடுகள்.
ஆனை பிளிறுது. :)
கதவின் இன்னோர் புறமும் :)
அதிகம் புழக்கமில்லாத வீட்டில் வௌவால் அடையாமல் இருக்க மேங்கோப்பு முழுக்க இவ்வகை தழை/இலை/கீத்து கொண்டு மூடி இருக்கிறார்கள்.
இரு புற அறைகளின் மேலும் கொம்புடன் பாடம் செய்யப்பட்ட மான் தலை. கெட்டுப் போகாமலிருக்க ஏதும் பூசி இருப்பார்கள் என நினைக்கிறேன். இல்லாவிட்டால் மரக்கலரிலேயே இருக்கும்.
அண்ணலும் நோக்க அவளும் நோக்க அன்னபட்சியில் பயணம். இது ஐவரியா இல்லை ப்ளாஸ்டிக்கான்னு தெரியல. நல்லா இருந்ததால எடுத்தேன் :)
யானைச்சிற்பம் நிற்கும் ஸ்டாண்டின் அழகு கண்கவர் வேலைப்பாட்டால் நிறைந்திருந்தது. தாமரை, தாழை மற்றும் ஒவிய டிசைன்கள் அலங்கரிக்க இவற்றின் வேலைப்பாட்டின் பெயர் தெரியவில்லை. தற்காலத்தில் தச்சு வேலை தெரிந்தவர்கள் தங்கள் முன்னவர்களிடம் கேட்டு ஒவ்வொன்றுக்கும் புகைப்படத்தோடு பெயரெழுதி சேமித்து வைக்க வேண்டும். ஆவணப்படுத்தவேண்டும். ( நேசா என்றொரு பெண்மணி பட்டு நெசவு & நெசவு பற்றி இப்படி ஒரு புத்தகம் எழுதி சேமித்திருக்கிறார். மாபெரும் பொக்கிஷம் அது )
டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!