எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கைவேலைப்பாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கைவேலைப்பாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 ஜூன், 2018

80 வயதில் உலக கின்னஸ் சாதனை படைத்த கனகலெக்ஷ்மி ஆச்சி.

கைவினை வேலைப்பாடுகளில் கின்னஸ் சாதனை படைத்திருக்கும் கனகலெக்ஷ்மி ஆச்சிக்கு 83 வயது என்றால் நம்பமுடிகிறதா. திரைத்துறையிலும் அரசியலிலும் மிகப் ப்ரபலமானவர்கள் இவரது இரு சகோதரர்கள். அவர்களைப் பற்றிக் கட்டுரையின் கடைசியில் குறிப்பிட்டிருக்கிறேன். 

இவர் தன் கைவேலைப்பாடுகளில் தேர்ந்தெடுத்திருக்கும் நிறங்களின் கலவை என்னை அசத்துகிறது. அதேபோல் பர்ஃபெக்ட் வொர்க்கும் கூட. 
க்ரோஷா வேலைப்பாடு, தஞ்சாவூர் பெயிண்டிங், பென்சில் ட்ராயிங், எம்பிராய்டரி , பூக்கள் தயாரிப்பு, ஆயில் மற்றும் கான்வாஸ் பெயிண்டிங் என்று அனைத்துத் துறையிலும் தனது கைவினைப் பொருட்களைச் செய்துள்ளார். 

டிவியில் தினம் மூன்று – ஏழெட்டு மணி நேரம் தகாத உறவுகளையும் உறவு உணர்வுச் சண்டைகளையும் வன்முறை எண்ணங்களையும் கிளப்பும் சீரியல்களை இன்றைய பெரியோர்கள் பார்த்து உறவுகளிடம் குதர்க்கமாக நடந்து கொண்டிருக்க இவரோ இந்த வயதிலும் தன்னம்பிக்கையோடும் மலர்ச்சியோடும் தான் கைக்கொண்ட கைவினை வேலைப்பாடுகளில் மனதைச் செலுத்தி விதம் விதமான பொருட்களைப் படைத்துக் கொண்டிருக்கிறார். 

இன்றைய பெரியவர்களில் விதிவிலக்காக இருக்கும் இவருக்கு முதலில் ஒரு சிரம் தாழ்ந்த வணக்கம். இனி இவர்பற்றிய விவரங்கள். 

திங்கள், 9 அக்டோபர், 2017

தலைச்சீலையில் முடிவதும், தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடி கைவேலைப்பாடு.

தலைச்சீலையில் முடிவதும்,  தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடி கைவேலைப்பாடு.

*861.திருமண நடைமுறைகளில் தலைச்சீலையில் முடிவது என்று ஒரு சடங்கு உண்டு. மணவறையில் மாப்பிள்ளையும் பெண்ணும் அமர்ந்திருக்க அவர்கள்பின் நின்று மாப்பிள்ளை, மணமகளின் மாமன்மார்கள் , திருமணம் செய்துவைக்கும் வேதியர் சொன்னபடி வெற்றிலை பாக்கை இருவர் தலையிலும் மாற்றி மாற்றி வைத்து எடுப்பார்கள். ( இதை என் உறவினர் ஒருவர் சொன்னார் ) இதில் திருமணம் முடிந்ததும் செல்லும் வழிச்செலவுக்கான பணத்தை மாமன் கொடுக்க மணமகள் எடுத்துத் தலைச்சீலையின் முந்தியில் முடிந்து வைப்பதுதான் தலைச்சீலையில் முடிவது.

*862.திருப்பூட்டி முடிந்ததும் மாமியார் சடங்கு, நாத்தனார் சடங்கு முடிந்து அந்த வெற்றிலை பாக்கை இடுப்பில் செருகி வைத்துக் கொள்ளச்சொல்வார்கள். அது என்று நினைத்து எழுதி இருக்கிறேன் முன்னொரு இடுகையில்.

திருப்பூட்டிய  பின்பு மணவறையை வலம் வரும்போது மாப்பிள்ளையின் அங்கவஸ்த்ர நுனி & பெண்ணின்  திருமணப் பட்டின் முந்தி  இரண்டையும் முடிச்சிட்டு இருப்பதையும் தலைச்சீலையில் முடிவது என்று எண்ணி இருக்கிறேன்.  பொதுவாக இங்கத்திய திருமணங்களில்  கிடையாது. அது வடநாட்டார் பழக்கம்.

நிற்க.

தலைச்சீலையில் முடிவதற்கும் இந்த தலைப்பு முடிவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சிண்டு முடிவதற்கு கூட :)

*863.பட்டுப்புடவை வாங்கியதும் கடைக்காரர்கள் கசவு பிரித்து முடிந்து கொடுப்பார்கள் அது குஞ்சலமாகத்  தொங்கும்.

நாம் *864 முந்திமுடியச்சொல்லிக் கொடுத்தால் இதற்கென காரைக்குடியில் இருக்கும் கைவினைக் கலைஞர்கள் ( பெண்கள்)  புடவைக்கு முதலில் ஓரம்  அடிப்பார்கள். அதன்பின் இந்தக் குஞ்சலத்தைப் பிரித்து நன்கு நீவி சிறிய சீப்பால் சீவுவார்கள். *865இரு வரிசையில் இருந்து ஏழு வரிசை வரைமுடிந்து கொடுப்பார்கள். இந்த ஏழு வரிசை முடிந்து கொடுக்க  ஒரு வரிசைக்கு 50 ரூபாய் வீதம் மொத்தம் 350 ரூபாய் ஆகும். ஓரம் அடிக்க இருபது ரூபாய் தனி.

ஆனால் ஏழுவரிசை முடிய நூல் பத்தாவிட்டால் முந்தியில் நிறைய பிரித்து விட்டு முடிவார்கள். இவ்வாறு முடிந்தால் *866.சித்திரமாய் அழகாய் இருக்கும்.

இவ்வாறு இதை முடியாவிட்டால் ஓரம் எல்லாம் பிரிந்து விடும் என்பதெல்லாம் இல்லை. இது காரைக்குடிப் பக்கட்டு மட்டுமே இருக்கக்கூடிய ஒரு கைவேலைப்பாடு. ஒவ்வொரு ஊரிலும் ஒரு எம்பிராய்டரி, பின்னல் வேலை இருப்பது போல் காரைக்குடிக்கே உரித்தான கைவேலை இது.

முன்பெல்லாம் யாரிடமாவது கொடுத்துத்தான் முடிவது வழக்கம். இதை நானே பின்ன கற்றுக் கொண்டேன். இங்கே இருக்கும் புடவைகள் ( 20 பட்டுப்புடவைகள் இருக்கும் ) நானே முடிந்ததுதான். ( தற்பெருமை. )

ஆனால் சிலவற்றை இரு வரிசைகளும். அதிகபட்சம் நான்கு வரிசைகளும் முடிந்துள்ளேன்.  ஒவ்வொரு குஞ்சலமாகப் பிரித்து *867முக்கோணமாகவும். எல்லா குஞ்சலத்தையும் பிரித்து வரிசையான *868செயின் முடிச்சாகவும் முடிந்துள்ளேன். 

கல்யாணம் ஆனதிலிருந்து ஊசி நூல் பின்னுறது, பிரிக்கிறது , முடியிறது.. ஸ்வெட்டர், க்ரோஷா, எம்பிராய்டரி,  ப்ளவுஸ் ஹெம்மிங் என்று டிவி பார்க்கும்போதெல்லாம் இதுதான் என் வேலைகள். ரங்க்ஸ் கொஞ்சம்  தள்ளியே அமர்ந்துகொள்வார். ஊசி நூலால் குத்தி விடக்கூடாது அல்லவா :)  :)

Related Posts Plugin for WordPress, Blogger...