எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 17 ஜூன், 2010

அன்பின் நியோ. ....இது எதிர் பதிவு அல்ல.. தன்னிலை விளக்கம்..

அன்பின் நியோ..

முதல் முதல் என் தளத்தில் பின்னூட்டமிட்டு இருந்தீர்கள்,. மகிழ்வாய் இருந்தது.. நான் இதுவரை 200 இடுகைகளுக்கு மேல் எழுதி இருக்கிறேன்..
எதிர் கருத்துக்கள் எதுவும் இதுவரை இல்லை.. எனவே நானும் எதிர் இடுகைகளோ., எதிர் கவுஜைகளோ எழுதியது இல்லை. சந்தர்ப்பம் வாய்த்ததுமில்லை.. இதுவும் எதிர் இடுகையோ .. மறு வினையோ அல்ல. ஒரு தன்னிலை விளக்கம்தான்..

எந்தக் காலதிலும் வலைப்பதிவர் ஒற்றுமை எந்தக் காரணத்தாலும் குலையாமலிருக்க வேண்டும் என எண்ணுபவருள் நானும் ஒருவள்..
குடும்பம் ., குழந்தை., விருந்தினர் ., விடுமுறை., சுற்றுலா.. என்ற பல விஷயங்களுக்கு நடுவிலும் தான் நினைத்தவற்றைப் பகிர பெண்கள் வலைத்தளத்தில் எழுதி வருகிறோம்.. கவிதையோ., கட்டுரைகளோ., சமையல் குறிப்போ., தையலோ.. எல்லாம்.. முடிந்தவரை அனைவரும் சிறப்பாகவே கொடுக்கிறார்கள்..


ஆனால் போபால் விஷவாயு சம்பவத்தின் மேல் அனைவருக்கும் இரக்கம் உண்டு .. அதனை சரியான முறையில் வெளிப்படுத்த சமயம் வாய்க்கவில்லை என்றே கருதுகிறேன்... நீங்கள் சொன்ன 30 பதிவர்களில் சிலர் பெயரைத்தான் நான் அறிந்திருக்கிறேன்.. படிக்க இயலாதது நேரக் குறைவே தவிர.. வேண்டாம் என்பதல்ல.. சில நாட்கள் முன்பு நடந்த சில மனஸ்தாபங்கள் கூட எனக்கு சரிவரத் தெரியாது.. எல்லாம் சரி ஆகிவிடும் என நினைக்கிறேன்..

என்னுடைய பதிவில் இடுகை இடுவது., மற்றையோருக்கு பின்னூட்டமிடுவது., மேலும் மற்றதோழமைகள் (முகப்புத்தகத்தில்) நம்மை டாக் செய்யும் இடுகைகளுக்கு பின்னூட்டம் இடுவது என நேரம் போதவில்லை.. எந்நேரமும் அமர முடிவதில்லை.. ஒரு மணி நேரத்தில் 10 வலைத்தளங்கள்தான் வாசித்துப் பின்னூட்டமிட முடியும்.. அதுவும் வீட்டிலுள்ளோர் என்ன எந்நேரமும் இதில் என கோபித்துக் கொள்ளாமலிருந்தால்., நெட்டோ ., கரண்டோ பிரச்சனை இல்லாமலிருந்தால்.., குழந்தைகள் தொந்தரவு செய்யாமலிருந்தால்.. .... இத்தனையும் உங்களுக்கு இருக்காது என எண்ணுகிறேன்..

நடுவில் ஒரு பத்ரிக்கைக்காகவும் செயல் படுவதால்.. பல் முனைப்போடு செயல் பட வேண்டியுள்ளது..

நான் கல்லூரி முடித்த சமயம் .. அதைக்கேட்டு எவ்வளவு கோபம் வந்தது எவ்வளவு துடித்தேன் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியாது.... அப்போது எல்லாம் பெரும்பாலும் பத்ரிக்கைகள் மூலம்தான் தெரியும். தொலைக்காட்சி அரிது.. அப்போது புதுமைப் பெண்கள் போல இருந்த கோபம் இல்லை எனினும் கழிவிரக்கம் ஏற்படுகிறது இப்போதும்... சிலவற்றை நினைத்து வருந்த முடிகிறதே தவிர .. பகிர முடிவதில்லை... என் செய்ய..

இதில் நிச்சயம் எங்களுக்கு போதிய விவரங்கள் கிடைக்கவில்லை ., சேகரித்து இடுகை இட நேரம் கிடைக்கவில்லை என்பதே உண்மை.. நிச்சயம் ஒரு பெண் சம்பந்தப் பட்டிருந்தால் உங்களுக்கு அறிவு பூர்வமான இடுகைகளை விட உணர்வு பூர்வமான இடுகைகள்தான் அதிகம் வந்து இருக்கும்.. எதையும் காக்கும் சக்தியும் நாங்கள்தான் எதையும் மனதளவில் தாங்க இயலாத சக்தியும் நாங்கள்தான்..

ஒரு பொது நிகழ்வில் .. எல்லோருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் அதிலும் பெண்களும் ஈடு பாடு காட்ட வேண்டும் என்ற உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது.. நாங்களும் முயல்கிறோம்.. முடிந்தவரை எதனைப் பற்றியும் நன்கு தெரிந்தே கருத்துச் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன்.. நண்பா..

எழுதி வைத்த இடுகைகள் சில கூட தாமதமாகத்தான் வெளியிட நேரிடுகிறது.. எதற்கு நேரம் வேண்டும் முதலில் ..

எனவே நேரக் குறைவு.. என்பதுதானே தவிர அக்கறை இல்லை ஈடுபாடு இல்லை., கவலை இல்லை என்பதல்ல.. புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.. எங்களை.. என்றும் நட்புடன் அன்பு அக்கா தேன்..

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்..!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் ..!!

டிஸ்கி..:- எல்லாரும் எனக்கும் நியோவுக்கும் ஏதோ மிஸண்டர்ஸ்டாண்டிங் என நினைக்கிறார்கள்.. அப்படி எதுவுமே இல்லை... எனவே அவரின் இந்த இ்டுகை இணைப்பை இங்கே கொடுக்கிறேன்..
போபால் விபத்தில் எந்த ஒரு பெண்ணும் உயிர் இழக்கவில்லை..

60 கருத்துகள்:

  1. எல்லாவற்றையும் எல்லோராலும் எழுதிவிட முடிவதில்லை என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  2. உண்மை ஜமால் என் அன்பு நண்பா.. சரியா சொன்னீங்க.. புரிதலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. I dont know the details of your misunderstandings.

    But its boring to see fights/misunderstandings between bloggers.

    It spoils the whole reading mood really.

    பதிலளிநீக்கு
  4. இது புரிந்துகொள்ளப் படும் நிச்சயமாய் ராம்ஜி

    பதிலளிநீக்கு
  5. i dont know what happened. all the problems start due to misunderstanding. lets hope everything get solved

    பதிலளிநீக்கு
  6. me too understand you..

    But its boring to see fights/misunderstandings between bloggers It spoils the whole reading mood really.///

    True..

    பதிலளிநீக்கு
  7. " எதையும் காக்கும் சக்தியும் நாங்கள்தான் எதையும் மனதளவில் தாங்க இயலாத சக்தியும் நாங்கள்தான்"
    உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறீர்கள்.
    நட்புக்கு நீங்கள் கொடுத்த இந்த விளக்கம் பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
  8. ஒரு பொது நிகழ்வில் .. எல்லோருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் அதிலும் பெண்களும் ஈடு பாடு காட்ட வேண்டும் என்ற உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது.. நாங்களும் முயல்கிறோம்.. முடிந்தவரை எதனைப் பற்றியும் நன்கு தெரிந்தே கருத்துச் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன்.. நண்பா..


    ..... True....

    .....I am still learning and trying to do my best.

    பதிலளிநீக்கு
  9. அவரின் ஆதங்கத்திற்கு அழகான முறையில் பதில் கூறியுள்ளீர்கள்.

    உங்கள் மீது மேலும் மதிப்பு உயர்கிறது.

    பதிலளிநீக்கு
  10. அன்பு அக்கா தேனம்மை அவர்களுக்கு !
    மதிய வணக்கங்கள் !
    சாப்பிட்டு விட்டீர்களா ! நான் ஹோட்டலுக்கு கிளம்பிக் கொண்டு இருக்கிறேன் !

    தாங்கள் வலையுலகின் மூத்த பதிவர்களில் ஒருவர் ...
    ஆகவே புது முக பதிவரின் மீது கோபம் கொள்ள மாட்டீர்கள் என நான் நன்றாகவே அறிவேன் !

    // ஒரு பொது நிகழ்வில் .. எல்லோருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் அதிலும் பெண்களும் ஈடு பாடு காட்ட வேண்டும் என்ற உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது.. //
    இந்த ஒற்றை ஆதங்கம் மட்டும் தான் அக்கா எனக்கு ! வேறொன்றுமில்லை !

    // நேரக் குறைவு.. என்பதுதானே தவிர அக்கறை இல்லை ஈடுபாடு இல்லை., கவலை இல்லை என்பதல்ல.. புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.. எங்களை.. //
    உண்மை தான் அக்கா ! நான் மட்டுமென்ன எல்லா சமூக பிரச்சனைகள் சார்ந்த பதிவுகள் அனைத்திலும் பின்னூட்டமிட்டுக் கொண்டா இருக்கிறேன் ? உமா அவர்களுக்கு பாராட்டுதல்கள் தெரிவிக்க வேண்டும் போலத் தோன்றியதும் அனைத்து முக்கிய போபால் பதிவுகளையும் எனது பதிவில் தொகுக்க வேண்டும் என்பதுவும் அதன் முக்கிய நோக்கங்கள் !

    // ஆனால் போபால் விஷவாயு சம்பவத்தின் மேல் அனைவருக்கும் இரக்கம் உண்டு .. அதனை சரியான முறையில் வெளிப்படுத்த சமயம் வாய்க்கவில்லை என்றே கருதுகிறேன்... //
    இருநூறு பதிவுகளுக்கு மேல் எழுதிய மூத்த பதிவர் என்ற முறையில் உங்கள் வரியில் ஒலிப்பது ஒட்டு மொத்த பதிவர்களின் குரலே !
    ஒத்துக் கொள்கிறேன் ! புரிந்தும் கொள்கிறேன் !

    // ஒரு மணி நேரத்தில் 10 வலைத்தளங்கள்தான் வாசித்துப் பின்னூட்டமிட முடியும்.. அதுவும் வீட்டிலுள்ளோர் என்ன எந்நேரமும் இதில் என கோபித்துக் கொள்ளாமலிருந்தால்., நெட்டோ ., கரண்டோ பிரச்சனை இல்லாமலிருந்தால்.., குழந்தைகள் தொந்தரவு செய்யாமலிருந்தால்.. .... //
    இந்த சூழலில் உங்களை தேவையற்று நேரத்தை வீணடிக்கும் விதமாக இந்த பதிவை வேறு எழுத வைத்து விட்டேன் ... கோபம் கொள்ள வேண்டாம் அக்கா ...!

    // எதிர் கருத்துக்கள் எதுவும் இதுவரை இல்லை.. எனவே நானும் எதிர் இடுகைகளோ., எதிர் கவுஜைகளோ எழுதியது இல்லை. சந்தர்ப்பம் வாய்த்ததுமில்லை... //
    எப்படியோ ... பின்னொரு தினம் உங்களை எங்கேயோ சந்திக்க நேர்ந்தால் அறிமுகம் செய்து கொள்வது எனக்கு எளிதாயிருக்கும் ... ( கோபம் கொள்ள மாட்டீர்கள் என நன்றாக நானறிவேன் )

    // முதல் முதல் என் தளத்தில் பின்னூட்டமிட்டு இருந்தீர்கள்,. மகிழ்வாய் இருந்தது.. //
    தொடர்ந்து அவ்வப்பொழுது உங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துக் கொண்டே இருப்பேன் !

    // அன்பின் நியோ. ....இது எதிர் பதிவு அல்ல.. தன்னிலை விளக்கம்.. //
    உங்கள் சார்பாகவும் ... அனைத்து சக பெண் பதிவர்கள் சார்பாகவும் !

    // வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்..!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் ..!! //

    ஆமாம் தோழர் !
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்..!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் ..!!
    அன்பும் நட்பும் மகிழ்ச்சியும் பரவசமும் பல்கி பரவட்டும் !

    வருகிறேன் அக்கா !

    பதிலளிநீக்கு
  11. நன்றி அபுல் பசர்.. நட்புகள் என்றும் உன்னதமானவை

    பதிலளிநீக்கு
  12. ஜமால் சொல்லியிருப்பது போல எல்லாவற்றையும் எல்லாராலும் எழுத முடியாது + நீங்கள் சொல்லியிருப்பது போல நமக்கு இருக்கும் காலம் வெகு குறைவு. இருக்கும் நேரத்தில் நல்லவற்றை பகிரவே விரும்புகிறோம்.

    நண்பர் நியோவும் புரிதலுடனேயே பின்னூட்டம் இட்டு இருக்கிறார். தங்களுக்கு மட்டுமல்லாமல் தங்களைப்போன்ற மற்ற பெண்பதிவர்கள் சார்பிலும் தன்னிலை விளக்கம் அளித்ததற்கு நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  13. நன்றி சித்து அருமை..எல்லோருமே கற்றுக் கொள்கிறோம்

    பதிலளிநீக்கு
  14. அய்யய்யே...இது போங்காட்டம்....ஓழுங்கா சண்டை போடாம சமாதானமா போயிட்டீங்கன்னா... வேடிக்கை பாக்க வந்த எங்களுக்குல்லா ஏமாற்றம். மரியாதையா சண்டை போட்ருங்க.....

    :)

    பதிலளிநீக்கு
  15. Very apt post, sorry thoughts, expressing the fact. The attempt to make it clear rather than defending answers the original issue clearly. For some it is coming of an age. It takes time to realize and accept that we have concerns for all mishaps in the world. When we support the unjustified killings of Srilankans (Tamils), we also would have concern for a palestinian killed unjustfully or someone in the balkans. If we dont express, it does not mean that we dont have feelings for them. Every human falls under the limitations of time and space. Bringing this issue was good and answering this also was good. Everything is for good. We learn something from everything.

    - Mey

    பதிலளிநீக்கு
  16. //தாங்கள் வலையுலகின் மூத்த பதிவர்களில் ஒருவர் ...
    //

    வணக்கம் !

    ,,நிச்சயம் ஒரு பெண் சம்பந்தப் பட்டிருந்தால் கூட உங்களுக்கு அறிவு பூர்வமான இடுகைகள் கிடைத்து இருக்காது.. உணர்வு பூர்வமான இடுகைகள்தான் வந்து இருக்கும்.. //


    முரண்படுகிறேன் . முடிந்தால் மாற்றவும் அல்லது விருப்பம் இருந்தால் நீக்கலாம்


    ஆனால் உங்களுக்கே உரிய முதிர்ந்த அணுகுமுறையுடன் இந்த விஷயத்தை விளக்கி இருப்பது கண்டு மகிழ்ச்சி

    நியோ வின் ஏற்பும் அவர் மீதான அன்பை ஊறவைக்கிறது

    பதிலளிநீக்கு
  17. நன்றி நியோ எல்லாவற்றுக்கும்....

    பதிலளிநீக்கு
  18. கண்ணா முதல் முதல் என் வலைத்தளத்துக்கு வர்றீங்க. என்ன ரகளை இப்படி.. ஏன் இந்தக் கொலை வெறி .. விட்ருங்க பொழைச்சுப் போறோம்.. :)))

    பதிலளிநீக்கு
  19. ஆமாம் நேசன்.. நியோவின் மறுவிளக்கம் ரொம்ப பிடிச்சு இருக்குது.. பண்பான அணுகு முறை.. எல்லாவற்றுகும் கொடுத்து வைத்து இருக்கிறோம் மக்கா...

    பதிலளிநீக்கு
  20. ஆமாம் நேசன்.. நியோவின் மறுவிளக்கம் ரொம்ப பிடிச்சு இருக்குது.. பண்பான அணுகு முறை.. எல்லாவற்றுகும் கொடுத்து வைத்து இருக்கிறோம் மக்கா...

    பதிலளிநீக்கு
  21. ஆமாம் நேசன்.. நியோவின் மறுவிளக்கம் ரொம்ப பிடிச்சு இருக்குது.. பண்பான அணுகு முறை.. எல்லாவற்றுகும் கொடுத்து வைத்து இருக்கிறோம் மக்கா...

    பதிலளிநீக்கு
  22. ஆமாம் நேசன்.. நியோவின் மறுவிளக்கம் ரொம்ப பிடிச்சு இருக்குது.. பண்பான அணுகு முறை.. எல்லாவற்றுகும் கொடுத்து வைத்து இருக்கிறோம் மக்கா...

    பதிலளிநீக்கு
  23. நேசன்... திருத்தி இருக்கிறேன் பாருங்க..


    ஒரு முறை பின்னூட்டம் போட க்ளிக் பண்ணா ஆகலைன்னு 4 முறை க்ளிக்கினேன் .. அது 4 முறை வந்துருச்சு.. ம்ம்ம்

    பதிலளிநீக்கு
  24. இப்போதுதான் முழுதும் படித்தேன். நீங்கள் சமீபத்தில் கூட பொது பிரச்சனையான பங்கு முதலீடு குறித்து எழுதி உள்ளீர்கள்.

    சமூக பிரச்சனைகள குறித்து பல பெண் பதிவர்கள் எழுதி உள்ளனர், எழுதுகின்றனர். உதாரணம் சிலர்- தமயந்தி, சித்ரா, துளசி கோபால், கீதா சாம்பசிவன்...

    நான் சொல்ல வந்தது, பதிவர்கல்காகிய நாம் ஒருவரை ஒருவர் புகழ்ந்தும் இகழ்ந்தும் பேசியே பொழுதை வீண் அடிக்கலாமல் பொதுவாக் எழுதலாமே நேபது தான்.

    பதிவர்கள் பற்றிய செய்திகளே வாசிக்கும் பொழுது எனக்கு அலுப்பு வந்து விடுகிறது.

    If my earlier comments hurt anyone sorry for that please.

    பதிலளிநீக்கு
  25. காலத்தால் பக்குவப்பட்ட மற்றும் முதிர்ந்த எழுத்து.

    //"நான் கல்லூரி முடித்த சமயம் .. அதைக்கேட்டு எவ்வளவு கோபம் வந்தது எவ்வளவு துடித்தேன் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியாது.... அப்போது எல்லாம் பெரும்பாலும் பத்ரிக்கைகள் மூலம்தான் தெரியும். தொலைக்காட்சி அரிது.. அப்போது புதுமைப் பெண்கள் போல இருந்த கோபம் இல்லை எனினும் கழிவிரக்கம் ஏற்படுகிறது இப்போதும்... சிலவற்றை நினைத்து வருந்த முடிகிறதே தவிர .. பகிர முடிவதில்லை... என் செய்ய.."//

    பதிலளிநீக்கு
  26. நியோ முதன் முதலாக எனது கடந்த பதிவில் இட்டிருந்த பின்னூட்டத்தின் வழியாக அவர் வலைப்பூவுக்குச் சென்று இக்குறிப்பிட்ட பதிவினை நானும் பார்த்தேன். ஒரு சம்பவம் குறித்து நாம் பதிவாக இட்டாலோ அல்லது தேடிப்பிடித்து அது சம்பந்தமான பதிவுகளில் பின்னூட்டம் இட்டாலோதான் அந்த விஷயத்தில் நமக்கு வருத்தம் அக்கறை என நினைத்தால் மேலே என்ன பேசி புரிய வைக்க இயலும் எனத் தெரியாமல் மவுனமாகவே திரும்பி விட்டேன் மேலும் சர்ச்சையை வளர்க்க விரும்பாமல்.

    நீங்கள் என் போன்றவர்கள் சொல்ல நினைத்ததை மிக அழகாக விளக்கியுள்ளீர்கள். நன்றி தேனம்மை.

    நண்பர் நியோவின் பதில் நான் சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் மிகுந்த புரிந்துணர்வுடன் வந்திருப்பது அதை விட மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி நியோ.

    பதிலளிநீக்கு
  27. /////ஒரு பொது நிகழ்வில் .. எல்லோருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் அதிலும் பெண்களும் ஈடு பாடு காட்ட வேண்டும் என்ற உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது.. நாங்களும் முயல்கிறோம்.. முடிந்தவரை எதனைப் பற்றியும் நன்கு தெரிந்தே கருத்துச் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன்.. நண்பா.. ////

    முற்றிலும் உண்மை....!!!

    அன்பு நண்பர் நியோவிற்கு, பதிவுலகில் புதிதாய் வந்தவள் நான்.. நிறைய விஷயங்கள் சரியாய் புரிவதில்லை எனக்கு.. இன்னும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன்..!!
    எங்களை புரிந்து கொண்டதற்கு நன்றி..!!

    @தேனக்கா
    அன்புள்ள தேனக்கா...
    அனைவரின் சார்பிலும் நீங்கள் இட்ட இந்த பதிவு மனதை, தொடுவது போல் உள்ளது அக்கா... உங்கள் தங்கை என் சொல்லி கொள்வதில் மிகவும் பெருமை கொள்கிறேன்..!!
    உங்களுக்கு, எனது மனமார்ந்த நன்றிகள்...!!

    பதிலளிநீக்கு
  28. உங்கள் இடுகையில் வெளிப்படுவது......அன்பு, புரிதல், அனுபவசெறிவு, பக்குவம் மேலும் தன்னடக்கம்.

    இவை எல்லாம் சரியான அளவில் சகோதாரர் நியோவிற்கும் போய்ச் சேர்ந்திருப்பது அழகான விசயம்.


    அருமையான தன்னிலை விளக்கம்....மூலம்..அன்பாய் பேசியிருக்கும் தோழிக்கு.... நமஸ்காரங்கள்

    பதிலளிநீக்கு
  29. நான் ஏற்கெனவே அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கியதைபற்றி எழுதியுள்ளேன்.
    http://paadiniyar.blogspot.com/2009/12/blog-post_04.html

    இப்போது நடந்ததற்கு ஆண்கள் பெண்கள் அனைவரும்தான் கொதித்துப்போயுள்ளனர். பதிவுலகில் இது சம்பந்தமான நல்ல ஆழமான கட்டுரைகள் வநதவுடன் நமக்குத் தோன்றிவிடும் இதைவிட நாம் என்ன எழுதிவிடப்போகிறோம் என்று. அதனால்தான் தனியாக எழுதவில்லை. பின்னூட்டம் போடுவது மட்டுமே ஒரு விஷயத்தை அங்கீகரிப்பதாகிவிடாது என்று நான் நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  30. அன்புள்ள தேனம்மைக்கும் பிற பதிவர்களுக்கும்,

    நான் நியோவிற்கு 15 ஜூன் அனுப்பிய தனிமடலில் இருந்து:

    //நியோ,

    என்னைக் கவனித்து, உங்கள் இடுகையில் என்னைக் குறிப்பிட்டு சமர்ப்பித்து இருப்பதற்கு நன்றி.
    அதே சமயம் கொஞ்சம் அவசரப் பட்டு விட்டீர்களோ என்ற கவலையும் கூட.

    நான் தொடர்ந்து எழுதும் பதிவர் அல்ல. பதிவு எழுதுவதில் அனுபவம் மிகக் குறைவு. சில தளங்களை தொடர்ந்து கவனித்து பின்னூட்டம் இடுவது - அதுவும் அலுவல்களிடையே நேரம் கிடைத்தால் மட்டுமே செய்கிறேன். ஜாலியானப் பதிவுகளிலும் கூட பின்னூட்டம் இடுகிறேன்.

    நிறையப் பெண் பதிவர்கள் இங்கே சமூகப் பொறுப்போடு தொடர்ந்து எழுதுகிறார்கள். பொதுவாக அவர்களின் நேரமும் கவனமும் இந்த செய்தியின் எதிர்வினைக்கு அனுகூலமாக இல்லாது இருந்திருக்கலாம். இடுகையில் அவர்களைக் குற்றம் சாட்டியது போல எழுதி இருப்பது அவர்களுக்கு வருத்தம் அளித்திருக்கக் கூடும் என்று கருதுகிறேன். நீங்கள் அளித்த கௌரவத்திற்கு நான் பொருத்தமானவள் அல்ல என்றும் நினைக்கிறேன்.

    மற்றபடி ஒரு பதிவர் இதுதான் எழுதவேண்டும் இதை எழுதக்கூடாது என்று சொல்லுவதில் எனக்கும் உடன்பாடு இல்லை. சமூக உணர்ச்சி பெண் மட்டுமல்ல ஆண்களுக்கும் எவ்வளவுதான் தூண்டல் இருந்தாலும் சொந்த புத்தியால் மட்டுமே ஏற்படக் கூடும் என்பது என் கருத்து.//

    புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்,

    உமா

    பதிலளிநீக்கு
  31. சண்டை ஒரு சுவரஜ்யமா இல்லையே ?

    பதிலளிநீக்கு
  32. //வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்..!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் ..!! //

    பாராட்டுகள் தேனக்கா...

    பதிலளிநீக்கு
  33. அக்காவின் அன்பு அனைத்தையும் செயலிழக்க வைக்கும்

    இதுபோன்ற ஒரு தேர்ந்த மனநிலை அனைவருக்கும் வாய்க்க இறைவனை இறைஞ்சுகிறேன்.

    விஜய்

    பதிலளிநீக்கு
  34. ம்..இன்றைய பொழுது போய்விடும் என்று நினைத்தேன்.:)
    சப் என்று போய் விட்டதே.
    வேடிக்கை பாக்க வந்த எங்களுக்கு ஏமாற்றம்.:(
    :-)
    ச்சும்மா தமாஷ் .

    பதிலளிநீக்கு
  35. Madam, Neenga kodutha vilakkatha vida.. neenga vilakina vidam miga arumai. Thozhar Neo comments pathu pul arichi pochiiiii.... avar comments moolma ore nalla ellaru manasulayum oru miga siranda idatha adanjitaru.... Royal saluate to both of You....

    பதிலளிநீக்கு
  36. @@@நட்புடன் ஜமால்--// எல்லாவற்றையும் எல்லோராலும் எழுதிவிட முடிவதில்லை என்பது என் கருத்து. //

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்

    பதிலளிநீக்கு
  37. நமக்கு ஒண்ணுமே புரியல, விட்டுருவோம்

    பதிலளிநீக்கு
  38. இதமான இடுகை அக்கா...

    சிறியவர்கள் தவறு இழைப்பதும் பெரியவகள் சொல்லிபுரியவைப்பதும் தான் நமது கலாச்சாரம் இதில் எங்கிருந்து வந்து சண்டையேல்லாம்?

    கலையில் 7மணிக்கு என் தம்பி திட்டுவாங்கியிருப்பான் 7:05 டேய் சாப்பிடவாடா அவ்வளவுதான்

    இதுதான் நம் வாழ்க்கை

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்..!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    பதிலளிநீக்கு
  39. எல்லோருடைய குரலாகவும் இடுகை ஒலித்திருக்கிறது. நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  40. நம் எல்லோர் எழுத்திலும் ஒரு முதிர்ச்சி!
    சக வலைப் பதிவரின் உணர்வினைப் பகிர்தல் ஒரு மகிழ்ச்சி!!
    நம் எழுத்துக்களுக்கு நாமே ’ஜவாப்’
    என்கிற பொறுப்பு நம்முள் ஒரு எழுச்சி!!!
    அதுவே வெகு நாகரீகமான இந்த இடுகையின் சாட்சி!!!!
    தேனு கூறியதை நான் வழி
    மொழிகிறேன் : வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்..!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    பதிலளிநீக்கு
  41. நீங்க இருக்கிற பிஸில எங்களை மாதிரி ஆளுங்க எழுதறதையெல்லாம் படிக்கிறதே பெரிய விஷயம்தான்..!

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்குக..!

    தேனக்கா வாழ்க..!

    பதிலளிநீக்கு
  42. வணக்கம்! முதன் முறையாக உங்க வலைப்பக்கம் வருகின்றேன். எங்க டீச்சர் திருமதி.புஷ்பவல்லி அவர்கள் தான் இப்போ நியாபகத்துக்கு வர்ராங்க. நான் எதாவது பிரச்சனையில் கோவத்தில் கத்தோ கத்துன்னு கத்துவேன். கன்னத்தில் கை வத்துகொண்டு ஆழ்ந்து கவனித்து விட்டு ஒரு சின்ன புன்னகை செஞ்சுட்டு "இன்னும் அரைமணி நேரம் கழித்து வந்து இதிலே ஒரு எழுத்து கூட மாற்றாம அப்படியே சொல்லு. நீ சொல்வதை எல்லாம் ஒத்துக்குறேன்"ன்னு சொல்லுவாங்க.

    அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே நான் புஸ் ஆகிவிடுவேன். பின்னே இரண்டு நாட்கள் டீச்சரை பார்ப்பதை தவிர்ப்பேன்.

    அடுத்த முறை பார்க்கும் போது அந்த விஷயத்தை பற்றியே பேசமாட்டாங்க.

    கிட்ட தட்ட இந்த பதிவும், நியோவின் பின்னூட்டமும் அது போலத்தான் இருக்கு. நல்லது.

    அன்புடன்
    அபிஅப்பா

    பதிலளிநீக்கு
  43. நன்றி ராம்ஜி., சின்னப் பயல்., ராமலெஷ்மி., ஆறுமுகம்

    பதிலளிநீக்கு
  44. நன்றிடா.. ஆனந்தி.,

    நன்றி ரோமியோ., தேவா., ஜெயந்தி

    பதிலளிநீக்கு
  45. மிக்க நன்றி உமா.. நல்ல புரிதல் உங்களுக்கு ..இது எனக்கு ரொம்பப் பிடித்தது உங்களிடம்..

    பதிலளிநீக்கு
  46. என்ன நசர் இது.. நாரதர் ஆகிட்டு வர்றீங்க..:))

    பதிலளிநீக்கு
  47. நன்றீ கனி ., விஜய்.,

    என்ன முரளி இது.. !!

    பதிலளிநீக்கு
  48. நன்றீ அடிமைப் பாண்டியன்..

    உண்மை ஜெய்லானி.. ஜமால் சொன்னது சரிதான்..

    பதிலளிநீக்கு
  49. சசி நீங்க ஆப்செண்ட் ஆகிட்டீங்க ...கை எப்படி இருக்கு

    பதிலளிநீக்கு
  50. நன்றீ செந்தில் குமார்., அமைதிச்சாரல்., ராமமூர்த்தி

    பதிலளிநீக்கு
  51. முதன் முதலா என் வலைத்தளத்துக்கு வந்த உண்மைத்தமிழனுக்கும் . அபி அப்பாவுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  52. வலைப்பதிவர் ஒற்றூமை ஓங்கட்டும்.. என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    பதிலளிநீக்கு
  53. உங்களின் பதிவுகளை படித்துவருகிறேன். மிகவும் பக்குவமாய் எழுதி உள்ளீர்கள்.
    நெறைய பேரு ஆச படுறாங்க நீங்களும் Neo அவர்களும் சண்டை போடணும்னு.
    இப்படி கீறி பாம்பு கதை மாதிரி ஆகிபோச்சே :-)
    ( குறிப்பு: நான் சண்டையை விரும்பவில்லை. உண்மையாகவே :-))

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...