எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 31 டிசம்பர், 2024

நவரசா டெல்லி கணேஷ்

 நவரசா டெல்லி கணேஷ்


ஆஸ்த்ரேலியாவிலிருந்து வெளிவந்த ”மெல்லினம்” என்றொரு மாதாந்திரியில் 2010 இலிருந்து நான்கு வருடங்கள் நான் ”பெண்மொழி” என்றொரு கட்டுரைத் தொடர் எழுதி வந்தேன். அது சமயம் அதில் “அது ஒரு நிலாக்காலம் என்றொரு தொடர் எழுதி வந்தார் திரு. டெல்லி கணேஷ் அவர்கள். சிறுவயதிலேயே அம்மாவை இழந்ததால் பாட்டியால் வளர்க்கப்பட்டது, வான்படையில் சேர்ந்தபோது ஏற்பட்ட அனுபவங்கள், ஜம்முவிலிருந்து அத்தை பெண் தங்கத்தைக் காதலித்து அதன் பின் தமிழகம் வந்து மணந்து கொண்டது அனைத்தையும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

முகநூல் நண்பரும் கூட. ஒருமுறை வை.மு.கோதை நாயகி அம்மாளில் இருந்து இன்றைய இணைய எழுத்தாளர்கள் வரை குறிப்பிட்டு எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் மற்றும் அவர்களின் படைப்புகளையும், புத்தகங்களையும் லிஸ்ட் வாரியாகப் பட்டியலிட்டிருந்தேன். அந்த போஸ்டில் “இவ்வளவு எழுத்தாளர்களைப் பற்றியும் பட்டியலிட்ட நீங்கள் கரிச்சான் குஞ்சுவையும் அவரின் பசித்த மானுடத்தையும் விட்டு விட்டீர்களே’ என்று பின்னூட்டமிட்டிருந்தார். அப்போது நான் பெண்ணிய எழுத்துக்களில் தோய்ந்திருந்த காலம் என்பதால் அவரைப் பட்டியலில் சேர்க்க எண்ணவில்லை.

யூ ட்யூபில் 3701 - 3710 வீடியோக்கள்.

3701.பாம்புத் தாயம் l கவிஞர் சிவல்புரி சிங்காரம் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/k6MucvPsQes


#பாம்புத்தாயம் #கவிஞர்சிவல்புரிசிங்காரம் #தேனம்மைலெக்ஷ்மணன

#முருகா #தேனம்மைலெக்ஷ்மணன்,

#muruga #THENAMMAILAKSHMANAN,



3702.தீபம் l  ராம வீரப்பன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/knFf6njw1oE


#தீபம் #ராமவீரப்பன் #தேனம்மைலெக்ஷ்மணன

#deepam #ramaveerappan #thenammailakshmanan

சனி, 28 டிசம்பர், 2024

சோகி சிவா சொல்வழக்கு - 15.

 27.

பச்ச மண்ணு - பச்சைக்குழந்தை , பச்சை மண்ணுப் போல இசைவாயிருத்தல்

பச்சக் குட்டி - சின்னப்பிள்ளை

பச்ச நத்தம் - சிறு குழந்தையைக் குறிப்பது. நத்தம் என்றால் ரத்தம் என்று அர்த்தம்

அப்பச்சி - தந்தை

ஆத்தாமை - ஆற்றமுடியாத மனவருத்தம்

ஊர்த்தாக்கல் - ஊர் நிலவரம், ஊர் விஷயங்கள்

யூ ட்யூபில் 3691 - 3700 வீடியோக்கள். புத்தக விமர்சனங்கள்.

3691.இவள் புதியவள் l  சூரியக்கதிர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=VgsmgjYDy6U


#இவள்புதியவள், #சூரியக்கதிர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#IVALPUDHIYAVAL, #SURYAKATHIR, #THENAMMAILAKSHMANAN,



3692.திருநெறிய தமிழ் l  எம்.எஸ்.லெக்ஷ்மி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=XJ5ESAm_HxM


#திருநெறியதமிழ், #எம்எஸ்லெக்ஷ்மி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#thiruneriyatami, #mslakshmi, #thenammailakshmanan,

வியாழன், 26 டிசம்பர், 2024

குன்றக்குடியின் சுப்புலெட்சுமி

நகரத்தார் மலர் இதழில்


யூ ட்யூபில் 3681 - 3690 வீடியோக்கள். தாலாட்டு.

3681.நாஞ்சில்நாட்டுத் தாலாட்டு l ஏனழுதாய் பிள்ளாய் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=GYi1bY_7sMk


#தாலாட்டு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THALATTU, #THENAMMAILAKSHMANAN,



3682.நாஞ்சில் நாட்டுத் தாலாட்டுl  தென்திருவாங்கூர்ப் பகுதி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/suWjZumAx3A


#தாலாட்டு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THALATTU, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 24 டிசம்பர், 2024

யூ ட்யூபில் 3671 - 3680 வீடியோக்கள். அழுக்காறாமை. தினம் ஒரு திருக்குறள்.

3671.தினம் ஒரு திருக்குறள் - 161 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=mWGlsjRi6vY


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,



3672.தினம் ஒரு திருக்குறள் - 162 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Ibqsz1-gFtU


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,

பகிர்ந்தளிப்பதில் இன்பம் பெற்ற முத்கலர்

 பகிர்ந்தளிப்பதில் இன்பம் பெற்ற முத்கலர்


முற்காலத்தில் முத்கலர் என்றொரு மகரிஷி இருந்தார். பார்மியாசா என்றொரு முனிவரின் மகன் . தானம் தர்மம் என்பதற்கு எடுத்துக்காட்டு இவர்தான். தான் செய்த புண்ணியங்களால் தன் உடலோடு சொர்க்கம் செல்லும் வாய்ப்புக் கிட்டியும் மறுத்தவர் . அப்படி இவர் செய்த புண்ணியம் என்ன ஏன் சொர்க்க லோகம் செல்வதை மறுத்தார் என்பதைப் பற்றி அறிவோம் வாருங்கள்.  

களத்து மேட்டில் அறுவடையான சோளதானியங்கள் அடித்துத் தூற்றப்பட்டுக் கொண்டிருந்தன. அத்தனை தானியங்களையும் மூட்டைகளில் அடைத்து அந்த வயலுக்குரியவர்கள் எடுத்து சென்றபின் அந்த வயலில் இறங்கினார் முனிவர் முத்கலர். அங்கே சிதறிக் கிடந்த தானியங்களைப் பொறுக்கிச் சேர்த்தார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வயலில் இருந்தும் முடிந்த அளவு தானியங்களைக் கொண்டு சென்று வீட்டில் சேர்ப்பார் முத்கலர்.

வெள்ளி, 20 டிசம்பர், 2024

தென்னக ஜேம்ஸ்பாண்ட் ஜெய்ஷங்கர்

 தென்னக ஜேம்ஸ்பாண்ட் ஜெய்ஷங்கர்


அன்புள்ள மான்விழியே, இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால், நான் மலரோடு தனியாக, குயிலாக நானிருந்தென்ன, பார்வை ஒன்றே போதுமா, நாணத்தாலே கண்கள் மின்ன மின்ன ஆகியன அமைதியான காதலைச் சொல்லும் பாடல்கள் என்றால் பளிங்கினால் ஒரு மாளிகை எனக் குபீரெனப் பாயும் இசை வெள்ளமும் ஆங்கில நடிகைகள் போன்ற உடையலங்காரத்தில் சுழலும் விஜயலலிதாவின் நடனமும் இன்ப லாகிரியில் ஆழ்த்தும். மெர்மெய்ட் போன்று அவர் ஆடும் ஆட்டத்தில் தூண்டிலில் சிக்கிய மீனின் நிலைதான் ரசிகர்களின் நிலையும். ஜெய்சங்கரின் ஸ்மார்ட்டான ஸ்டைலும் கூட அசத்தல்தான்.

ஜூலை 12, 1938 இல் சுப்ரமணியன், யோகாம்பா இவர்களுக்கு மகனாகப் பிறந்தார் சங்கர்.  இவர் புதுக்கல்லூரியில் பட்டப்படிப்புப் படித்தவர். தந்தை வக்கீல். மகன்கள் இருவரையும் டாக்டர் ஆக்கியுள்ளார். ஆனால் இவர் தேர்ந்தெடுத்ததோ நடிப்புத்துறை. முதலில் சோவின் நாடகக்குழுவிலும் அதன்பின் கூத்தபிரானின் நாடகக் குழுவிலும் நடித்து வந்தார். ஜோஸப் தளியன் என்ற இயக்குநர் இரவும் பகலும் என்ற சினிமாவுக்காக இவர் பெயருடன் ஜெய் சேர்த்து ஜெய்சங்கர் என்று அறிமுகப்படுத்தினாராம்.

புதன், 18 டிசம்பர், 2024

சோகி சிவா சொல்வழக்கு - 14.

25.

சேஞ்சுக்குற - திருமணம் செய்து கொள்கின்ற

லெக்குல - இடத்துல

பொறசாதி - மற்ற சாதிக்காரர்கள்

மேங்கோப்பு - வீட்டின் மேல் பாகம்

தார்சு - கான்க்ரீட் தளம்

சேயிற வயசு - திருமணம் செய்யும் வயசு

புதன், 11 டிசம்பர், 2024

ஆழ்வார்களின் கதைகள் பற்றிய குறிப்பு

 புஸ்தகாவில் எனது பதிமூன்றாவது மின்னூல் ஆழ்வார்களின் கதைகள்.

ஆழ்வார்களின் கதைகள் பற்றிய குறிப்பு


முன்னுரை

வைணவக் கடவுளான திருமாலைப் பாடித் தொழுதவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் திருமாலையே தம் முழுமுதற் தெய்வமாக, அன்பிற்குரியவராகப் பாடிப் பரவி இருக்கிறார்கள். ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து பதினைந்தாம் நூற்றாண்டு வரை ஆழ்வார்களின் இம்மரபு தொடர்ந்திருக்கிறது. நாலாயிரம் திவ்யப் ப்ரபந்தம், பாசுரங்கள், திருவந்தாதி, திருவாய்மொழி, திருப்பாவை, திருவெழுக்கூற்றிருக்கை, திருப்பள்ளி எழுச்சி, திருமாலை, திருப்பல்லாண்டு, திருமொழி, நெடுந்தாண்டகம், குறுந்தாண்டகம், விருத்தம், சிறுத்தாம்பு என 108 திவ்ய தேசங்களையும் மங்களாசாசனம் செய்தவர்கள். இவ்வாறு தமிழில் கவி இயற்றிப் பொது மக்களுக்கும் வைணவத்தைக் கொண்டு சேர்த்த ஆழ்வார்களின் பணி அளவிட இயலாதது.

யூ ட்யூபில் 3661 - 3670 வீடியோக்கள். சினிமா விமர்சனங்கள்

3661.ஹரா l விஜய் ஸ்ரீ ஜி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=PlS5nYM8g_E


#ஹரா, #விஜய்ஸ்ரீஜி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#HARAA, #VIJAYSRIG, #THENAMMAILAKSHMANAN,



3662.Death Train l David Jackson l Thenammai Lakshmanan

https://www.youtube.com/watch?v=ix4-uzbev3g


#DeathTrain, #DavidJackson, #ThenammaiLakshmanan,

திங்கள், 9 டிசம்பர், 2024

யூ ட்யூபில் 3651 - 3660 வீடியோக்கள். பொறையுடைமை. தினம் ஒரு திருக்குறள்.

3651.தினம் ஒரு திருக்குறள் - 151 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=spF-l9NOLAI


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,



3652.தினம் ஒரு திருக்குறள் - 152 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=1U_vN8LFm3w


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,

மிஞ்சி, மூக்குத்தி

 மிஞ்சி, மூக்குத்தி


பருவப் பெண்களுக்கு அழகுக்காகவும் திருமணம் முடிந்துவிட்டது என்பதைச் சொல்லவும் சில சமூகங்களில் மூக்கு குத்தும் பழக்கம் இருக்கிறது.

மூக்கு மற்றும் காது குத்துவதால் உடலில் இருக்கும் வேண்டாத வாயுக்கள் வெளியேறுமாம். நமது மூளையில் இருக்கும் ஹிப்போதலாமஸ் என்ற பகுதி மூக்குக் குத்துவதால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் மூளையும் நரம்பு மண்டலமும் சீராகச் செயல்படுகிறது. 

வெள்ளி, 6 டிசம்பர், 2024

எனது படைப்புகளைப் பற்றி எழுத்தாளர் திரு. துரை.அறிவழகன் அவர்களின் பார்வை.

எனது படைப்புகளைப் பற்றி எழுத்தாளர் திரு. துரை.அறிவழகன் அவர்களின் பார்வை.


///அன்புள்ள தேனம்மை அவர்களுக்கு,

வணக்கம்.

தங்கள் எழுத்துக்களை வாசித்த வரையிலான கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.
 ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் : குழந்தைகளின் கதை கேட்கும் ஆர்வத்தைப் புரிந்து ஆத்திச்சூடி அறநெறியை கதைவடிவில் குழந்தைகளுக்காகப் படைத்துள்ளீர்கள். மாத்திரையை தேனில் குழைத்துக் கொடுக்கும் குழந்தை வளர்ப்பு, பெண் என்பதையும் தாண்டி இலக்கிய வடிவில் இயங்கும் தன்மை சிறப்பு. குழந்தைகளின் உரையாடல் அவர்கள் மொழியிலேயே அமைந்துள்ளது. குறையெனப்படுவது சில எளிய தமிழ் வார்த்தைகளுக்கு ஆங்கில பதத்தை உபயோகித்து இருப்பது.


புதன், 4 டிசம்பர், 2024

திரு வி என் சிடி அவர்களின் 12 ஆவது நினைவு நாளில் அஞ்சலிக் கவிதை

 கருவிலே திருவோடு பிறந்தார்.
கமலமெனும் திருவைக் கைப்பிடித்தார்.

மீனாக்ஷி திருப்பார்வை பட்டுத்
தக்கவர் தக்காராய் ஆனார்.

தனவணிகன் நிறுவியவரென அறிவேன்.
தமிழ்கூறும் நல்லுலகுக்கு இரு நூல்கள் ஈந்த நற்றமிழர்.

யூ ட்யூபில் 3641 - 3650 வீடியோக்கள்.

3641.சங்கீதக் கோலங்களும் ஸைமேடிக் தெரஃபியும் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=4gCRTAvjn50


#சங்கீதக்கோலங்களும், #ஸைமேடிக்தெரஃபி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SANGEETHAKOLAMS, #ZYMATICTHERAPHY, #THENAMMAILAKSHMANAN,



3642.கௌதம் சிட்டி l  ஜுமைரா பீச் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=DUn6EB2D14o


#கௌதம்சிட்டி, #ஜுமைராபீச், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#GOWTHAMCITY, #JUMAIRAHBEACH, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 2 டிசம்பர், 2024

மணிக்கிராமமும் சித்திரமேழியும்

 181.

2071.பூர்வீகம் - நாக நாடு


2072.அதன் பின் வலசை வந்தது காஞ்சிபுரம், பூம்புகார்,  சிதம்பரம்,  பாண்டி நாடு


2073.பர்மா ( செய்கோன் ) மலாயா. ரெங்கோனுக்குக் கொண்டு விக்கச் சென்றது. தற்போது உத்யோகம் நிமித்தம் சென்றிருக்கும் பல்வேறு வெளிநாடுகள். 


2075.மணிக்கிராமம் (mercantile guild ) 

யூ ட்யூபில் 3631 - 3640 வீடியோக்கள்.

3631.இனிக்கும் திருப்புகழ் - 124 l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/Ziqq5kjHVCY


#இனிக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,



3632.இனிக்கும் திருப்புகழ் - 125 l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/28Ilk2gWKXE


#இனிக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 29 நவம்பர், 2024

யூ ட்யூபில் 3621 - 3630 வீடியோக்கள். பிறனில் விழையாமை. தினம் ஒரு திருக்குறள்.

3621.தினம் ஒரு திருக்குறள் - 141 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=2XlTALG-bg0


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,



3622.தினம் ஒரு திருக்குறள் - 142 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Vc4a0AoEjJU


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,

சோகி சிவா சொல்வழக்கு - 13

23.

ஆத்தாடியோவ் - வெகுண்டு சொல்வது.

சுளகு - முறம் போன்று இருப்பது. முறம் விரிந்திருக்கும். சுளகு முடிவில் குவிந்திருக்கும்.

பானாக் காதுச் சட்டி - ப னா வடிவில் கைப்பிடி வைத்த சட்டி

அத்தத்தண்டி - அவ்வளவு பெரிய

தோது - திருமணத்துக்குத் தோதாகச்/சீராகக் கொடுக்கும் பணம்,நகை.

பெருவாரிப் பேரு - நிறையப் பேர்

புதன், 27 நவம்பர், 2024

தமிழ்த் திரையிசைப் பாடகர்கள் – ஒரு ஜூகல்பந்தி

தமிழ்த் திரையிசைப் பாடகர்கள் – ஒரு ஜூகல்பந்தி


மதியம் இரண்டு மணிக்கு ரேடியோவில் முகம்மட் ரஃபி கிஷோர் குமார் பாடிய ஹிந்தி பாடல்கள், மாலையில் சிலோன் ரேடியோவில் பி ஹெச் அப்துல் ஹமீதும், ஏ எஸ் ராஜாவும் விளம்பர இடைவேளைகளுக்கு நடுவில் தொகுத்தளிக்கும் தமிழ்த் திரையிசைப் பாடல்கள் எனக் கேட்டு வளர்ந்த சமூகத்தில் பிறந்தவள் நான். ஒருநாளில் ஒரு அரைமணிநேரம் ஆறேழு பாடல்கள் கேட்போம். தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் பார்ப்போம். இன்றோ நினைத்த இசையை நினைத்த போது கேட்டிடும் வசதி படைத்துள்ளோம்.

இசை என்னும் போதை மீது எல்லாப் பருவத்தினருக்கும் ஈர்ப்பு உண்டு.  நம் குழந்தை பருவத்தில் ஆடியோ ரிலீசாகி அந்தப் படம் திரைக்கு வரும் முன்பே நாம் அந்தப் பாடல்களுடன் பரிச்சயமாகி இருப்போம். சங்கீதம் பாடக் கேள்வி ஞானம் அது போதும் என ஸ்ம்யூல் ட்ராக் இசை அமைத்துத் தர அனைவருமே பாடகர்கள் பாடகிகளாகும் காலம் இது.

யூ ட்யூபில் 3611 - 3620 வீடியோக்கள்.

3611.இனிக்கும் திருப்புகழ் - 120 l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/6BhsK0v5L5o


#இனிக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,



3612.இனிக்கும் திருப்புகழ் - 121 l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/8vR_tFTdlxg


#இனிக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 25 நவம்பர், 2024

கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் மூன்றாம் பரிசு வென்ற ,”மற்றும் சில செட்டிநாட்டுப் பெண்கள்”

மகிழ்வுடன் பகிர்கிறேன். 



ஹெர் ஸ்டோரீஸ்  வெளியிட்ட எனது  ”மற்றும் சில செட்டிநாட்டுப் பெண்கள்” என்னும் சிறுகதைத் தொகுப்புக்குக் கம்பம் பாரதி  இலக்கியப் பேரவையின் மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது.

யூ ட்யூபில் 3601 -- 3610 வீடியோக்கள்.

3601.வரலெக்ஷ்மியை வரவேற்க ஒரு பாட்டு l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=VJSvGciAiq8


#வரலெக்ஷ்மி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#VARALAKSHMI, #THENAMMAILAKSHMANAN,



3602.குலம் காக்கும் கருப்பர் l  கருப்பஞ்செட்டி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/RsrETgnbr7c


#குலம்காக்கும்கருப்பர், #கருப்பஞ்செட்டி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KARUPPAR, #KARUPPANCHETTI, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 21 நவம்பர், 2024

கருப்பை நம் உயிர்ப்பை நூலின் முன்னுரை.

கருப்பை நம் உயிர்ப்பை 

எனது 27ஆவது நூலின் முன்னுரை. 


என்னுரை


"பெண் என்று பூமிதனில் பிறந்திட்டால் பெரும் பீழை இருக்குதடி தங்கமே தங்கம்" என்று பாரதியார் பாடியது பெண் உடல்நலம் குறித்துப் பேசுவதற்குப் பொருந்தும்.

"ப்யூபர்டி" என்னும் பருவமடைதலில் தொடங்கி மெனோபாஸ் வரைக்கும் ஏன் அதன் பின்னும்கூட பெண் தனது உடல் ஆரோக்கியம் பேணுவது குறித்து அறிந்து கொள்வது காலத்தின் தேவை.

யூ ட்யூபில் 3591 - 3600 வீடியோக்கள். தாலாட்டு.

3591.தெலுங்கு தாலாட்டு l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=-V6rOyFwfrc


#தாலாட்டு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THALATTU, #THENAMMAILAKSHMANAN,



3592.ஈழநாட்டுத் தாலாட்டு l தாயடிக்கக் கன்றழுமோ l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=BfUTbCdEbeQ


#தாலாட்டு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THALATTU, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 19 நவம்பர், 2024

காளையார் கோவிலும் ஹம் காமாட்சியும்

 193.


3841.சிநேகவல்லி சந்நிதி த்வஜாரோகணம்


யூ ட்யூபில் 3581 - 3590 வீடியோக்கள். ஒழுக்கமுடைமை. தினம் ஒரு திருக்குறள்.

3581.தினம் ஒரு திருக்குறள் - 131 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=okpW9RtdchY


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,



3582.தினம் ஒரு திருக்குறள் - 132 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=3f_GbboaZug


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,

சனி, 16 நவம்பர், 2024

12.திருவடித் தீர்த்தம் பெற்றுய்ந்த தொண்டரடிப்பொடியார்

12.திருவடித் தீர்த்தம் பெற்றுய்ந்த தொண்டரடிப்பொடியார்


திருப்பள்ளி எழுச்சி பாடித் திருவரங்கத் திருமாலைத் துயிலெழுப்பியவர்தான்.  திருஅரங்கனைப் போலத் திருவரங்கத்தை மட்டுமே பாடியவர்தான். ஆனால் பத்தினி ஆழ்வாரென்று போற்றப்பட்ட இவரும் வாழ்க்கையின் மாயையில் வீழ்ந்து அதன் பின் திருமகளின் கருணையால் மீண்டு எழுந்து அடியார்களின் திருவடித் தீர்த்தம் பெற்றுய்ந்தார். அரங்கனின் அடியவர்க்கெல்லாம் அடியவராய்த் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட விப்ரநாராயணர் என்னும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் கதையைப் பார்ப்போம்.

எட்டாம் நூற்றாண்டில் தஞ்சையம்பதிக்கு அருகில் உள்ள திருமண்டங்குடி என்ற ஊரில் பிறந்தவர் விப்ரநாராயணர். விஷ்ணுவைப் புகழ்ந்து பாடும் விப்ராமக்கள் என்று அழைக்கப்பட்ட பிரிவில் பிறந்ததால் இவருக்கு விப்ரநாராணயர் என்னும் பெயர் சூட்டப்பட்டது. தந்தை வேதவிசாரதரால் உரிய காலத்தில் உபநயனம் செய்விக்கப்பட்டார்.

யூ ட்யூபில் 3571 - 3580 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்.

3571.லேடீஸ் ஸ்பெஷல் l கிரிஜா ராகவன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=l9aHRXhQ2OY


#லேடீஸ்ஸ்பெஷல், #கிரிஜாராகவன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#LADIESSPECIAL, #GIRIJARAGHAVAN, #THENAMMAILAKSHMANAN,



3572.ஆறு நூல்கள் l  வேதாத்ரி மகரிஷி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=4Fee97tYPwQ


#ஆறுநூல்கள், #வேதாத்ரிமகரிஷி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SIXBOOKS, #VETHATHIRIMAHARISHI, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 15 நவம்பர், 2024

யூ ட்யூபில் 3561 - 3570 வீடியோக்கள்

3561.விநாயகர் போற்றி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=eha3MmCX5iM


#விநாயகர்போற்றி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#VINAYAGARPOTRI, #THENAMMAILAKSHMANAN,



3562.இனிக்கும் திருப்புகழ் - 109 l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=eLqWXtX7rDc


#இனிக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,

புதன், 13 நவம்பர், 2024

யூ ட்யூபில் 3551 - 3560 வீடியோக்கள். அடக்கமுடைமை. தினம் ஒரு திருக்குறள்.

3551.தினம் ஒரு திருக்குறள் - 121 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=in3yFDdW1gI


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,



3552.தினம் ஒரு திருக்குறள் - 122 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=I42sR-uRglk


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,

புத்திர தோஷம் நீங்கப் பெற்ற மாண்டவ்ய புத்திரர்கள்

புத்திர தோஷம் நீங்கப் பெற்ற மாண்டவ்ய புத்திரர்கள்


அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது என்றாள் ஔவைப் பிராட்டி. இப்பூவுலகில் ஒருவனுக்கு அப்படிப்பட்ட அரிய மனிதப் பிறப்புக் கிடைப்பதே பெற்றோரால்தான். அப்படிப்பட்ட உத்தமப் பெற்றோரை மதியாது மதிகெட்டு வாழ்ந்து பின் வீழ்ந்தவர்கள் சிலர் உண்டு. தம் பெற்றோரை மதியாதவருக்குப் பிள்ளைப் பாக்கியமும் கிட்டுவதில்லை. அப்படி வீழ்ந்த சிலர் அதிலிருந்து எப்படி யாரால் மீண்டார்கள் என்பதைப் பார்ப்போம்.

கோதாவிரி நதி பாயும் அழகிய ஆரண்யம் அது. சம்பகவனம் என்று பெயர். பெயருக்கேற்றாற்போல் சண்பக மலர்கள் பூத்துக் குலுங்கி மணம் வீசிக் கொண்டிருந்தது வனமெங்கும். அந்த ஆரண்யத்தில் ஒரு பர்ணசாலையில் கர்மாண்டன் என்பவர் வாழ்ந்து வந்தார். அவரது மகன் மாண்டவ்யன். மாண்டவ்யனின் மனைவி பெயர் ஹேமாவதி.

காலாகாலத்தில் மாண்டவ்யனுக்கும் ஹேமாவதிக்கும் ஒன்றல்ல இரண்டல்ல ஆறு புத்திரர்கள் அடுத்தடுத்துப் பிறந்தார்கள். வீதி ஹோத்ரன், யக்ஞஹேது, மதுஷ்யந்தன், வேதஹேது, பர்ணாதன், உதங்கன் என்பது அவர்களின் பெயர்கள். தாய் தந்தை இருவரும் இவர்களைப் பாராட்டிச் சீராட்டித்தான் வளர்த்தார்கள். உரிய பருவத்தில் தகுந்த கன்னிகைகளுடன் திருமணமும் செய்து வைத்தார்கள்.

செவ்வாய், 12 நவம்பர், 2024

யூ ட்யூபில் 3541 - 3550 வீடியோக்கள்

3541.கருப்பர் துதி மாலை l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=yfdJqPQwoK4


#கருப்பர்துதிமாலை, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KARUPPARTHUTHIMALAI, #THENAMMAILAKSHMANAN,



3542.இனிக்கும் திருப்புகழ் - 104 l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/xfrU-z0g3wI


#இனிக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 11 நவம்பர், 2024

பட்டறிவும் பாகம்பிரியாளும்

192. 


 3821. ட்ராகன்பர்க் கோட்டையின் நிழல்..



3822.சந்தோஷம் தரும் சவாரி போவோம் சலோ சலோ..

யூ ட்யூபில் 3531 - 3540 வீடியோக்கள்.

3531.துபாய் டு அபுதாபி l ஷேக்ஸாயத் ரோட் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=AFGnHSI5liI


#துபாய், #ஷேக்ஸாயத்ரோட், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DUBAI, #SHEIKHSAYEDROAD, #THENAMMAILAKSHMANAN,



3532.குழந்தைகள் விளையாட்டு l பகுதி 6 l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=pKzEnUsw9Q4


#குழந்தைகள்விளையாட்டு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#CHILDRENGAMES, #THENAMMAILAKSHMANAN,

சனி, 9 நவம்பர், 2024

யூ ட்யூபில் 3521 - 3530 வீடியோக்கள். சினிமா விமர்சனங்கள்.

3521.தாராள பிரபு l கிருஷ்ணா மாரிமுத்து l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=W5QoZgU7XhY


#தாராளபிரபு, #கிருஷ்ணாமாரிமுத்து, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THARALAPRABHU, #KRISHNAMARIMUTHU, #THENAMMAILAKSHMANAN,



3522.ஒரு தலை ராகம் l டி.ராஜேந்தர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=eEOQX6DKKKA


#ஒருதலைராகம், #டிராஜேந்தர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#ORUTHALAIRAGAM, #TRAJENDAR, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 8 நவம்பர், 2024

யூ ட்யூபில் 3511 - 3520 வீடியோக்கள்

3511.பெரிய கருப்பண்ணசாமி அருள்வேட்டல் l  அரசி l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=D-WltqcHa3E


#பெரியகருப்பண்ணசாமிஅருள்வேட்டல், #அரசி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PERIYAKARUPPANASAMIARULVETTAL, #ARASI #THENAMMAILAKSHMANAN,



3512.கருப்பர் துதி l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=sKNmSY_NM2M


#கருப்பர்துதி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KARUPPARTHUTHI, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 7 நவம்பர், 2024

யூ ட்யூபில் 3501 - 3510 வீடியோக்கள். நடுவு நிலைமை. தினம் ஒரு திருக்குறள்.

3501.தினம் ஒரு திருக்குறள் - 111 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=XvvMVyFeCP0


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,



3502.தினம் ஒரு திருக்குறள் - 112 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=D4QtMnOfQJc


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,

சோகி சிவா சொல்வழக்கு - 12.

21.

ரொட்டிப் பொட்டித் தகரம் - ஒரு காலத்தில் ரொட்டி/பிஸ்கட் வைக்கப் பயன்பட்ட ஒரு நீள் செவ்வக டப்பா

பெருமை பீத்தக்கலம் - அடுத்தவர்களுடன் இயல்பாக உரையாடாமல் தன்னைப் பெருமையாக எண்ணித் திரிபவர்களைக் கிண்டல் செய்வது. பீத்தல் கலத்தில், ஓட்டைக்கலத்தில் வைப்பது போல பெருமை வடிந்து விடும் என்பது.

தெம்பட்டுச்சு - தென்பட்டது, காண/உணரக் கிடைத்தது.

அடி ஆத்தி - ஆச்சரியத்தின் போதும் ஒரு புது விஷயத்தைக் கேள்விப்படும்போதும் இப்படிப்பட்ட சொலவடைகளை இருபாலாரும் உதிர்ப்பார்கள்.

திங்கள், 4 நவம்பர், 2024

இன்றும் உயிர்ப்புடன் உரையாடும் பாரா வின் கடிதம்..

 Rajaram Balakrishnan rajaram.b.krishnan@gmail.com

தேனு மக்கா,
 
நலமா? 
 
குமுதம் கவிதைகள் பிரசுரத்திற்கு வாழ்த்துகள்!..பிரசுரமான கவிதைகளை என்னை மாதிரி வயதானவர்கள் / வெளிநாட்டில் 
இருப்பவர்கள் வாசிக்கும்படி தளத்தில் பதியக் கூடாதா? 
 
இம்மினிக்கூண்டா இருக்கு தளத்தில் இருக்கும் ஃபாண்ட்ஸ். நானும் கண்ணை கூர் தீட்டி, கூர் தீட்டி ட்ரை பண்ணிப் பார்த்துட்டேன். ஜம்பம் பலிக்கலை. வயசான காலத்தில் படுத்தணுமா? :-) 
 
கொஞ்சம் போல்ட் பண்ணி தளத்தில் பதிங்க மக்கா.
 
நல்ல உயரத்திற்கு போய்ட்டாங்க எங்க தேனு மக்கா. சந்தோஷமா இருக்கு.  மீண்டும் நிறைவான வாழ்த்துகள்!
 
keep going..   

யூ ட்யூபில் 3491 - 3500 வீடியோக்கள்

3491.கண்ணாத்தாள் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Zly49EsfW48


#கண்ணாத்தாள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KANNATHAL, #THENAMMAILAKSHMANAN,



3492.இனிக்கும் திருப்புகழ் - 94 l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=sOwNsekwsUc


#இனிக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,

சனி, 2 நவம்பர், 2024

கும்மிப் பாட்டு

 கும்மிப் பாட்டு

 

கும்மியடி செட்டிநாடு முழுவதும்

சீரோங்கித் தழைத்திடக் கும்மியடி

நம்மைப் பிடித்த தீமைகள் ஓடின

நன்மை கண்டோமென்று கும்மியடி

 

படைப்புப் பள்ளயம் பூசை என்றால்

நம் பிள்ளைகளோடு வந்திடுவோம்.

நம் பாரம்பரிய விஷயங்களை

பண்பாக அன்பாகப் புகட்டிடுவோம்

யூ ட்யூபில் 3481 - 3490 வீடியோக்கள். தாலாட்டு.

3481.கன்னடத் தாலாட்டின் தமிழ் மொழிபெயர்ப்பு l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=eDwCtu0mAu4


#கன்னடத்தாலாட்டு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THALATTU, #THENAMMAILAKSHMANAN,



3482.தாலாட்டு l என் கண்ணம்மா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=qUCWDgjCbew


#தாலாட்டு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THALATTU, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 1 நவம்பர், 2024

மூடு பனி ஷோபா

 மூடு பனி  ஷோபா


என் இனிய பொன் நிலாவே, செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல், ஏதோ நினைவுகள் கனவுகள், பூவண்ணம் போல நெஞ்சம் பூபாளம் பாடும் நேரம், பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து, அடிப் பெண்ணே பொன்னூஞ்சலாடும் இளமை என்ற பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் பதின் பருவத்தில் மறைந்த எளிமையும் அழகும் நிறைந்த ஷோபா மனதுக்குள் நிழலாடுவார்.

பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றம். அறியாமையில் அதே சமயம் முதிர்ச்சியிலும் மின்னும் கண்கள். நடுவில் லேசாய் மடிந்த கவர்ச்சிகரமான உதடுகள். பாலு மகேந்திராவின் நாயகிகள் மாதிரி அலை அலையான சுருட்டைக் கூந்தல். மெல்லிய ஆனால் திண்ணியமான உருவம், கண்களைச் சுருக்குவதிலாகட்டும், உதட்டைக் குவித்துப் புன்முறுவல் செய்வதிலாகட்டும் எதையும் அலட்சியமாகக் கையாளும் சோபனையான பாவனையோடு அநாயாசமாகக் கடந்து விடும் அவரது நடிப்பு..  

யூ ட்யூபில் 3471 - 3480 வீடியோக்கள்

3471.திருவாசகம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/nahm4nVGQ4Y


#திருவாசகம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUVASAGAM, #THENAMMAILAKSHMANAN,



3472.இனிக்கும் திருப்புகழ் - 88 l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=4AdWCXYEg1Y


#இனிக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,

புதன், 30 அக்டோபர், 2024

என்னுடைய 26 ஆவது நூல் வெளியீடு

 இப்படியும் சாதிக்கலாம் என்ற என்னுடைய 26 ஆவது நூல் சென்னையில் அம்பத்தூரில் ஜூன் 29 அன்று வெளியிடப்பட்டது. 


யூ ட்யூபில் 3461 - 3470 வீடியோக்கள். செய்நன்றி அறிதல். தினம் ஒரு திருக்குறள்.

3461.தினம் ஒரு திருக்குறள் - 101 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=ZN2ZNGFegt4


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,



3462.தினம் ஒரு திருக்குறள் - 102 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Fu6779cp-wk


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,

ஞாயிறு, 27 அக்டோபர், 2024

சோகி சிவா சொல்வழக்கு - 11.

19.

பிள்ளை பிறந்தது கேட்க - குழந்தை பிறந்ததைக் கேட்க

ஆம்பிள்ளையான் பேர் இட்டுக்க - கணவனின் பெயரை வாரிசுக்கு இடுவது

அவ பேரைத்தான் இடோணும் - அவ பேரைத்தான் வைக்க வேண்டும்

பேரிட்டார்கள் - பெயரிடுதல் என்றால் பெயர் வைப்பது, பெயர் வைத்தார்கள்.

வேளார் - குலதெய்வம் கோயிலில் தெய்வத்தொண்டு புரியும் பூசாரி.

படைப்பு வீடு - சாமிக்குப் படைக்க எனத் தனியாக வீடு இருக்கும்.

பூசை வீடு - திருக்கார்த்திகைப் பூசை செய்யும் வீடு.

யூ ட்யூபில் 3451 - 3460 வீடியோக்கள்

3451.இனிக்கும் திருப்புகழ் - 82 l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=1EYD-NlJjT8


#இனிக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,



3452.ஆனந்த நடராஜர் 108 போற்றி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=ms2w8G5X-ng


#ஆனந்தநடராஜர், #108போற்றி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#ANANDANATARAJAR, #108POTRI, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 24 அக்டோபர், 2024

இளவட்டக் கல்லும் கார்த்திகைப் புதுமையும்

 191.


3801.எனது நூல்கள் பற்றி உணவுலகம் மெய்யப்பன்




3802.சாதனைப் பெண்கள் விருது



3803.இளவட்டக் கல்.. இது இருக்குமிடம் ஒரு ரெஸார்ட்!!


யூ ட்யூபில் 3441 - 3450 வீடியோக்கள்

3441.பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரும் திருமெய்யரும் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=T_2HoyQQ1zA


#பேரரசர்பெரும்பிடுகுமுத்தரையர், # திருமெய்யர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PERARASARPERUMBIDUGUMUTHARAIYAR, #THIRUMEYYAR, #THENAMMAILAKSHMANAN,



3442.துபாய் ஸ்கந்தர்சஷ்டி விழா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=-lOMc-cFfzQ


#துபாய், #கந்தர்சஷ்டிவிழா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DUBAI, #SKANDERSASHTIVIZHA, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 21 அக்டோபர், 2024

உபதேசப் புதுமையும் சமயதீட்சையும்

 180.


2061.கணபதி பூஜை – பகவத்யானம். மணமகனுக்கும் மணமகளுக்கும் புரோகிதர் சங்கல்பம் சொல்லி கணபதி பூஜை (பகவத் தியானம் செய்து) செய்வார்). அதன் பின் இருவரின் மாமக்காரர்களும் இருவருக்கும் காப்புக் கட்டுவார்கள். ஒரு சிறு வெள்ளி நாணயத்தை சிவப்புத் துணியில் முடிந்து நுனி உடையாத விரளி மஞ்சளையும் சேர்த்துக்கட்டி மணமக்களின் வலது மணிக்கட்டில் கட்டி விடுவதே காப்புக் கட்டுதல் ஆகும்.

2062. தாலி கட்டும் போது மூன்றுமுடிச்சுப் போடுதல் – விழிப்பு நிலை, தூக்க நிலை, கனவு நிலை இம்மூன்றிலும் நீயே என் மனைவி, நான் உன் கணவன் என்பதைக் கூறும் விதமாக மாங்கல்யத்தில் மூன்று முடிச்சுப் போடப்படுகின்றது.

யூ ட்யூபில் 3431 - 3440 வீடியோக்கள். தாலாட்டு

3431.வள்ளி தாலாட்டு l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=W_9Ye4Vkd_I


#வள்ளிதாலாட்டு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#VALLITHALATTU, #THENAMMAILAKSHMANAN,



3432.வள்ளி தாலாட்டு l குமரன் கிழவன் ஆனான் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Ph9aNkxXp0o


#வள்ளிதாலாட்டு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#VALLITHALATTU, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 17 அக்டோபர், 2024

புவனா

புவனா

”அடி ஒனக்கும் ரெண்டு பொண்ணு ஒம் மகளுக்கும் ரெண்டும் பொண்ணா” தம்பி கல்யாணத்துக்கு வந்திருந்த உறவினரில் ஒருவள் விருந்தைத் தின்றுவிட்டுச் சும்மா ஏன் இருப்பானேன் என்று பிருந்தா சித்தியிடம் கேட்டு வைத்தாள்.

ஏற்கனவே மனக்குறையில் இருந்த பிருந்தாவுக்கு வயிறெரிந்தது. அக்கம் பக்கம் திரும்பிப் பார்த்தவள் கண்ணில் விளையாடிக் கொண்டிருந்த ஆச்சியின் பேரன்கள் பட்டார்கள். கோபத்தோடு சாபமிட்டாள். “இவனுகள்ளாம் பெரிசானதும் பொண்ணு கொடு, பொண்ணு கொடுன்னு பொண்ணு கெடைக்காமக் கெஞ்சிக் கதறப் போறாய்ங்க” ரெண்டு மகனைப் பெற்ற பெருமிதத்தில் இருந்த புவனாவுக்கு பிருந்தா சித்தியைப் பார்க்கவே பயமாயிருந்தது. ”உங்களுக்குக் கோபம் வந்தா என் புள்ளைக்களுக்கு ஏன் சாபம் கொடுக்குறீங்க சித்தி” என்று கேட்க நினைத்து மௌனித்தாள் புவனா.

சித்தியின் வாய் முகூர்த்தமோ என்னவோ அவளின் மூத்த மகன் மீனாக்ஷி சுந்தரனுக்குத் திருமண வயது வந்தும் வரன்கள் தட்டிக் கொண்டே சென்றன. அவனோ எந்த மேட்ரிமோனியைப் பார்த்தாலும் நல்லா ஃபேஷனாக உடை உடுத்தி முடியை விரித்துப் போட்டுக் கொண்டிருந்த மணப் பெண்களை செலக்ட் செய்ய அவனது அப்பத்தாளோ,”அப்பச்சி முடிய விரிச்சுப் போட்டுக்கிட்டு இருந்தா லெச்சுமி தங்காது வீட்டுல. நல்ல பதவிசான பொண்ணாத்தான் பார்க்கணும்.”என்று எதவான பெண்களாகப் பார்க்க அவன் கண்ணில் அனைவரும் சப்பை ஃபிகராகத் தெரிந்தார்கள்.

யூ ட்யூபில் 3421 - 3430 வீடியோக்கள். நூல் பார்வைகள்.

3421.கருப்பை நம் உயிர்ப்பை l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=HdQRmS3h6i8


#கருப்பைநம்உயிர்ப்பை, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KARUPPAINAMUYIRPAI, #THENAMMAILAKSHMANAN,



3422.பல்சுவைக் கதைகள் l கீதா ப்ரஸ் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=npXi0f7S5k0


#பல்சுவைக்கதைகள், #கீதாப்ரஸ், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PALSUVAIKATHAIGAL, #GEETAPRESS, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 15 அக்டோபர், 2024

கன்னி நீராடுதலும் மாப்பிள்ளை அறிதலும்

 179.


2051.கோவிலில் பாக்கு வைத்தல் – திருமணம் பேசிக்கொண்டதும் இரு வீட்டாரும் அவரவர் நகரக் கோயில்களில் திருமணத்துக்கு மூன்று நாட்கள் முன்னதாகப் போய் பாக்கு வைக்க வேண்டும். காலை முதல் மாலைக்குள் செல்ல வேண்டும். திருமண அழைப்பிதழை எடுத்துக் கொண்டு மணமகன், மணமகள் ஆகிய இருவரின் கோவில், பிரிவு, வகை, மணமக்கள் பெயர், அவர்களின் பெற்றோரின் பெயர்கள், ஊர்கள், விலாசங்கள், கல்யாண நாள், நேரம், இடம் ஆகியவற்றைக் குறித்துக் கொண்டு பங்காளிகள் யாரேனும் ஒருவர் போய் பாக்கு வைத்துப் பதிவு செய்து அதற்குரிய காணிக்கை செலுத்தி வர வேண்டும். திருமண அழைப்பிதழ், விவரங்கள் குறித்த சிட்டை, வெற்றிலை பாக்கு ஆகியன கொண்டு செல்ல வேண்டும்.

திருமணத்தன்று முதல்நாள் இரு கோவில்களிலும் இருந்து இரு கோவில் மாலைகள் வரும். அதைப் பெண்கள் சங்கு ஊதி வாங்கி நடுவீட்டில்வைக்க வேண்டும். கொண்டு வரும் `அர்ச்சகருக்கு முறை கொடுக்க வேண்டும்.  மாப்பிள்ளை வீட்டில் அதில் ஒன்றை மாப்பிள்ளை அணிந்து கொண்டு திருப்பூட்டச் செல்ல வேண்டும். திருப்பூட்டும் போது முதன் முதலில் அந்தக் கோவில் மாலையைத்தான் மாப்பிள்ளை பெண்ணுக்கு அணிவிக்க வேண்டும்.

ஞாயிறு, 13 அக்டோபர், 2024

சோகி சிவா சொல்வழக்கு - 10.

17.

புள்ள கூட்டுதல் - குழந்தை இல்லாதவர்கள் அதிகக் குழந்தை உள்ள அதே கோவிலைச் சேர்ந்தவர்களிடம் இருந்து பிள்ளையை சுவீகாரம் செய்து கொள்வார்கள்.

ஆம்பிள்ளையான் பேர் சொல்ல - கணவனின் பேர் சொல்ல வாரிசி வேண்டும்.

வீடு விளங்கோணும் - வீடு விளங்கப் பிள்ளைகூட்ட வேண்டும்.

புள்ள விடுற ஜாதகம் - பிள்ளை விடுற ஜாதகம் என்றால் அந்தப் பையனுக்கும் ஜாதகத்தில் இன்னொரு தாய் தகப்பனுக்கு மகனாகப் போகவேண்டும் என்ற அமைப்பு இருத்தல்.

நாளப் பின்ன - பிற்காலத்தில், தன் காலத்துக்குப் பிறகு.

யூ ட்யூபில் 3411 - 3420 வீடியோக்கள்.

3411.இனிக்கும் திருப்புகழ் - 75 l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=QX7rUZvUPR0


#இனிக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,



3412.வேலங்குடிக் கருப்பர் கவசம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=BKeHXXX5z1Q


#வேலங்குடிக்கருப்பர்கவசம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#VELANGUDI, #KARUPPARKAVASAM, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 10 அக்டோபர், 2024

யூ ட்யூபில் 3401 - 3410 வீடியோக்கள். இனியவை கூறல். தினம் ஒரு திருக்குறள்.

3401.தினம் ஒரு திருக்குறள் - 91 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=-Tg7wRpruck


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,



3402.தினம் ஒரு திருக்குறள் - 92 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=DDnREkjOfIM


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,

நற்கதி அடைந்த நாககுமாரன்

 நற்கதி அடைந்த நாககுமாரன்

விரதம் நோற்பதால் ஒருவன் மறுஜென்மத்தில் அளவிடற்கரிய ஆற்றலையும் பெறற்கரிய பேறையும் அடைய முடியுமா. நாகபஞ்சமி என்றொரு விரத்தத்தை முற்பிறவியில் மேற்கொண்ட நாகதத்தன், நாகவசு இருவரும் தம் மறுபிறப்பிலும் இணைந்தனர். அதிலும் நாகதத்தன் எண்ணியது எல்லாம் அவனுக்கு வாய்த்தது. அப்படிப்பட்ட நாகதத்தன் நாககுமாரன் ஆன வரலாற்றைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

நாவலந்தீவில் பரதக்கண்டம் உள்ளது. அதில் மிகச் சிறப்பு வாய்ந்தது மகத தேசம். அங்கே கனகபுரம் என்றொரு நகரம் இருக்கிறது. அதில் குயில்கள் கூவும் சோலைகளில் தேன் சிந்தும் மலர்கள் பூத்துச் சிரிக்கும். இவ்வளவு அழகுபொலிந்த கனகபுரத்தைச் சயந்திரன் என்ற அரசன் ஆண்டு வந்தான். இவனுடைய மனைவியின் பெயர் விசால நேத்திரை. இவர்கள் இருவருக்கும் பிறந்த இளவரசன் பெயர் சீதரன்.  தன் ஆட்சியை நல்லபடி நடத்திச் செல்லச் சயந்தரனுக்கு வாய்த்த நல் அமைச்சனின் பெயர் நயந்திரன்.

செவ்வாய், 8 அக்டோபர், 2024

வாசகப் பார்வையும் ஒற்றுச் சேர்க்கையும்

 190.


3781. கல்யாணப் பலகாரம் வந்தாச்சு ❤

முறுக்கு வடை, சீப்புச்சீடை, மனகோலம்




3782.Happy to share about my 26 th book release in Ambattur magalir sanga manadu.


என்னுடைய 26 ஆவது நூல் " இப்படியும் சாதிக்கலாம் " இன்று அம்பத்தூர் மகளிர் சங்க மாநாட்டில் வெளியிடப்பட்டது. நன்றி இராம. மெய்யப்பன் சார்.

யூ ட்யூபில் 3391 - 3400 வீடியோக்கள்.

3391.இனிக்கும் திருப்புகழ் - 69 l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=3dnbSSF_SGU


#இனிக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,



3392.இனிக்கும் திருப்புகழ் - 70 l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=vdeC4pgnUxA


#இனிக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 7 அக்டோபர், 2024

மும்தாஜ் இல்லம்

 மும்தாஜ் இல்லம்

“அண்ணே சௌதில இருக்காங்க. அங்க வரச் சொல்லி லெட்டர் போட்டிருக்காங்க” பின்னால் வந்து கொண்டிருந்தான் அவன். ”இந்தா இத வாங்கிப் பாரு. உண்மையத்தான் சொல்றேன்” என ஒரு கடிதத்தை நீட்டினான். வெளிநாட்டுத் தபால்தான். கடந்த சில மாதங்களாகப் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறான். டைப்ரைட்டிங்க் இன்ஸ்டிடியூட்டின் எதிரில் இருந்த ஒரு ஜவுளிக்கடையில் அவனைப் பார்த்திருக்கிறாள். சில சமயம் கல்லாவிலும் அமர்ந்திருப்பான். கடைக்காரருக்கு உறவினர்போல என நினைத்திருந்தாள்.

மாடியில் இருந்தது அவள் டைப்ரைட்டிங் கற்றுக் கொண்டிருந்த இன்ஸ்டிடியூட். அதன் அருகிலேயே தேரடி. எனவே அதன் பக்கவாட்டு மரப் படிகளில் ஏறித்தான் மாடிக்குச் செல்ல வேண்டும். கோ ஆப் டெக்ஸின் மேல்தளம் பார்வைக்கு அகப்படும். அந்த வரிசையில் கடைசியில் இருந்தது இன்ஸ்டிடியூட். பேப்பரை டைப்ரைட்டரில் சொருகி Asdfgf ;lkjhj என டைப்ப ஆரம்பித்து இப்போது இன்வாய்ஸ், கடிதம் என்று அடிக்க ஆரம்பித்திருக்கிறாள். இன்னும் சில நாட்களில் பரிட்சை.

யூ ட்யூபில் 3381 - 3390 வீடியோக்கள்.

3381.நினைத்த காரியம் யாவும் நிறைவேற l  ஆபரணம் சேர l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/9piwabu4qng


#அம்மன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN,



3382.கலைமகள் துதி l ராமலிங்க அடிகள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/O9YETrk_3kM


#கலைமகள்துதி, #ராமலிங்கஅடிகள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KALAIMAGALTHUTHI, #RAMALINGAADIGAL, #THENAMMAILAKSHMANAN,

சனி, 5 அக்டோபர், 2024

இப்படியும் சாதிக்கலாம் நூலுக்கு வாழ்த்துக்கள்.

எனது 26 ஆவது நூலான இப்படியும் சாதிக்கலாம் என்ற நூல் அம்பத்தூர் மகளிர் சங்கமும், நகரத்தார் எழுத்தாளர் சங்கமும் இணைந்து 29.6.2024 அன்று நடத்திய விழாவில் வெளியிடப்பட்டது. அந்நூலுக்கு வாட்ஸப்பில் அனைவரும் வழங்கிய வாழ்த்துரையை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன். 



**Happy to share about my 26 th book release in Ambattur magalir sanga manadu.

யூ ட்யூபில் 3371 - 3380 வீடியோக்கள். விருந்தோம்பல். தினம் ஒரு திருக்குறள்.

3371.தினம் ஒரு திருக்குறள் - 81 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=VgSUztYyA7c


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,



3372.தினம் ஒரு திருக்குறள் - 82 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=zIz_37mNenY


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 3 அக்டோபர், 2024

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் - 20 வித கொழுக்கட்டைகள்

 20 வித கொழுக்கட்டைகள்

 


1.ஆட்டிக் கிண்டும் கொழுக்கட்டை
2.சீரகக் கொழுக்கட்டை
3.கோதுமைக் கொழுக்கட்டை
4.கருப்பட்டிக் கொழுக்கட்டை.
5.ஃப்ரூட் & நட்ஸ் மோதகம்
6.தேங்காய்ப்பால் கொழுக்கட்டை
7.வெஜ் பேணி

யூ ட்யூபில் 3361 - 3370 வீடியோக்கள். தாலாட்டு.

3361.தாலாட்டு l தென்றல் வந்து தீண்டாதா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=cbC6xm7781I


#தாலாட்டு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THALATTU, #THENAMMAILAKSHMANAN,



3362.தாலாட்டு l வா பசுவே l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=CEmJf-sHCUA


#தாலாட்டு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THALATTU, #THENAMMAILAKSHMANAN,

புதன், 2 அக்டோபர், 2024

செவ்வாய், 1 அக்டோபர், 2024

யூ ட்யூபில் 3341 - 3350 வீடியோக்கள்.

3341.ஆண்டாள் பாடல்கள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=w7Y627Pg04o


#ஆண்டாள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AANDAL, #THENAMMAILAKSHMANAN,



3342.இனிக்கும் திருப்புகழ் - 60 l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=WQq8a9ZQopc


#இனிக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 30 செப்டம்பர், 2024

பழையனூர் நீலி கதை

பழையனூர் நீலி கதை

லாலயத்துக் காளிக்கு அடங்கிய பழையனூர் நீலி என்றொரு பேயுருக் கொண்டவள் இருந்தாள். ஒரு முனிவரைச் சந்தித்ததும் அவள் உயிர்க்கொலை புரியும் ரத்த தாகமடங்கி உண்மைப் பொருளைப் பற்றி உய்ந்தாள். தன் தீவினை அடங்கி நல்வினை மேலோங்க ஜினதர்மத்தில் பற்றுக் கொண்டு அதைப் பரப்பினாள். அதைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

பாஞ்சாலத்தின் தலைநகரம் புண்டரவர்த்தனம். அதன் அரசன் கொடுத்துச் சிவந்த கரங்களை உடைய சமுத்திரசாரன். யாராலும் வெல்ல முடியாத அவனுடைய அரண்மனை வாயிலில் யானை சேனை, படை பட்டாளமெல்லாம் செல்லும் சப்தம் கடல் அலைபோல் முழங்கும். சூரியன் உள்ளே நுழைய முடியாத அளவு அகில், சந்தனப் புகைகள் மேலெழும்பி வானத்தை மறைக்கும் என்றால் அந்நகரின் சிறப்பை உணர்ந்து கொள்ளுங்கள்.

யூ ட்யூபில் 3331 - 3340 வீடியோக்கள்.

3331.இயற்கை விவசாயத்தின் தேவை குறித்து  ஆரண்யா அல்லி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=W1HZiAS_C70


#இயற்கைவிவசாயம்,  #ஆரண்யாஅல்லி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#IYARKAIVIVASAYAM, #AARANYAALLI, #THENAMMAILAKSHMANAN,



3332.நூற்றாண்டும் நாற்பதாண்டும் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=sAZPmWfNj9M


#நூற்றாண்டும்நாற்பதாண்டும், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NOOTRANDUMNARPATHANDUM, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 27 செப்டம்பர், 2024

சோகி சிவா சொல்வழக்கு - 9.

 15.

ஆத்து ஆத்துப் போய் - அழுது அழுது மனம் இற்றுப் போய்

தூக்குச் சட்டி - சொருகு சட்டி, தூக்குப் பாத்திரம்.

கசாப்புக் கொழம்பு - மட்டன் குழம்பு.

மொளக்கமாத்துக் குச்சி - விளக்குமாற்றுக் குச்சி, பெருக்குமாறு, துடைப்பக் குச்சி.

துண்ணூத்து மடல் - திருநீற்று மடல், விபூதி கொட்டிவைக்கும் மரத்தாலான மடல்.

அரச விட்டு - ஆண்பிள்ளையை அரசு என்பார்கள்.

யூ ட்யூபில் 3321 - 3330 வீடியோக்கள்.

3321.இனிக்கும் திருப்புகழ் - 54 l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/Ig9_zrluE2Q


#இனிக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,



3322.இனிக்கும் திருப்புகழ் - 56 l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/3sxn4R_zC_A


#இனிக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,

புதன், 25 செப்டம்பர், 2024

யூ ட்யூபில் 3311 - 3320 வீடியோக்கள். அன்புடைமை. தினம் ஒரு திருக்குறள்.

3311.தினம் ஒரு திருக்குறள் - 71 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=AFOQh14yCHE


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,



3312.தினம் ஒரு திருக்குறள் - 72 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=tGqmCv_FJ-8


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,

மாண்புமிகு ஆச்சி அலமேலு

மாண்புமிகு ஆச்சி அலமேலு 

திருமதி அலமேலு அவர்கள் ஆறாவயல் மஞ்சி வீட்டில் பிறந்தவர்கள். தந்தை வேதாசலம் செட்டியார். தாயார் கனகாம்பாள் ஆச்சி. இவர்களுடன் கூடப்பிறந்தவர்கள் எட்டுப் பேர். ஐந்து சகோதரிகள், மூன்று சகோதரர்கள். இவரைத் திருமணம் செய்து கொடுத்த ஊர் தேவகோட்டை. இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இவர் அம்பத்தூரில் வசித்து வருகிறார். தமிழாசிரியையாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுப் பட்டிமன்றங்களிலும் உரையாற்றி வருகிறார். பல்வேறு விருதுகள் பெற்ற இவர் சமீபத்தில் மாண்புமிகு ஆச்சி விருது வாங்கினார். இவரின் இளமைப்பருவம், ஆசிரியப்பணி, இலக்கியப் பணி குறித்துக் கேட்டபோது அவர் கூறியவற்றை அப்படியே தருகிறேன்.

”தேனினும் இனிய செந்தமிழ்” மொழியைக் கற்றதனால் பல பெருமைகளைப் பெற்ற அடியேன் பிறந்தது ஆறாவயல் என்ற சண்முகநாதபுரத்தில். வேதாசலம் செட்டியார், கனகாம்பாள் ஆச்சியின் மகளாகப் பிறந்தேன். நாங்கள் ஒன்பது பேர் உடன்பிறப்புக்கள். ஆண்மக்கள் மூவர். பெண்மக்கள் அறுவர். பெற்ற மக்கள் அனைவரையும் சிறந்த முறையில் நன்கு வளர்த்து ஆளாக்கி உரிய வயதில் திருமணமும் செய்து வைத்தனர் பெற்றோர்.

நான் பள்ளிக்கல்வி பயின்றது ஆறாவயலில். உயர்நிலைக் கல்வி காரைக்குடி மீனாக்ஷி பெண்கள் பள்ளியில் பயின்றேன். பின் காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் நான்காண்டுகள் பயின்று புலவர் பட்டம் பெற்றேன். அதன் பின் சென்னை சீமாட்டி வெலிங்டன் பயிற்சிக் கல்லூரியில் தமிழாசிரியர் பயிற்சி படித்து முடித்தேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...