Rajaram Balakrishnan rajaram.b.krishnan@gmail.com
தேனு மக்கா,
நலமா?
குமுதம் கவிதைகள் பிரசுரத்திற் கு வாழ்த்துகள்!..பிரசுரமான கவி தைகளை என்னை மாதிரி வயதானவர்கள் / வெளிநாட்டில்
இருப்பவர்கள் வாசிக்கும்படி தளத்தில் பதியக் கூடாதா?
இம்மினிக்கூண்டா இருக்கு தளத்தில் இருக்கும் ஃபாண்ட்ஸ். நானும் கண்ணை கூர் தீட்டி, கூர் தீட்டி ட்ரை பண்ணிப் பார்த்துட்டேன். ஜம்பம் பலிக்கலை. வயசான காலத்தில் படுத்தணுமா? :-)
கொஞ்சம் போல்ட் பண்ணி தளத்தில் பதிங்க மக்கா.
நல்ல உயரத்திற்கு போய்ட்டாங்க எங்க தேனு மக்கா. சந்தோஷமா இருக்கு. மீண்டும் நிறைவான வாழ்த்துகள்!
| 3 Apr 2011, 09:31 | ||
நன்றி மக்கா. உங்க உயரத்தை நான் எட்டணும் மக்கா.. அதுதான் என் ஆசை..:))
நாளைக்கு போடுறேன் பாரா... மகள் நலமா.. மாப்பிள்ளை எப்பிடி இருக்கார்..
நீங்க எப்பிடி இருக்கீங்க.. தங்கச்சி நலமா.
ரொம்ப நாள் கழிச்சு உங்க கடிதம் பார்த்ததும் மளுக்குன்னு கொஞ்சம் கண்ணீர் கூட எட்டிப் பார்க்குது..
எல்லாரும் பிஸியாயிட்டோம் பா..இது ஒரு மாதிரி பிரிவு போல இருக்கு..:(((((
அன்புடன் தேனு
******************************
மஹா நல்லாருக்கா தேனு. அம்மாவாகப் போறா. (அவள் அம்மாவாகப் போறது சந்தோஷமா இருக்கு. நான் தாத்தாவாகப் போவது பயமா இருக்கு) :-) ஐந்து மாதங்கள்!
பேத்தி ஆசை எனக்கு. பார்க்கலாம் என்ன செய்கிறாள் மஹாவென.மரு மகன் சிங்கை திரும்பிவிட்டார். சார், குழந்தைகள் நலம்தானே? அம்மா எப்படி இருக்காங்க?
//எல்லாரும் பிஸியாயிட்டோம் பா..இது ஒரு மாதிரி பிரிவு போல இருக்கு//
வாஸ்தவம்தான். சற்று திடுக்கிட்டுத்தான் வருது. சரி..எனக்கு தேனு மக்காவைத் தெரியும் என்று என் நண்பர்களிடம் சொல்லும் போது இல்லை என்றா சொல்லப் போகிறீர்கள்? இவ்வளவு போதும்தான்.
எங்கு பறந்தால் என்ன? மண்ணிலிருந்து உந்திய கால்கள்தானே!..
சரி மக்கா. எழுதிக் கொண்டிருங்கள். எந்த முக்கிலாவது சந்தித்து விடுவோம். சரியா?
-நிறைய அன்புடன்,
| 4 Apr 2011, 12:01 | ||
ஹை நல்ல சேதி..
அப்ப நாங்க எல்லாம் பாட்டியாக போறோம்.. இது இன்னொரு பரிணாமம்..:)
பேரன் பேத்திகளின் உலகில் இன்னும் சின்னப் பிள்ளையாகி விடலாம் மக்கா நாம்..:))
-- பேரன்பும் பிரியங்களும் பாரா.. எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன நீங்கள் இப்பூவுலகிலிருந்து மறைந்து. ஆனாலும் எங்கள் நினைவில் உயிர்ப்புடன் தான் இருக்குறீங்க பாரா..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)