எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 4 டிசம்பர், 2024

திரு வி என் சிடி அவர்களின் 12 ஆவது நினைவு நாளில் அஞ்சலிக் கவிதை

 கருவிலே திருவோடு பிறந்தார்.
கமலமெனும் திருவைக் கைப்பிடித்தார்.

மீனாக்ஷி திருப்பார்வை பட்டுத்
தக்கவர் தக்காராய் ஆனார்.

தனவணிகன் நிறுவியவரென அறிவேன்.
தமிழ்கூறும் நல்லுலகுக்கு இரு நூல்கள் ஈந்த நற்றமிழர்.

கமலாவின் அதிபதியாம் இவரும்
திரையிலும் தனவணிகராய்த் தோற்றம்.

முக்கனி மூன்றென இவரும்
முத்துக்கள் போல் மகன்களைப் பெற்றார்.

ஊர்நலம் காத்ததிவர் பரம்பரை.
எதிலும் உயர்நோக்கம் கொண்டதிவர் பார்வை.

தலைமைகள் அனைவரும் நெருக்கம்.
எளியோரை மதிப்பதும் இவர் உயர்குடிப் பழக்கம்.

நேரிடையாய் அறியேன் எனினும்
தனவணிகனில் எழுதும் நற்பேறும் தந்தார்.

இவர்போல் ஒரு மனிதர் உண்டோ
என்று பார் போற்ற வாழ்ந்து மறைந்தார்.

நம் சமூகம் உயர்வடைய வேண்டும்
இவர் பாதமலர் தொழுது பின்பற்றி நடப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...