15.
ஆத்து ஆத்துப் போய் - அழுது அழுது மனம் இற்றுப் போய்
தூக்குச் சட்டி - சொருகு சட்டி, தூக்குப் பாத்திரம்.
கசாப்புக் கொழம்பு - மட்டன் குழம்பு.
மொளக்கமாத்துக் குச்சி - விளக்குமாற்றுக் குச்சி, பெருக்குமாறு,
துடைப்பக் குச்சி.
துண்ணூத்து மடல் - திருநீற்று மடல், விபூதி கொட்டிவைக்கும்
மரத்தாலான மடல்.
அரச விட்டு - ஆண்பிள்ளையை அரசு என்பார்கள்.
16.
ஒக்கிட - ரிப்பேர் செய்ய ,பழுது நீக்க, சரி செய்ய., மராமத்து
செய்தல்
காரை பூசுதல் - அந்தக்காலத்தில் முட்டை வெண்கரு, கருப்பட்டி,
சிப்பி எல்லாம் சேர்த்து அரைத்துச் சுவர் பூசுவார்கள்.
மராமத்து - ரிப்பேர் செய்து பராமரித்தல்
ஈவுச்சுக்குவோம் - பிரிச்சுக்குவோம். செலவைப் பங்கிட்டுக்
கொள்வோம்.
பூச்சி பொட்டுக்கள் - வண்டு தேனீ குளவி பாம்பு பூரான் போன்ற பூச்சிகள்
நடையன் - செருப்பு
முழுக்குத் துணி - தீட்டுக் காலங்களில் உடுத்தி இருக்கும்
துணி.
சுண்டக் கொழம்பு - சுண்ட வைத்த பழங்குழம்பு.
குடிவண்ணார் கூலி - வருடா வருடம் சலவைத்தொழிலாளிகளுக்கு வழங்கும்
ஆண்டுக் கூலி.
தீட்டுத் துணி - இரத்தப் போக்கின் போது பெண்கள் பயன்படுத்தும்
துணி.
தேங்கொழல் - தேன் குழல், முறுக்குப் போல சுடும் பலகாரம்.
துத்தநாகத் தகரம் - சிங்க் எனப்படும் மூடி போட்ட தாமிரத்
தகர டின்.
ஒறை ஊத்திப்பிட்டு - தயிராக உறை ஊற்றுதல்.
மேரி ரொட்டி - மேரி பிஸ்கட்
மே வீடு - மாடி, மேல் வீடு, மச்சு,
டைவர் - ட்ரைவர்.
விபூதி பூசிக் கும்பிடுதல் - சாதம் வடித்தவுடன் நிமிர்த்தி
வைத்து விபூதியைக் குழைத்து மூன்று பக்கமும் பூசி அன்னத்தை சிவனாக வணங்குதல் மரபு.
கட்டுத்துறை - மாடு கன்னுகள் கட்டிக் கிடக்கும் இடம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)